விளையாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2020
00:00

ஜனவரி
ஜன.3: உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் மனவ் தாக்கர் 'நம்பர்-1' இடம்.
ஜன.4: இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஓய்வு.
ஜன.10: இந்தியாவின் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 11,000 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் ஆனார்.
ஜன.15: சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா தேர்வு.
ஜன.19: இத்தாலியில் நடந்த ரோம் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா (65 கி.கி.,), ரவி குமார் (61 கி.கி.,) தங்கம்.
ஜன.22: 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' தொடரில் தமிழக அணி 76 பதக்கங்களுடன் 6வது இடம். மஹாராஷ்டிரா அணி முதலிடம்.
ஜன.26: முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி, தனது 100வது பிறந்த நாள் கொண்டாடினார்.
ஜன.27: அமெரிக்க முன்னாள் கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட், ஹெலிகாப்டர் விபத்தில் பலி.

பிப்ரவரி
பிப்.2: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்.
பிப்.8: ஆஸ்திரேலியாவில் நடந்த 'பிக் பாஷ் லீக்' தொடரில் சிட்னி சிக்சர்ஸ் சாம்பியன்.
பிப்.9: தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி, வங்கதேசத்திடம் தோல்வி.
பிப்.15: ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெண்கலம்.
* பெங்களூரு ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புரவ் ராஜா, ராம்குமார் ராமநாதன் ஜோடி கோப்பை.
பிப்.23: ஹங்கேரி ஓபன் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், சத்தியன் ஜோடி வெள்ளி.
பிப்.24: ஜோத்பூரில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா சாம்பியன் .
பிப்.26: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, சர்வதேச டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வு.
பிப்.29: 'கேலோ இந்தியா' பல்கலை., விளையாட்டு 100, 200 மீ., ஓட்டத்தில் டுட்டீ சந்த் தங்கம்.

மார்ச்
மார்ச் 4: ஐ.சி.சி., 'டுவென்டி-20' போட்டிக்கான 'பேட்டிங்' தரவரிசையில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதலிடம்.
மார்ச் 7: இந்திய அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் ஓய்வு.
மார்ச் 8: பெண்கள் 'டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி.
மார்ச் 13: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணி சாம்பியன்.
மார்ச் 20: இந்திய கால்பந்து 'ஜாம்பவான்' பி.கே.பானர்ஜி கோல்கட்டாவில் மரணம்.
மார்ச் 24: கொரோனா காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைப்பு.

ஏப்ரல்
ஏப். 8: 'விஸ்டன்' விருதுக்கு இங்கிலாந்து 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் தேர்வு.
ஏப். 25: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை ஜுமா கதுனுக்கு 4 ஆண்டு தடை.

மே
மே 18: கொரோனா அச்சம் காரணமாக டி.என்.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு.
மே 29: ஊக்கமருந்து பயன்படுத்திய இந்திய தடகள வீராங்கனை கிரஞ்ஜீத் கவுருக்கு நான்கு ஆண்டுகள் தடை.
மே 30: அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு நட்சத்திரங்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் ஆனார் கோஹ்லி. இவருக்கு 66வது இடம் கிடைத்தது.

ஜூன்
ஜூன் 23: உலகின் 'நம்பர்-1' டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கொரோனா பாதிப்பு.
ஜூன் 26: இங்கிலாந்தில் நடந்த பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணி சாம்பியன்.

ஜூலை
ஜூலை 1: ஐ.சி.சி., தலைவர் பதவியில் இருந்து இந்தியாவின் சஷாங்க் மனோகர் விலகினார்.
* 'விஸ்டன்' இதழ் சார்பில், 21ம் நுாற்றாண்டின் மதிப்பு மிக்க இந்திய டெஸ்ட் வீரராக ஜடேஜா தேர்வு.
ஜூலை 4: சீன பாட்மின்டன் வீரர் லின் டான் ஓய்வு.
ஜூலை 5: மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன்.
ஜூலை 27: இத்தாலி, 'சீரி ஏ' கால்பந்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் யுவன்டஸ் அணி சாம்பியன்.

ஆகஸ்ட்
ஆக. 4: 'லெஜண்டு' செஸ் தொடரில் உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன்.
ஆக. 21: நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருதுக்கு ரோகித் சர்மா (கிரிக்கெட்), மாரியப்பன் (தடகளம்), ராணி ராம்பால் (ஹாக்கி), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகத் (மல்யுத்தம்) என, முதன்முறையாக 5 பேர் தேர்வு.
ஆக. 27: அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் சகோதரர்கள், சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு.
ஆக. 30: 'ஆன்லைன்' செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா, ரஷ்யா அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

செப்டம்பர்
செப். 13: ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தடை முடிந்தது.

அக்டோபர்
அக். 10: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன்.
அக். 18: ஷேக் ரசல் சர்வதேச ஏர் ரைபிள் ஆன்லைன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் இந்திய வீராங்கனை இளவேனில் தங்கம்.
* டென்மார்க் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை ஒகுஹரா சாம்பியன்.
அக். 23: இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு மாரடைப்பு.
* ஆசிய நாடுகளுக்கு இடையிலான செஸ் தொடரில் தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி தங்கம்.
அக். 25: ஆசிய செஸ் தொடரில் இந்திய பெண்கள் அணி சாம்பியன்.

நவம்பர்
நவ. 1: ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி முதன்முறையாக 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது.
நவ. 23: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் மெட்வெடேவ் சாம்பியன்.
நவ. 26: ஐ.சி.சி., புதிய சேர்மனாக நியூசிலாந்தின் கிரெக் பார்கிளே தேர்வு.

டிசம்பர்
டிச. 2: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி(1-2)இழந்தது.
டிச. 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரை இந்திய அணி(2-1)வென்றது. இத்தொடரில் அறிமுகமான தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 6 விக்கெட் வீழ்த்தினார்.
டிச. 10: இத்தாலி கால்பந்து ஜாம்பவான் பாலோ ரோசி 64, காலமானார்.
டிச. 12: துபாயில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ஜார்ஜியாவின் எக்டரினா ஜோடி சாம்பியன்.
டிச. 17: தனி நபர் உலக கோப்பை மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் வெள்ளி.
டிச. 18: 'பிபா' சிறந்த கால்பந்து வீரராக போலந்தின் டோவ்ஸ்கி தேர்வு.
டிச. 19: அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
* ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை குத்துச்சண்டையில் இந்திய வீரர் அமித் பங்கல் தங்கம்.
டிச. 29: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் ('பாக்சிங் டே') ரகானேவின் இந்திய அணி 8 விக்கெட்டில் வெற்றி.
டிச. 30: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், நியூசிலாந்து 101 ரன்னில் வெற்றி.

இதுதான் 'டாப்'
* ஜன. 10: கத்தார் ஓபன் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் வெஸ்லே கூல்ஹோப் ஜோடி சாம்பியன்.
* பிப். 15: சென்னையில் நடந்த தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா (18 முறை), சவுரவ் கோசால் (13) சாம்பியன்.
* மார்ச் 15: ஓமன், 'சேலஞ்சர் பிளஸ்' டேபிஸ் டென்னிஸ் ஒற்றையரில் இந்திய வீரர் அஜந்தா சரத் கமல் தங்கம்.
* செப். 14: யு.எஸ்., ஓபன் டென்னிசில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியம் சாம்பியன்.
* அக். 11: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஸ்பெயின் நடால் சாம்பியன். அதிக முறை (20) கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்தின் பெடரருடன் பகிர்ந்து கொண்டார்.
* நவ. 15: 'பார்முலா-1' கார்பந்தயத்தில் 7வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த பிரிட்டனின் ஹாமில்டன், ஜெர்மனியின் சூமாக்கர் சாதனையை சமன் செய்தார்.

கலக்கல் வெற்றி
ஜன. 10: இலங்கைக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி (2-0) கைப்பற்றியது.

ஹாக்கி நாயகன்
பிப். 13: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங் தேர்வு. வளரும் வீரர், வீராங்கனைக்கான 'ரைசிங் ஸ்டார்' விருதுக்கு இந்தியாவின் விவேக் சாகர் பிரசாத், லால்ரெம்சியாமி தேர்வாகினர்.

'புயல்' பும்ரா
ஜன. 12: இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு 'பாலி உம்ரிகர்' விருது. வாழ்நாள் சாதனையாளருக்கான 'சி.கே.,நாயுடு' விருது தமிழகத்தின் ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ராவுக்கு வழங்கப்பட்டது.

சபாஷ் சானியா
ஜன. 17: ஹோபர்ட் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் நாடியா கிசெனோக் ஜோடி சாம்பியன். இது, டபிள்யு.டி.ஏ., அரங்கில் சானியா வென்ற 42வது இரட்டையர் பட்டம்.

'ரியல்' சாம்பியன்
ஜூலை 17: ஸ்பெயின் 'லா லிகா' கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி 34வது முறையாக கோப்பை வென்றது.

அசத்தல் ஆண்டர்சன்
ஆக. 25: இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட் சாய்த்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார். இவர், 156 டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டினார். சர்வதேச அளவில் 600 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய நான்காவது பவுலர் ஆனார்.

'தல' ஓய்வு
ஆக. 15: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு. இவர், இந்தியாவுக்கு மூன்று வித (2007ல் 'டுவென்டி-20', 2011ல் 50 ஓவர், 2013ல் சாம்பியன்ஸ் டிராபி) உலக கோப்பை பெற்றுத் தந்தார். 'மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன் ரெய்னா ஓய்வு.

நீங்கா நினைவில்...
நவ. 25: கால்பந்து ஜாம்பவான் மாரடோனா 60. மாரடைப்பால் காலமானார். அர்ஜென்டினா அணிக்காக 34 கோல் அடித்தார். 1986ல் உலக கோப்பை வென்று தந்தார். கிளப் அரங்கில் 259 கோல் (491 போட்டி) அடித்தார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X