கவிதைசோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2020
00:00

மதம் ஏறிய ஜாதி!

உன்னிலும் என்னிலும்
ஓடுவது ஒரே ரத்தம்
மறுப்பதற்கு மனங்கள் உண்டா?

விண்ணிலும், மண்ணிலும்
கேட்பது நம் ஒரே சத்தம்
இல்லையென்று சொல்ல
இதயங்கள் உண்டா?

அன்னையின் பாலில் ஏது ஜாதி சாயம்
ஆண்டவன் தோளில்
இல்லை அதிகார வர்க்கம்!

அன்றாடம் உதிக்கும்
ஆதவனுக்கு ஆணவம் இல்லை
ஆகாயம் உலவும்
நிலவுக்கு அகந்தை இல்லை!

பள்ளத்தில் புயலாகவும்
சிகரத்தில் தென்றலாகவும்
பாகுபாடு பார்ப்பதில்லை காற்று!

அருவியில் ஒரு சுவையென்றும்
ஆற்று நீரில் ஒரு சுவையென்றும்
தரம் பார்த்து தாகம்
தீர்ப்பதில்லை தண்ணீர்!

பசி அடக்கும் சாதத்திற்கு
ஜாதி பெயர்கள் தெரிவதில்லை
வாசம் தரும் மலர்கள்
மத உறவுகள் அறிவதில்லை!

படித்தும் பட்டம் பெற்றும்
பாழுங்கிணற்றில் விழும் மானிடனே
பகுத்தறிந்து பார்!

மூட்டை கட்டிய உந்தன்
மூளையில் தான் மொத்த இருளும்
அறிவு சுடரேற்றி விலக்கு
அத்தனை ஆணவத்தையும்!

ஒரு தாய் மக்கள் நாமெல்லாம்
உதவாக்கரை ஆவதா
ஜாதி மதம் பிடித்து சகலத்துக்கும்
சண்டையிட்டு சாவதா!

எவரேனும் ஏளனம் செய்யுமுன்னே
ஓரணியில் திரளுவோம் நாம்
ஏற்றத் தாழ்வு இனி இல்லையென்று
இறைவனடி பறை சாற்றுவோம் நாம்!

சமரசம் தான் சந்தோஷமென்று
பரவசமாய் பாடிடுவோம்
பாரினில் இனி நாம் என்றென்றும்!

க. அழகர்சாமி, கொச்சி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
08-டிச-202015:13:32 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI சமரசமாய் பாடி ஆட சம்மதம் . எங்களுக்கு எம்மதமும் சம்மதம் . ஆனால் ஆதாயம் தேடும் அகங்காரம் பிடித்த மதம் பிடித்த மனிதர்களை மாக்கள் என்றே கூறவேண்டும் . அவர்களை மாற்றமுடியாது .
Rate this:
Cancel
Vai Sar - nairobi,கென்யா
29-நவ-202001:53:25 IST Report Abuse
Vai Sar மதத்தை முழுமையாக உணர்ந்தவன், மனிதத்தை விதைக்கிறான். அரைகுறை அறிவு ஆபத்து , என்பது போல், மதத்தை அரைகுறையாக உணர்ந்தவன், அவன் போக்கில் அதை வளைத்து தனது உணர்வை அதில் ஏற்றி, விஷத் தத்துவத்தை பரப்புகிறான். மயங்குபவர்கள் மதி இழக்கிறார்கள்.
Rate this:
Manian - Chennai,ஈரான்
30-நவ-202013:48:08 IST Report Abuse
Manianமதம் என்பது நாளைக்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை வர மனிதன் கண்டுபிடித்த கற்பனையே . நம்பிக்கை என்பதே ஒரு கற்பனை தானே அன்பு என்பதே மதம், மற்றவை மத வெறி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X