மார்ச்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2020
00:00

தமிழகம்
மார்ச் 7: தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் காலமானார்.
மார்ச் 14: திண்டுக்கல் மருத்துவக் கல்லுாரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்.
மார்ச் 24: நாகப்பட்டினத்தை பிரித்து 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

இந்தியா
மார்ச் 1: சிவசேனா கட்சி பத்திரிகை 'சாம்னா'வின் ஆசிரியராக உத்தவ் தாக்கரே மனைவி லஷ்மி தாக்கரே நியமனம்.
* பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கேரள பாதிரியார் ராபின் வடக்கும்சேரி பணியை போப் பறித்தார்.
மார்ச் 5: உத்தரகண்டின் கோடைகால தலைநகராக கேர்செய்ன் தேர்வு.
* மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் விமானநிலையம், சத்ரபதி சாம்பாஜி மகராஜ் என பெயர் மாற்றம்.
மார்ச் 6: மத்திய தகவல் தலைமை ஆணையராக பிமால் ஜுல்கா நியமனம்.
* அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்குவதாக மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு.
மார்ச் 8: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது.
மார்ச் 10: மத்திய பிரதேசத்தில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 22 பேர் ராஜினாமா.
மார்ச் 11: கர்நாடக மாநில காங்., தலைவராக சிவக்குமார் நியமனம்.
மார்ச் 15: கொரோனாவுக்கான சார்க் நாடுகள் நிதியம் உருவாக்கப்பட்டது.
மார்ச் 20: மத்திய பிரதேசத்தில் காங்., சார்பில் முதல்வராக இருந்த கமல்நாத் ராஜினாமா.
மார்ச் 24: காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, வீட்டுக்காவலில் இருந்து ஏழு மாதங்களுக்குப்பின் விடுதலை.
மார்ச் 26: ராஜ்யசபாவுக்கு புதிதாக 55 எம்.பி.,க்கள் தேர்வு.
மார்ச் 29: 'பி.எம்.கேர்ஸ்' கொரோனா அவசரகால நிவாரண நிதியம் அறிவிப்பு.

உலகம்
மார்ச் 4: உக்ரைன் பிரதமராக டெனிஸ் ஷிம்கால் பொறுப்பேற்பு.
மார்ச் 15: கொரோனா பரவலை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தேசிய அவரசரநிலையை அறிவித்தார்.
மார்ச் 21: உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் பின்லாந்துக்கு முதலிடமும் இந்தியாவுக்கு 140வது இடமும் கிடைத்தன.
மார்ச் 27: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா உறுதி.
* 'நேட்டோ' அமைப்பில் 30வது நாடாக சேர்ந்தது வடக்கு மாசிடோனியா.

இதுதான் 'டாப்'
* மார்ச் 8: பெண்கள் தினத்தன்று பிரதமர் மோடி தன் டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை சாதனை பெண்களிடம் வழங்கினார்.
* மார்ச் 19: ராஜ்யசபா நியமன எம்.பி., யாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பொறுப்பேற்பு.
* மார்ச் 20 : டில்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் நால்வருக்கு துாக்கு.

நிறைவேறிய கனவு
மார்ச் 1: ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவக்கல்லுாரி கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பங்கேற்பு.

தாவிய சிந்தியா
மார்ச் 15: மத்திய பிரதேச காங்., தலைவர், முன்னாள் மத்திய அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ., வில் சேர்ந்தார். இவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 22 பேரும் பா.ஜ., வில் ஐக்கியமாகினர்.

சிகரத்தில் சிறுமி
மார்ச் 10: தென் அமெரிக்காவின் 22,841 அடி உயரமான அகோன்காகுவா சிகரத்தில் ஏறி மும்பை மாணவி காம்யா கார்த்திகேயன்(12 வயது) சாதனை.

ம.பி.,யில் மாற்றம்
மார்ச் 23: மத்திய பிரதேச முதல்வராக பா.ஜ. சார்பில் சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்பு.

வீர மரணம்
மார்ச் 22: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள்- சி.ஆர்.பி.எப்., மோதலில் 17 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீர மரணம். காயமடைந்த வீரருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் புபேஷ் பகேல்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X