ரவுத்திர வீணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2020
00:00

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

நாள் தவறாம நான் கூலி வேலைக்கு போனாத்தான், அரசுப்பள்ளியில 5வது வகுப்பு படிக்கிற என் மகனோட பசியாத்த முடியும்! இந்த சூழல்ல விதவை உதவித்தொகை கிடைச்சா உதவியா இருக்குமேன்னு, எங்க கிராம நிர்வாக அலுவலர்கிட்டே மனு கொடுத்துட்டு அலையுறேன்... இன்னும் என் கோரிக்கை நிறைவேறலை!
நவம்பர் 21, 2019;
ஆடுகளை மேய்ச்சுட்டு வீடு திரும்புறப்போ, அரியலுார் - தஞ்சாவூர் சாலையில தறிகெட்டு வந்த கார் என் கணவரை பலி வாங்கிடுச்சு. அந்த விபத்துல அவரோட சேர்த்து என் உறவுக்கார பெண்ணும், 20 ஆட்டுக்குட்டிகளும் பலி!
சம்பவ இடத்துக்கு வந்த உயரதிகாரிகள், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'னு வழக்கம் போல பேசிட்டு போயிட்டாங்க. 'உயிர்ப்பலி ஏற்படுத்தின வாகனத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லை'ன்னு சொல்றாங்க; வழக்குப் பதிவு செஞ்ச கீழப்பழுவூர் காவல்துறையினர் விசாரணையில நல்ல தீர்வு கிடைக்கலை!
அய்யா... 5 வயசுல அப்பாவை இழந்தவ நான்; வயசான அம்மா இப்போ படுக்கையில கிடக்குறாங்க! 'அப்பா இனி வர மாட்டாராம்மா'ன்னு கேட்குற என் மகனுக்கு என்னால பதில் சொல்ல முடியலை!
'பசியாலேயே உயிர் போயிருமோ'ன்னு பயமாயிருக்கு; அப்படி நடக்குறதுக்குள்ளேயாவது எங்களுக்கு ஒரு வழி காட்டுவீங்களா?
- கணவரின் மரணத்திற்கு நிவாரணமும், விதவை உதவித்தொகையும் கேட்டு போராடும் ஜெயலட்சுமி, சாத்தமங்கலம், அரியலுார்.

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Nagercoll,இந்தியா
25-நவ-202007:54:11 IST Report Abuse
Sundar Please share her contact and account details. We can also support along with government.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X