என் வயது, 65; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை தொடர்ந்து பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். சிறுவர்மலர் நடத்திய போட்டியில், 1997ல் வென்றாள் என் மகள் துர்கா. புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு பெருமைப்படுத்தியது சிறுவர்மலர்.
அதைக் கண்ட பள்ளி தலைமை ஆசிரியர், வெகுவாக பாராட்டி, 'அனைத்து மாணவ, மாணவியரும் சிறுவர்மலர் இதழை தவறாமல் படித்து, போட்டிகளில் வெற்றியடைய வேண்டும்...' என வாழ்த்தினார். மற்ற ஆசிரியர்களும் பாராட்டினர்.
இது, 23 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இன்றும் மனதில் பசுமையாக உள்ளது.
மலர்களில் சிறந்தது மல்லிகை; எண்ணற்ற சிறார்களின் இதயத்தை கொள்ளை கொண்டு சிறப்பது சிறுவர்மலர்!
- மு.பெரியசாமி, திருவள்ளூர்.
தொடர்புக்கு: 99620 70565