நாள் தவறாம நான் கூலி வேலைக்கு போனாத்தான், அரசுப்பள்ளியில 5வது வகுப்பு படிக்கிற என் மகனோட பசியாத்த முடியும்! இந்த சூழல்ல விதவை உதவித்தொகை கிடைச்சா உதவியா இருக்குமேன்னு, எங்க கிராம நிர்வாக அலுவலர்கிட்டே மனு கொடுத்துட்டு அலையுறேன்... இன்னும் என் கோரிக்கை நிறைவேறலை! நவம்பர் 21, 2019; ஆடுகளை மேய்ச்சுட்டு வீடு திரும்புறப்போ, அரியலுார் - தஞ்சாவூர் சாலையில தறிகெட்டு வந்த கார் என் கணவரை பலி வாங்கிடுச்சு. அந்த விபத்துல அவரோட சேர்த்து என் உறவுக்கார பெண்ணும், 20 ஆட்டுக்குட்டிகளும் பலி! சம்பவ இடத்துக்கு வந்த உயரதிகாரிகள், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'னு வழக்கம் போல பேசிட்டு போயிட்டாங்க. 'உயிர்ப்பலி ஏற்படுத்தின வாகனத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லை'ன்னு சொல்றாங்க; வழக்குப் பதிவு செஞ்ச கீழப்பழுவூர் காவல்துறையினர் விசாரணையில நல்ல தீர்வு கிடைக்கலை! அய்யா... 5 வயசுல அப்பாவை இழந்தவ நான்; வயசான அம்மா இப்போ படுக்கையில கிடக்குறாங்க! 'அப்பா இனி வர மாட்டாராம்மா'ன்னு கேட்குற என் மகனுக்கு என்னால பதில் சொல்ல முடியலை! 'பசியாலேயே உயிர் போயிருமோ'ன்னு பயமாயிருக்கு; அப்படி நடக்குறதுக்குள்ளேயாவது எங்களுக்கு ஒரு வழி காட்டுவீங்களா? - கணவரின் மரணத்திற்கு நிவாரணமும், விதவை உதவித்தொகையும் கேட்டு போராடும் ஜெயலட்சுமி, சாத்தமங்கலம், அரியலுார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.