மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள இந்தியன் செக்கியூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: வெல்பர் ஆபிசர் 1, சூப்பர்வைசர் 40 (டெக்னிக்கல் ஆப்பரேசன் 8, டெக்னிக்கல் கன்ட்ரோல் 7, டெக்னிக்கல் ஸ்டூடியோ 2, மெக்கானிக்கல் & ஏ.சி., 9, எலக்ட்ரிக்கல் 8, டிராக் அண்டு டிரேடு சிஸ்டம் 2, எலக்ட்ரானிக்ஸ் 2, சிவில் 2) ஜூனியர் டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) 2 என மொத்தம் 43 இடங்கள் உள்ளன.
வயது: 21.12.2020 அடிப்படையில் ஜூனியர் டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு 28, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
கல்வித்தகுதி: சூப்பர்வைசர் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். ஜூனியர் டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 200.
கடைசிநாள்: 21.12.2020.
விபரங்களுக்கு: https://ispnasik.spmcil.com/UploadDocument/Detail%20Advt.%20-20.11.2020.6947e89c-0302-4126-8ab1-cbe97266d394.pdf