மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையின் கீழ் செயல்படும் கோவையில் உள்ள ஐ.எப்.ஜி.டி.பி., நிறுவனத்தில் பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: ஸ்டெனோகிராபர் 1, வன காவலர் 2, டெக்னீசியன் 3 என மொத்தம் ஆறு இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டெக்னீசியன் பதவிக்கு ஐ.டி.ஐ., மற்ற இரண்டு பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஸ்டெனோ பதவிக்கு நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் வேண்டும்.
வயது: 30.11.2020 அடிப்படையில் டெக்னீசியன் பதவிக்கு 18 - 30, மற்ற பதவிகளுக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: IFGTB, Forest Campus, cowly brown road, R.S.Puram, Coimbatore - 641002
விண்ணப்பக்கட்டணம் ரூ. 300. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 30.11.2020.
விபரங்களுக்கு: http://ifgtbenvis.in/about.php?type_id=4