பிரவுசரை வேகப்படுத்த
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2011
00:00

யாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவதில்லை. அப்படியே கம்ப்யூட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னர் மேற்கொள்ளும் வேலைகளும், குறிப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்குவதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம். மிக மெதுவாக இயங்கி, முடங்கிப் போகும் பிரவுசரை நிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக வேகமாக இயங்கக் கூடியது என்றாலும், பிரவுசர் மெதுவாக இயங்கினால், எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. பிரவுசர் மெதுவாக இயங்கப் பல காரணங்கள் உண்டு. மெமரி, கேஷ் மெமரி பைல்கள் எடுத்துக் கொள்ளும் இடம், ஆட் ஆன் தொகுப்புகள் இயங்கும் விதம் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். அதிர்ஷ்ட வசமாகச் சில பிரச்னைகளை நாமே தீர்த்து, பிரவுசரை வேகமாக இயங்க வைக்கலாம். அவற்றை நாம் இங்கு காணலாம்.
1. ஹோம் பேஜ்: உங்களுடைய பிரவுசரை இயக்கத் தொடங்கியவுடன், அது உங்கள் ஹோம் பேஜ் எனப்படும் நீங்கள் குறித்து வைத்த இணைய தளத்தைக் காட்டும். இந்த இணைய தளம் பிரவுசர் இயக்கும் ஒவ்வொரு முறையும் காட்டப்பட வேண்டும் என எண்ணுகிறீர் களா? பெரும் பாலானவர்கள் இல்லை என்றே இதற்குப் பதில் அளிப்பார்கள். பின்னர் ஏன் இதனை முதல் இணைய தளமாகத் திறக்கும்படி அமைக்க வேண்டும்? எடுத்து விடலாமே? முதலில் செல்ல வேண்டிய தளம் என்ற இடம் காலியாக இருக்கலாமே! ஹோம் பேஜ் என்பதைக் காலியாக அமைத்திட, உங்கள் பிரவுசரின், டூல்ஸ் அல்லது செட்டிங்ஸ் மெனு செல்லவும். அங்கு ஹோம் பேஜ் குறித்த வரியினைக் கண்டறிந்து, அதனைக் காலியாக அமைத்திடவும்.
2. தற்காலிக பைல்களை அழித்திடுக: ஒவ்வொரு முறை நீங்கள் இணையத் திற்குச் செல்கையில், உங்களுடைய பிரவுசர் படங்களையும் மற்ற தகவல் களையும், கம்ப்யூட்டரின் தற்காலிக (கேஷ்) நினைவகத்தில் பதிந்து வைத்துக் கொள்கிறது. ஒருபுறம் பார்க்கையில் நமக்கு இது நன்மை தரும் விஷயம் தான். அடுத்த முறை நாம் இணையத்தில் செல்கையில், ஏற்கனவே பார்த்த தளங்கள் குறித்த தகவல்கள் இருப்பதனால், இணைய தளங்கள் வேகமாகத் திறக்கப்படும். ஆனால் இதில் ஒரு சிறிய பிரச்னையும் உள்ளது. கேஷ் நினைவகத்தில் இது போன்ற தகவல்கள் தேக்கப்படுகையில், அதிகமான இடத்தை ஆக்ரமிக்கிறது. இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் சிக்கலாகிப் போகிறது. தளம் சார்ந்த தேடுதல் தாமதமாகிறது. எனவே இந்த தற்காலிக பைல்களை அவ்வப்போது அழித்துவிட வேண்டும். மேலும் இவற்றை அழிப்பதனால், நம்முடைய தனிநபர் தகவல்களை மற்றவர்கள் அணுகிப் பார்ப்பது தவிர்க்கப்படுகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், இத்தகைய தற்காலிக பைல்களை அழித்திட Tools – Delete Browsing History எனச் சென்று, Delete All என்பதில் கிளிக் செய்து, பின்னர் Close அழுத்தி வெளியே வரவும்.
பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், Tools – Clear Private Data எனச் செல்லவும். எத்தகைய பைல்களை நீக்க வேண்டும் என பிரவுசருக்குச் சொல்ல, அந்த வகை (Cache, Cookies, Search History போன்றவை) பைல்கள் முன் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர், Clear Private Data என்பதில் கிளிக் செய்து வெளியேறலாம்.
3. பயர்பாக்ஸ் பைப் லைனிங்: பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்து பவர்களுக்கு, இந்த வகையில் கூடுதல் வசதி ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு தளம் கம்ப்யூட்டருக்கு இறங்கும் நேரத்தை அதிகப்படுத்தலாம். இந்த வசதியைத் தரும் தொழில் நுட்பத்திற்கு பைப் லைனிங் (Pipe Lining) என்று பெயர். இதன் மூலம் ஒரே நேரத்தில் நாம் பிரவுசருக்கு, இணையத்தில் பல வேலைகளை மேற்கொள்ள கட்டளை களைத் தரலாம். முதல் கட்டளைக்கான பதிலைப் பெற்றுத்தான், அடுத்த கட்டளையை எடுத்துக் கொள்ளும் என்ற நிலை எல்லாம் இல்லை. இந்த தொழில் நுட்பத்தினை அமல்படுத்த, கீழ்க்கண்ட வாறு செயல்படவும்.
1. பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, அதன் முகவரிச் சட்டத்தில் about:config என டைப் செய்து என்டர் தட்டவும்.
2. கிடைக்கும் கட்டத்தில் network. http.pipelining என்று இருப்பதனைக் கண்டு அதில் True என்பதை அமைக்கவும். இதன் மூலம் பைப்லைனிங் வசதி உங்களுக்கு இயக்கப்பட்டு எப்போதும் செயல்படும்.
3. அடுத்ததாக, network.http.proxy. pipelining என்று இருப்பதற்கும் True என வேல்யு செட் செய்திடவும்.
4. பின்னர் network.http.pipelining. maxrequests என்று இருப்பதில் டபுள் கிளிக் செய்து நம் கட்டளை விருப்பங்களின் எண்ணிக்கையை 8 என அமைக்கவும்.
உங்கள் பிரவுசர் மிக வேகமாக இயங்க இன்னும் பல வழிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்ட வழிகள் எளிதான வழிகளாகும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Zaneergm - Mawanella,இலங்கை
05-ஜூன்-201100:53:19 IST Report Abuse
Zaneergm wonderful
Rate this:
Share this comment
Cancel
Pon - bern,சுவிட்சர்லாந்து
03-ஜூன்-201100:44:50 IST Report Abuse
Pon super
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X