இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2020
00:00

புதுமை முயற்சி!
எங்கள் ஊரில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர், புதுமையான முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள், அவர்களின் குடும்பத்திலிருந்து, பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் பெண்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய, 'வாட்ஸ் ஆப்' குழுவை துவக்கியுள்ளனர்.
படிக்கும் இடத்திலும், பணி இடங்களிலும், ஆண்களால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி, வெட்கப்படாமல் வெளிப்படையாக, அக்குழுவில் பகிர்ந்து கொள்கின்றனர்.
குழுவில் இணைந்திருக்கும் மன நல ஆலோசகர், மாதர் சங்க தலைவி மற்றும் காவல்துறை பெண் அதிகாரி மூலம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை கற்றுக் கொள்கின்றனர்.
வரம்பு மீறி, தொல்லை தருபவர்கள் மீது, தயக்கமின்றி புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கவும் அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால், ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பு உணர்வுடன் நிம்மதியாக இருக்கின்றனர்.
தோழியரே... உங்கள் ஊரிலும், இப்படியொரு குழுவை உருவாக்கி, 'வாட்ஸ் ஆப்'பை பயனுள்ளதாக மாற்றி, பெண்களுக்கு உதவலாமே!
ஆர். பிரேமா, மதுரை.

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு...
'கொரோனா' தொற்று பரவிக் கொண்டிருந்த, ஊரடங்கு காலத்தில், பொழுது போக்குக்காக நாம் கண்டு ரசித்த, 'ப்ராங்க் வீடியோ' எனப்படும், குறும்பு வீடியோக்கள், இப்போது பெரும் தலைவலியாக மாறி வருகிறது.
'டிவி' சேனலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த குறும்பு வீடியோக்கள், இப்போது,
'யூ டியூப்' சேனல்களில் அதிக அளவில் பெருகியுள்ளது.
சின்ன சின்ன கேலி மற்றும் குறும்புகள் என, நகைச்சுவையோடு வந்த இவ்வகை வீடியோக்கள், இப்போது, ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம், 'ஐ லவ் யூ' சொல்லி அதிர வைப்பது; முன்பின் அறியாதவரின் வீட்டுக்குள் நுழைந்து, 'உன் பொண்ணை எனக்கு தான் கட்டி வைக்கணும்' என வெறுப்பேற்றி, அவர்களது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வது...
அறிமுகம் இல்லாத பெண்களிடம், அதிக உரிமை எடுத்து, கையைத் தொட்டுப் பேசி, அவர்களை நிலைகுலையச் செய்து அழ வைப்பது போன்றவை, மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது.
அதிலும், சமீபத்தில் நான் கண்ட வீடியோவில், நடு ரோட்டில் இரு இளைஞர்களுக்குள் துவங்கும் சண்டையானது முற்றி, துப்பாக்கியை எடுத்து ஒருவரையொருவர் சுட்டுக் கொல்வது போல உள்ளது.
இந்த வீடியோவில், துப்பாக்கி குண்டு வெடிப்பதை, 'ப்ளுடூத் ஸ்பீக்கர்' மூலம், அதிக ஒலியுடன், நிஜ துப்பாக்கி வெடிப்பது போல செய்திருப்பதால், அருகில் நிற்போர், பதறியடித்து ஓடுவதை காண முடிந்தது. பயந்த சுபாவமுள்ளவர்களோ, இதய பலகீனமுள்ளவர்களோ அருகில் இருந்தால், நிச்சயம் பாதிப்படைவர்.
இதுபோன்ற வீடியோக்களை எடுப்பதால், பலர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, வழியில், யாரும் அடிபட்டுக் கிடந்தால் கூட, 'இதுவும், 'ப்ராங்க்'காக இருக்குமோ, நாமும் ஏமாந்து அவமானப்பட்டு விடுவோமோ...' என, உதவ பயந்து, விலகி விடுகின்றனர்.
எனவே, காமெடி என்ற பெயரில், தனி நபர் சுதந்திரத்தில், அத்துமீறி மூக்கை நுழைக்கும் இதுபோன்ற குறும்பு வீடியோக்களை, அரசு, உடனடியாக தடை செய்ய வேண்டும்.
ப. ராஜகோபால், மன்னார்குடி.

இவர்களையும் அழைத்து போங்க...
நண்பர் ஒருவரின் மகன், தனியார் பள்ளியில் படித்து வருகிறான். பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, இரண்டு நாள் கல்வி சுற்றுலாவுக்கு வழியனுப்பி வைக்க, நண்பருடன் நானும் சென்றிருந்தேன். 50 மாணவர்களுடன், ஐந்து ஆசிரியர்களும் சுற்றுலா சென்றனர்.
அங்கு, இரண்டு இளைஞர்கள் வித்தியாசமான உடையில், பெரிய லக்கேஜுடன் காணப்பட்டனர்.
பேரிடர்கால மீட்பு படையினர் அல்லது பேரிடர் மீட்பு பணி பயிற்சி பெற்றவர்கள் என்பதை உணர்த்தியது, அவர்களது தோற்றம்.
அவ்விருவர் பற்றியும், கல்வி சுற்றுலா ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டேன்.
'இவ்விருவரும், நீங்கள் நினைத்தது போல, மீட்பு படையை சேர்ந்தவர்கள் தான். மலைப் பகுதி மற்றும் நீர் நிலை பகுதிக்கு செல்லும்போது, ஆபத்து ஏற்பட்டால், காப்பாற்றி விடுவர்; முதல் உதவியும் செய்வர். இரண்டு நாட்களுக்கான ஊதியம் வழங்குவோம்...' என்றார், ஒருங்கிணைப்பாளர்.
மாணவ - மாணவியரை சுற்றுலா அழைத்து செல்லும்போது, பாதுகாப்பு கருதி, பள்ளி, கல்லுாரி நிர்வாகம், மீட்பு படை பயிற்சி பெற்றவர்களையும் உடன் அழைத்துச் செல்ல ஆர்வம் காட்ட வேண்டும். சுற்றுலா விபத்துகள், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.
இவர்களை அழைத்துச் செல்வது செலவு என, கருதக்கூடாது; முன்னெச்சரிக்கை நடவடிக்கையே.
கல்வி நிறுவனங்கள், இதை கவனத்தில் கொள்ளலாமே!
எஸ். ராமு, திண்டுக்கல்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
24-நவ-202015:54:34 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ கல்விநிறுவனங்களுக்கு நல்ல அறிவுரை, ஆனால் நிச்சயமாக ஆவணங்களை சரிபார்த்து பேரிடர் மீட்பாளர்களை கூட்டிச்செல்லலாம், ஒரு பள்ளியில் இதுபோன்ற ஒரு பயிற்ச்சி நிகழ்வில் ஒரு மாணவயின் மரணமே நிகழந்துவிட்டது, எனவே அதிலும் கவனம் தேவை,
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
24-நவ-202010:56:16 IST Report Abuse
Manian ப. ராஜகோபால்: அரசியல் சட்டப்படி இதை தடுக்க முடியாது. கத்தியால் கொலையும் செய்ய முடியும், காய் கறிகள் வெட்ட முடியும், ஸ்க்ரூ டிரைவராகவும் பயன் படும். அது உபயோகிப்போறைப் பொறுத்ததே. பெற்றோ்களின் வழி காட்டல், உடனடி தண்டனை ரூ ஆயிரம் -ஓ, மாமூல் ரூ 100லேயே கேசு முடியுமே என்பது சரிதான் - யோசிக்க வேண்டியது உள்ளது. ஆம்புலன்சுக்கு யார் வழி விடுகிறார்கள்? “..தனி நபர் சுதந்திரத்தில், அத்துமீறி மூக்கை நுழைக்கும் இதுபோன்ற குறும்பு வீடியோக்களை” , ஆதரிபப்பதாக எண்ண வேண்டாம்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
24-நவ-202010:43:33 IST Report Abuse
Manian எஸ். ராமு, திண்டுக்கல்: எல்லோருக்குமே முதல் உதவி சிகித்சை பயிர்ச்சி தேவை. ஒரு சுருக்கு பையில் 250 மிகி 2 ஆஸ்பிரின் -மாரடைப்பை தணிக்க, 5 பிளாஸ்திரி, ஒரு சிறு கண்டு காஃஸ், ஒஉ சின்ன டியூப் ஆண்டி செப்டிக் ஆயின்ட்மெணெ்டு,ஈறம் புகாத காகித தீக்குச்சி புத்தகம், ரீஃப் நாட், ஷீட் பெண்ட்,க்ளவ் கிச் போன்ற கட்டு முறைடு முறைக்களை கற்க வேண்டும். 5-ம் வகுப்பில் சிவிக்ஸ் கிளாசில் கற்றது பல தடவை பயன் தந்துள்ளது. நீச்சலும் தெரிய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X