கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2011
00:00

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில், விண்டோஸ் ஐகான் கிளீன் அப் விஸார்ட் உள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இந்த ஐகான் எவ்வாறு, எந்த பெயரில் எங்கு உள்ளது? நான் தேடிய வரையில் இது கிடைக்கவில்லை. தயவு செய்து உதவவும்.
-ஆர். எஸ். சுப்ரமணியன், மதுரை.
பதில்: நீங்கள் சொல்வது சரிதான். டெஸ்க்டாப் கிளீன் அப் விஸார்ட் வசதி இறுதியாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் தரப்பட்டது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அதே வகையில் அந்த ஐகான் தரப்படவில்லை. ஆனால் அதன் செயல் பாடும் வசதியும் இங்கும் கிடைக்கிறது. இன்னும் பல வசதிகளுடன் கூடிய மெய்ன்டனன்ஸ் விஸார்டில் இது தரப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தில், இந்த இயக்கம் தானாகவே இயக்கப்படுகிறது. நீங்கள் இதனை இயக்க எண்ணினால், கீழ்க்காணும் வழிகளில் செல்லவும்.
1. முதலில் Troubleshooting menu மெனுவினைத் திறக்க வேண்டும். இதற்கு Start பட்டன் அழுத்தி, பின்னர் கிடைக்கும் நீள் சதுரத்தில் ‘troubleshooting’ என டைப் செய்து தேடவும். கிடைக்கும் தேடல் முடிவுகளில் முதல் முடிவினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
2. பின்னர் கிடைக்கும் விண்டோவில் System and Security என்ற ஆப்ஷன் இருப்பதை உறுதி செய்திடவும். அடுத்து, Run Maintenance Tasks என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இது System Maintenance window வைத்திறக்கும். தொடர்ந்து செயல்பட டேப்பில் அழுத்தவும். இதனைத் தொடர்ந்து வரும் விஸார்ட், விண்டோஸ் 7 சிஸ்டம் இன்ஸ்டலேஷனில் பிரச்னைகள் ஏதும் உள்ளனவா என்று அறியும் வகையில் பல சோதனை வேலைகளை, உங்கள் மூலமாக மேற்கொள்ளும். இதில் ஒன்றுதான் டெஸ்க்டாப் கிளீன் செய்திடும் வேலையாகும்.
இதுவும் உங்களுக்குச் சரிப்பட்டு வரவில்லை எனில், சிகிளீனர் புரோகிராமைப் பயன்படுத்தவும். இதன் மூலம் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை ட்யூன் செய்திடலாம். இந்த புரோகிராமை இயக்கிவிட்டு, அதில் சிஸ்டம் மெனுவில் அருகே உள்ள Desktop Shortcuts கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். சிகிளீனர் தரும் மற்ற பிரிவுகளையும் ஆழ்ந்து கவனித்து, அவை தரும் சிஸ்டம் ட்யூனிங் வசதிகளையும் இயக்கவும்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 4 பயன்படுத்தி வருகிறேன். புதிய டேப்பிற்கான பட்டனை அழுத்தி, புதிய தளம் திறப்பதற்குப் பதிலாக, Ctrl-t பயன்படுத்துவது எனக்கு எளிதாக உள்ளது. எனவே இந்த புதிய டேப்பிற்கான ப்ளஸ் பட்டன் இல்லாமல் பிரவுசரை மாற்றி அமைக்க முடியுமா?
-கா. சுதந்திர முத்து, தேவாரம்.
பதில்: நீங்கள் கூறுவதும் கேட்பதும் சரியே. உங்களுக்கான பதிலைத் தருவதற்கு முன், மற்ற வாசகர்களுக்கு இது பற்றி சற்று விளக்குகிறேன். புதிய டேப் பட்டன் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 3.5 ல் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர் கிறது. டேப் பாரின் இறுதி டேப்பினை அடுத்து இது தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், புதிய காலி டேப் ஒன்று திறக்கப்படும். இதே செயல்பாடு Ctrl-t அழுத்தினாலும் கிடைக்கும். பலருக்கு இந்த ஷார்ட் கட் கீ எளிதாக உள்ளது.
எனவே டேப் பாரின் இறுதியில் உள்ள + அடையாளம் தேவையில்லை எனப் பலர் கருதுகின்றனர். இதனை நீக்க, புதிய டேப் பார் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் ஆப்ஷன்களில் customize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் பிரவுசர் customize செய்யப்படும் நிலையில் காட்டப்படும். Customize Toolbar விண்டோ கிடைக்கும். புதிய டேப் பட்டனை நீக்க, அதில் மவுஸ் கர்சரை அழுத்தியவாறே இழுத்து, இந்த விண்டோவில் விட்டுவிடவும். இதே போல நீங்கள் எதனை எல்லாம் தேவையற்றது எனக் கருதுகிறீர்களோ, அவற்றை நீக்கலாம். அனைத்தும் முடித்தவுடன் விண்டோவில் done என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் டேப் பாரில் + டேப் நீக்கப்பட்டு உங்களுக்கு அதிக இடம் கிடைக்கும்.

கேள்வி: புரோ நோட்புக் லேப்டாப் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறேன். திடீரென அதன் பேட்டரி சார்ஜ் ஆக மறுக்கிறது. எப்போதும் ப்ளக்கில் செருகித் தான் பயன் படுத்த வேண்டியுள்ளது. இதனை மாற்ற வேண்டுமா? அல்லது கம்ப்யூட்டர் பாகங்களில் பிரச்னை இருக்குமா?
-சி.நடராஜன், அருப்புக்கோட்டை.
பதில்: லேப்டாப்பில் உள்ள பேட்டரி எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தி உள்ளீர்கள் என்ற விபரத்தினை நீங்கள் தரவில்லை. பிரச்னைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அண்மையில் வழக்கத்தில் இல்லாமல், ட்ரெயின், பெரிய வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் இவற்றில் லேப்டாப்பினை சார்ஜ் செய்தீர்களா? அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் பேட்டரியை நீக்குவதற்கு முன் கீழ்க் குறித்தபடி சோதனை செய்திடவும். கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடவும். மின் இணைப்பை நீக்கவும். பேட்டரியை கழட்டி வெளியே எடுக்கவும். பின்னர், மீண்டும் பேட்டரியை இணைத்து, மின் இணைப்பினை ஏற்படுத்தி பூட் செய்திடவும். இது போல இன்னொரு முறையும் செய்திடவும். இப்போது பேட்டரி ரீசார்ஜ் ஆகிறதா? எனக் கண்காணிக்கவும். ரீசார்ஜ் ஆகிறது எனில் சரி. இல்லையேல், கம்ப்யூட்டரில் உள்ள ரீசார்ஜ் புரோகிராம் கரப்ட் ஆகி இருக்கலாம். அதனை அன் இன்ஸ்டால் செய்து, பின் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்தால், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அதற்கு முன், ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். கம்ப்யூட்டர் பூட் ஆகாமல் போனால் உதவும். இனி, டிவைஸ் மேனேஜரைத் திறக்கவும். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி என்பதால், Start கிளிக் செய்து, My Computerல் ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Hardware டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின், Device Manager பட்டனில் தட்டவும்.
விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், Start கிளிக் செய்து Device Manager என டைப் செய்து, என்டர் தட்டவும்.
Device Manager கிடைத்தவுடன், அதில் ஆச்ttஞுணூடிஞுண் என்ற பிரிவை விரிக்கவும். இங்கு Microsoft ACPICompliant Control Method Battery என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு Uninstall என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மற்ற டிரைவர்களை எதுவும் செய்திட வேண்டாம்.
இந்த டிரைவர் மறைந்தவுடன், அந்த விண்டோவிலேயே, Action என்ற மெனுவில் கிளிக் செய்திடுக. பின்னர் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது நீக்கப்பட்ட டிரைவரைக் கொண்டு வரும்.
இனி லேப்டாப் பேட்டரியை முழுமையாக ட்ரெயின் செய்திடவும். அதாவது அதில் சார்ஜ் செய்யப்பட்ட மின் சக்தி முழுவதும் தீர்க்கப்பட வேண்டும். அதன் பின்னர், புதிய ட்ரைவருடன் சார்ஜ் செய்தால், பேட்டரி சார்ஜ் ஆகும்.
இதன் பின்னரும் சார்ஜ் ஆகவில்லை என்றால், கம்ப்யூட்டரை விற்பனை செய்த நிறுவனக் கிளையைத் தொடர்பு கொண்டு, சரியான பேட்டரி ஒன்றை வாங்கி இணைக்கவும்.

கேள்வி: இன்டர்நெட்டில் சில முக்கிய தளங்களில் காணப்படும் தகவல்களை பிரிண்ட் எடுக்கையில், அதனுடன் இணைந்திருக்கும் படங்கள் மற்றும் சில விளம்பரங்களும் ஒட்டிக் கொண்டு பிரிண்ட் ஆகின்றன. இவை தவிர்த்து டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் எடுப்பது எப்படி?
-நி. ஆரோக்கிய ராஜ், புதுச்சேரி.
பதில்: சற்று சுற்று வழியாக, நான் டெக்ஸ்ட் மட்டும் தனியே காப்பி செய்து, அதனை வேர்ட் ப்ராசசரில் பேஸ்ட் செய்து, பின் என் வசதிக்கேற்ப அச்செடுக்கிறேன். ஒரு சில இணைய தளங்களில், இவ்வாறு டெக்ஸ்ட் மட்டும் அச்செடுக்க வழி தரப்பட்டிருக்கும். அதனைப் பயன்படுத்தலாம். செட் செய்து டெக்ஸ்ட் எடுக்கக் கீழ்க்காணும் வழியைப் பின்பற்றவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இதனை மேற்கொள்ளலாம். அதில் டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும். இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு “Print background colors and images” என இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் கேட்டபடி பிரிண்ட் செய்திடலாம்.

கேள்வி: இணையத்தில் தளங்களைத் தேடுகையில் எர்ரர் கோட் 404 எண் கொடுக்கப்பட்டு, பிழைச் செய்தி காட்டப் படுகிறது. நாம் முயற்சிக்கும் தளம் கிடைக்க என்ன செய்திட வேண்டும்?
-டி.நிஷா சக்ரவர்த்தி, காரைக்கால்.
பதில்: நீங்கள் டைப் செய்த இணைய தள முகவரி உள்ள தளம், உங்கள் முகவரி குறிப்பிடும் சர்வரில் இல்லை என்று பொருள். பொதுவாக இந்த செய்திகளிலேயே, நீங்கள் என்ன தவறு செய்திருக்கலாம்; அல்லது நீங்கள் என்ன செய்திட வேண்டும் என்ற தகவலும் கிடைக்கும். நீங்கள் முகவரியைச் சரியாக டைப் செய்தீர்களா? என்பது பொதுவான ஒரு தகவல். பொதுவாக அந்த முகவரியில் உள்ள தளம் சர்வரில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம். எனவே தேடும் முயற்சியைக் கைவிடலாம். அல்லது வேறு ஒரு பிரவுசரின் மூலம் அதனைப் பெற முயற்சிக்கலாம். ஆனால் அது அவ்வளவு மாறுதலான முடிவைத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும் கூகுள் இதில் கை கொடுக்கலாம். பொதுவாக கூகுள் தான் இன்டெக்ஸ் செய்திடும் இணைய தளங்களை தன் கேஷ் மெமரியில் வைத்திருக்கும். எனவே மேலே நீங்கள் தந்திருக்கும் பிழைச் செய்தி கிடைத்தால் கூகுள் சர்ச் பாக்ஸ் பெற்று, அதில் cache: எனக் கொடுத்து பின் நீங்கள் தந்துள்ள இணைய முகவரியைத் தரவும். உங்கள் இணைய முகவரியில், அந்த தளத்தின் அடிப்படை முகவரிக்குப் பின், அதன் பக்கங்களுக்கான முகவரி பெயர் இருப்பின், அதனை நீக்கி விட்டு தளத்தின் பெயரை மட்டும் அமைத்துத் தேடிப் பார்க்கவும். தளம் கிடைத்தால் பின் அதில் நீங்கள் தேடும் அந்த குறிப்பிட்ட பக்கத்தைத் தேடலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYER. P.J - TrivandrumKerala,இந்தியா
03-ஜூன்-201120:04:22 IST Report Abuse
IYER. P.J கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில்,அடிக்கடி unmountable boot volume என்ற பெயரில் நீல நிற ஸ்க்ரீன் வந்து கம்ப்யூட்டர் பூட்டக மறுக்கிறது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டர் பூட்டாகும் பொழுது F8 key அமர்த்திய பின் safe mode வழியாக முயற்சி செய்து பார்த்தாலும் பூட்டக்காமல் திரும்பியும் unmountable boot volume என்கிற மெசேஜ் தான் வந்து கொண்டிருக்கிறது. C drive வை format செய்து விட்டு O.S reinstall செய்தால் பழைய படி பூட்டகிறது. இது அடிக்கடி நிகழ்கிறது. இதன் காரணம் என்னவாக இருக்கலாம்?
Rate this:
Share this comment
Cancel
ம.shahul - chennai,இந்தியா
30-மே-201113:58:04 IST Report Abuse
ம.shahul this is very usefull of all the people....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X