நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேசன் (என்.பி.சி.சி.,) நிறுவனத்தில், இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: இன்ஜினியர் பிரிவில் சிவில் 80, எலக்ட்ரிக்கல் 20 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
ஊதியம்: மாதம் ரூ. 42,500.
தேர்ச்சி முறை: குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். பின் விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
General Manager (HRM),
NBCC (I) Limited, NBCC Bhawan, 2nd Floor,
Corporate Office, Near Lodhi Hotel,
Lodhi Road, NewDelhi-110003
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 15.12.2020
விபரங்களுக்கு: https://nbccindia.com/pdfData/jobs/Advt%20No.04%202020%20Engineer%20Civil%20andEngineer%20Electrical.pdf