பிப்ரவரி | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements
பிப்ரவரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 டிச
2020
00:00

தமிழகம்
பிப்., 4: ஐந்து, எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது.
பிப்., 5: 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்., நிறுவனம், அதில் நடித்த நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.
பிப்., 8: இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே இந்தியா வருகை.
பிப்., 20: தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் மசோதா நிறைவேற்றம்.
* சென்னையில் 'இந்தியன் - 2' சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி.
பிப்., 24: ஜெ., பிறந்த தினத்தை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு கொண்டாடியது.
பிப்., 27: திருவெற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி மறைவு.
பிப்., 28: குடியாத்தம் தி.மு.க., எம்.எல்.ஏ., காத்தவராயன் மறைவு.
பிப்., 29: வேலுாரில் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை கலெக்டர் தினகரன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது.

இந்தியா
பிப்., 4: ஜனாதிபதி மாளிகையில் உள்ள 'மொகல் தோட்டம்' பொது மக்களுக்கு திறப்பு.
பிப்., 5: கேரளாவில் 105 வயது மூதாட்டி 4ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி.
பிப்., 10: ஜார்க்கண்டில் பா.ஜ., வுடன் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி இணைப்பு.
பிப்., 13: உ.பி., யில் பஸ் - லாரி மோதியதில் 14 பேர் பலி.
பிப்., 14 : நாட்டின் முதன்முதலாக மும்பை - புனே இடையே மின்சார பேருந்து அறிமுகம்.
* உ.பி., யின் வாரணாசி - ம.பி.,யின் உஜ்ஜயினி இடையே 3வது தனியார் ரயில் சேவை தொடக்கம்.
பிப்., 20: வளரும் நாடுகளின் 100 சிறந்த பல்கலை., பட்டியலில் சென்னை ஐஐடி உட்பட 11 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்தன.
பிப்., 22: உலகில் அதிகம் பேர் பேசும் மொழிகளில் ஹிந்தி (61.5 கோடி) முதலிடம்.
* சர்வதேச நீதித்துறை மாநாடு டில்லியில் நடந்தது.
பிப்., 23: உ.பி.,யின் சோன்பத்ரா பகுதியில் 5.28 கோடி கிலோ தாது இருப்பை இந்திய புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்தது.
பிப்., 26: பள்ளி, கல்லுாரிகளில் போராட்டம் நடத்த கேரள உயர்நீதிமன்றம் தடை.
* அதி நவீன ரோந்துக்கப்பல் 'வஜ்ரா' கடலோர காவல்படையில் சேர்ப்பு.
* பிரான்சுக்கான இந்திய துாதராக ஜாவெத் அஷ்ரப் நியமனம்.
பிப்., 28: இந்தியாவின் நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்துக்கு உலக வங்கி ரூ. 3,328 கோடி நிதி ஒதுக்கீடு.

உலகம்
பிப்., 1: காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் மாலத்தீவு மீண்டும் சேர்ந்தது.
பிப்., 4: சீனாவின் வூகான் நகரில் 'கொரோனா' சிறப்பு மருத்துவமனை 10 நாட்களில் அமைப்பு.
பிப்., 9: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள வணிக வளாகத்தில் ராணுவ வீரர் சுட்டதில் 21 பேர் பலி.
பிப்., 20: ஜெர்மனியின் ஹனாவ் நகரில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி.
பிப்., 27: சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப்படை தாக்கியதில், 33 துருக்கி ராணுவ வீரர்கள் பலி.
பிப்., 29: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா. புதிய பிரதமராக முகைதீன் யாசின் நியமனம்.

இதுதான் 'டாப்'
* பிப்., 3: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
* பிப்., 19: அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழர் ஸ்ரீநிவாசன் நியமனம்.
* பிப்., 28: ஆப்கனில் அமைதி ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் ஆப்கன் - தலிபான் - அமெரிக்கா கையெழுத்திட்டன.

'நமஸ்தே' டிரம்ப்
பிப்., 24: ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பு.

மீண்டும் அதிபர்
பிப்., 18: ஆப்கானிஸ்தானில் 2019ல் அதிபர் தேர்தல் நடந்தது. ஐந்து மாதங்கள் இழுபறிக்கு பின் அதிபர் அஷ்ரப் கானி வெற்றி பெற்று பதவியை தக்க வைத்தார்.

கெஜ்ரி 'ஹாட்ரிக்'
பிப்., 16: டில்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில், 62ல் வென்ற ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்தது. மூன்றாவது முறையாக கெஜ்ரிவால் முதல்வரானார்.

கோவை சோகம்
பிப்., 20: கோவை அவிநாசியில் கேரள அரசு பஸ் - கன்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் பலி.

தமிழில் மந்திரம்
பிப்., 5: ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சமஸ்கிருதத்துடன் தமிழிலும் மந்திரங்களை உச்சரித்தனர்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X