தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
கொள்ளு - 1 கப்
புளித்த தயிர் - சிறிதளவு
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளு தானியத்தை, ஆறு மணி நேரம் நீரில் ஊற வைத்து மாவாக்கவும். அதில், தயிர், இட்லி மாவு, உப்பு கலக்கவும். பின், இட்லி தட்டில் ஊற்றி அவிக்கவும்.
சத்து மிக்க, 'கொள்ளு இட்லி' தயார். கொத்துமல்லி கீரை சட்டினி தொட்டு சாப்பிடலாம். சுவை அபாரமாக இருக்கும். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.
- பொன் ஜானகி, திருப்பூர்.
தொடர்புக்கு: 94426 31781