அடுத்த ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐபேடு புரோ மாடல்கள், ஓ.எல்.இ.டி., திரையுடன் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரும் மாடல்களில், எல்.சி.டி., திரைகளே உள்ளன.
இதை ஆப்பிள் நிறுவனம்,'லிக்விட் ரெட்டினா' என்று அழைக்கிறது. சாம்சங், எல்.ஜி., ஆகிய நிறுவனங்கள் தற்போது ஓ.எல்.இ.டி., திரை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து, அடுத்த ஆண்டில், ஆப்பிள் இந்த தயாரிப்புகளை பயன்படுத்தலாம் என கூறுகின்றனர்.