விதை ஈரப்பதம் என்பது விதையானது ஈர்த்து வைத்துள்ள தண்ணீரின் அளவு ஆகும். விதையின் ஈரப்பதம் சவீதத்தில் குறிப்பிடப்படுகிறது. விதையின் ஈரப்பதம் ஒரு விதையின் முளைப்புத்திறன், விதைக்கெடுதல், பூச்சி தாக்குதல் மற்றும் அதிகபட்ச சேமிப்பு காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்கிறது. விதையின் ஈரப்பதம் மிகக்குறைவான நிலையில் இருந்தாலும், மிக அதிகம் இருந்தாலும் விதையின் முளைப்புத்திறன், சேமிப்பு கால அளவு, பூஞ்சானம் மற்றும் பூச்சி தாக்குதல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விதையின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் சேமித்து வைக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது விதைத்தரத்தை முடிவு செய்யும் முக்கிய காரணியான விதை முளைப்புத்திறன் குறையும். நெல் 13 சதவீதம், சிறுதானியங்கள் 12, பயறு வகைகள் 9, நிலக்கடலை, சூரியகாந்தி, எள் 9, பருத்தி 10 என விதை பயன்பாட்டிற்கான அதிகபட்ச ஈரப்பத சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவணி, புரட்டாசி பட்டங்களில் விதைப்பு செய்யப்பட்ட சோளம், கம்பு, பாசி, உளுந்து போன்ற பயிர்களின் அறுவடை நடக்கவுள்ளது. எனவே, விவசாயிகள் விதையினை நன்கு உலர்த்தி விதையின் ஈரப்பதத்தை மேற்குறிப்பிட்ட அளவிற்குள் சேமித்து வைத்து கொள்ள வேண்டும். விதையின் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறனை அறிந்து கொள்ள மாவட்ட விதை பரிசோதனை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
சி.சிங்காரலீனா விதை பரிசோதனை அலுவலர் மதுரை இரா. இராமசாமி வேளாண் அலுவலர் பா.சாய்லெட்சுமி சரண்யா வேளாண் அலுவலர் 99528 88963
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
விவசாயிகளுக்கு ஒரு பணிவான வேண்டு கோள்: மாறு வேடத்தில் வந்து, தரகர்களிடம் தப்பி, போலி ஓபீசி அதிகாரிகள் யார் இல்லை என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்(முடியுமானால்). பின் அவர்களில் அன்பானவரை அழைத்து சில நல்ல விவசாயிகளுடன் சிறு நல்ல விருந்து வையுங்கள். துளிர் வெத்திலையில், வாசனை பாக்கு, வாசனை சுண்ணாம்பு தடவி நன்றாக அனுபவித்த பின் அன்போடு , அண்ணே, முன்பு " வாருங்கள் விவாசாயம் செய்வோன்னு" ரேடியோவிலே எவ்ளோ நல்ல நிகள்ச்சி வரும். இப்ப அதில்லையே உஈஆரணமா இந்த வெதையிலே (ஏ, ஏளுமலை அந்த தட்டிலே வெதை இருக்கே, அதை தட்டோட கொண்டா) ஈரப்பதம் சரியா இருக்கான்னு சொல்லுங்கன்னா, உதவி கிடைக்கும். சாப்பாடு தமிளர்களின் விருந்தோம்பல், மாமூல் இல்லையே
விவசாயிகளுக்கு ஒரு பணிவான வேண்டு கோள்: மாறு வேடத்தில் வந்து, தரகர்களிடம் தப்பி, போலி ஓபீசி அதிகாரிகள் யார் இல்லை என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்(முடியுமானால்). பின் அவர்களில் அன்பானவரை அழைத்து சில நல்ல விவசாயிகளுடன் சிறு நல்ல விருந்து வையுங்கள். துளிர் வெத்திலையில், வாசனை பாக்கு, வாசனை சுண்ணாம்பு தடவி நன்றாக அனுபவித்த பின் அன்போடு , அண்ணே, முன்பு " வாருங்கள் விவாசாயம் செய்வோன்னு" ரேடியோவிலே எவ்ளோ நல்ல நிகள்ச்சி வரும். இப்ப அதில்லையே உஈஆரணமா இந்த வெதையிலே (ஏ, ஏளுமலை அந்த தட்டிலே வெதை இருக்கே, அதை தட்டோட கொண்டா) ஈரப்பதம் சரியா
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.