அணுசக்தி துறையில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: ஸ்டெனோகிராபர் கிரேடு - II 2, ஸ்டெனோகிராபர் கிரேடு - III 4, அப்பர் டிவிசன் கிளார்க் 5, ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டென்ட் / ஜூனியர் ஸ்டோர்கீப்பர் 63 என மொத்தம் 74 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஸ்டெனோகிராபர் பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 100 வார்த்தை தட்டச்சு செய்யும் திறன் வேண்டும்.
* கிளார்க் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, ஆங்கிலத் தில் நிமிடத்துக்கு 30 வார்த்தை தட்டச்சு செய்ய வேண்டும்.
* ஸ்டோர்கீப்பர் பதவிக்கு பி.எஸ்சி., அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ (மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்) முடித்திருக்க வேண்டும்.
வயது: 27.12.2020 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 27.12.2020.
விபரங்களுக்கு: https://dpsdae.formflix.in/notification.php