மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு, சில நேரங்களில் வித்தியாசமாக மட்டுமின்றி, விபரீதமான யோசனைகளும் தோன்றும். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மெர்சிடிஸ் நகரில் வசிக்கும், கதே கன்னிங்காம், 38, என்ற பெண், அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இயற்கை மீது அளவு கடந்த ஆர்வம் உள்ள இந்த பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் கணவரையும், இரண்டு குழந்தைகளையும் கை விட்டு, அங்குள்ள பூங்காவில் இருக்கும் ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டார். வாரத்துக்கு மூன்று முறையாவது இந்த பூங்காவுக்குச் செல்லும் அந்த பெண், மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து, அதனுடன் நீண்ட நேரம் கொஞ்சி கொஞ்சி பேசுகிறார். 'இந்த பெண்ணுக்கு மனநலம் பாதித்து விட்டது...' என, மற்றவர்கள் கூறினாலும், 'என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு, இந்த மரத்தை திருமணம் செய்தது தான்...' என, கண்கள் மின்னலடிக்க கூறுகிறார், கதே கன்னிங்காம்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
கோயில்களில் சிலைகளிடமும் இப்படி பேசுகிறார்களே பைத்தியமா ? யாருடைய அறிவுரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை இந்த பெண்ணுக்கு . தனி நபர் விருப்பம் , இதனால் யாருக்கும் தொல்லை இல்லையே குளிக்கும் போது , சமைக்கும் போது பாடுபவர்களை கண்டு இது ஓவர் என்று யாரும் சொன்னதாக தெரியவில்லையே...
மரம், செடி, கொடிகளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று விஞ்ஞானம் காட்டுகிறது. முன் பின் தெரியா மரம் வெட்டிகள்(டாக்டரு ராமதாசு உள்பட) வந்தால் மரம், செடி, கொடிகள் பயந்து நடுங்குவதை கண்டுள்ளார்கள். ஆகவே, கவாத்து செய்யும் முன், மரத்தை தடவி, நான் உன்னை கொல்ல வரவில்லை. உன் கிளை இலைகளுக்கு சூரிய வெளிச்சம் தந்து வளரச் செய்ய வேண்டும் என்றுதான் கவாத்து செய்கிறேன். என்னை மன்னித்துக் கொள் என்று சொல்ல வேண்டுமாம். முருங்கை, கருவேப்பிலையை இப்படி தடவி பேசின பின்தான் கிள்ள வேண்டும். மரங்கள் தங்கள் வேர் மூலம் தன் விதையில் முளைத்த செடிகளுக்கு தாய் பால் ஊட்டுவது போல் நீருடன் உணவு தருவதை கண்டுள்ளார்கள். பூச்சிகள் தாக்கினால் தரைக்கடியில் படர்ந்த இதர மரங்களின் வேர்கள் மூலம் -மின் வலைத்தளம் போல் - அபாய ரசாயன சமிக்கை மூலம் செய்தி அனுப்புகிறது. இதனாலேயே, சில காய் கறி பழங்கள் இப்படி எச்சரிக்கையால் கடுகெண்ணை போன்ற கசப்பை ஏற்படுத்தி தங்களை பாது காத்து கொள்கிறதாம் கடுகெண்ணை போன்ற கசப்பை ஏற்படுத்தி தங்களை பாது காத்து கொள்கிறதாம் இப்படி பல உண்டு. அமெரிக்காவில் யூடியூப்பில் இதை காட்டியதை பதிவு செய்த நண்பர் ஒருவர் தன் லேப் டாப்பில் காட்டினார்.பைஃகஸ் பெஞ்சமினா (Ficus Benjamina, commonly known as weeping fig) என்ற 5 வருட செடியை தூர எறிந்தாகளாம் ஒரு ஆபீசில். அதை எடுத்து வந்து, தடவிக் கொடுத்து, பேசி, நீர் கொடுத்து அது துளிர்த்து, பெரிதாக வளர்ந்த பின் 200 டாலருக்கு அதே கம்பெனிக்கு விற்று விட்டேன் என்று தான் செய்தை ஆவணப்படுத்திய டிவிடியைக் காட்டினார். இந்துக்கள் இதை அறிந்தாலே தலவிருக்ஷ்களை வளர்த்தார்கள் ஆனால் அற நிலய கொள்ளையர்கள் அவற்றை வெட்டி காசு பார்க்கிறார்கள். மரங்கள் சாபமே பஞ்சமாக வரும். பேசாத, நகராத, கருணை கடவுளின் அற்புத படைப்புக்களே மரங்கள். மரங்கள் இல்லையே மரணமே மரம் இந்தப் பெண்ணை படுக்கை பயமில்லாமல் நேசிக்கும்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.