இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
00:00

தம்பியின் தன்மானம்!
லண்டனில் பணிபுரியும் தன் மகனுக்கு பெண் பார்க்க, அவனுடன் தோழியும், அவள் கணவரும் சென்றுள்ளனர்.
தோழியின் மகனுக்கு, பெண்ணை பிடித்து விட்டது. ஆனாலும், எதற்கோ தயங்கியுள்ளான்.
'பெண் படித்து, நல்ல வேலையில் உள்ளாள். திருமணத்தை சிறப்பாக செய்து, கேட்ட சீர் வரிசைகளையும் தர தயாராக இருக்கிறோம். அப்புறம் என்ன தயக்கம்?' என்று கூறியுள்ளார், பெண்ணின் அப்பா.
'உங்கள் மூத்த பெண்ணுக்கு திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகியும், குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அதுபோல், இந்த பெண்ணுக்கும் ஆகிவிடுமோ என்று யோசிக்கிறேன்...' என்றிருக்கிறார், மாப்பிள்ளை.
'லண்டனில் வேலை பார்த்தாலும், உங்களுக்கு நேர்மறை சிந்தனையே கிடையாது. சரியான சந்தேக பேர்வழி. உங்களுக்கு, எங்கள் அண்ணன் பெண்ணை தரமாட்டோம். திருமணமாகி உடனே குழந்தை பிறக்கவில்லை என்றால், இதையே குத்தி காட்டி பேசுவீர்கள்.
'உங்களை திருமணம் செய்து, எங்கள் பெண் நிம்மதியாக வாழ முடியாது. நாங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம். கிளம்புங்கள்...' என்று கூறியுள்ளார், பெண்ணின் சித்தப்பா.
ஆடிப்போய் விட்டார், மாப்பிள்ளை.
தன் தம்பி கூறுவதில் உள்ள நியாயத்தை, பெண்ணின் அப்பாவும் ஆமோதித்துள்ளார்.
இதை என்னிடம் சொல்லி புலம்பினாள், தோழி.
வெளிநாட்டில் இருக்கிறோம். பெண் வீட்டார் நம்மை எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில், சற்றும் யோசிக்காமல் பேசும் மாப்பிள்ளைகளுக்கு, இது சரியான நெத்தியடி!
- இந்திராணி தங்கவேல், சென்னை.

எதிர்பாரா இடத்தில் அரிய நுால்கள்!
ஓசூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்தபோது, உணவுக்காக ஓர் இடத்தில் நிறுத்தினர். நெடுஞ்சாலைகளில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் என்பதால், அசுவராஸ்யமாக இறங்கிய எனக்கு, இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
டீக்கடை, ஹோட்டல், சினிமா பாடல் குறுந்தகடு கடை, நொறுக்குத் தீனி கடைகளுக்கு மத்தியில், புத்தக கடை இருந்தது.
இலக்கியம், அரசியல், சினிமா, ஆன்மிகம் என, பலதரப்பட்ட புதிய நுால்கள் விற்பனைக்கு இருந்தன. பழைய நுால்களும் குறைந்த விலையில் விற்கப்பட்டன.
வெகுநாள் தேடிய, தற்போது பதிப்பில் இல்லாத நுால்கள், எனக்கு கிடைத்தது. மேலும், பலரும் ஆர்வத்துடன் நுால்களை வாங்கினர்.
வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது என, வருந்தும் சூழலில், நெடுஞ்சாலை ஓரத்தில், நுால்கள் விற்பனை மகிழ்வளித்தது.
உணவகங்கள், தேநீர் கடைகள், சாலையோரக் கடைகள் போன்றவற்றில், பீடி, சிகரெட் விற்பனையை குறைத்து, புத்தகங்களை கொண்டு வந்தால், வாசிப்பு பரவலாகும்; அறிவார்ந்த சமூகம் உருவாகும் என, நினைத்தபடி பேருந்தில் ஏறினேன்.
சாய் ஜயந்த், சென்னை.

திருமண அழைப்பிதழில், 'போன்' எண் தேவையா?
சமீபத்தில், தோழியின் மகளுக்கு திருமணம் நடந்தது. சில வாரங்களிலேயே, கணவர் வீட்டில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு, பிறந்த வீட்டிற்கு வந்து விட்டாள்.
இதை கேள்விப்பட்ட நான், தோழியின் வீட்டுக்கு சென்று விசாரித்தேன்.
கணவர் வீட்டுக்கு, யாரோ ஒருவர் போன் செய்து, பெண்ணை பற்றி தவறாக பேசி இருக்கிறார். அதை உண்மை என நம்பிய அவரது வீட்டார், இங்கே அனுப்பி வைத்து விட்டதாக கூறினாள், தோழி.
அந்த மர்ம போன் எண்ணை, குறித்து எடுத்து வந்திருந்தாள், தோழியின் மகள்.
அந்த நபர் யார் என்று தெரிந்து கொள்ள, அந்த எண்ணுக்கு போன் செய்து, 'டாஸ்மாக்'கில் இருந்த அவனை மடக்கி பிடித்து விசாரித்தனர், தோழியின் உறவினர்கள்.
'சுண்டல் வாங்கிய போது, அழைப்பிதழின் பாதி பக்கம் இருந்தது. அதில் இருந்த, போன் எண்ணுக்கு, போன் செய்து, முழு போதையில் இருந்த நண்பன், பெண்ணைப் பற்றி, தவறாக சில வார்த்தைகளை பேசினான்...' என, உளறி கொட்டி இருக்கிறான், அந்த குடிகாரன்.
அவனை அடித்து உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், உறவினர்கள்.
மணமகன் வீட்டாரிடம், போலீஸ் மூலம் விஷயத்தை கூறியுள்ளனர்.
'அவசரப்பட்டு உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், வாய்க்கு வந்தபடி பேசி விட்டோம்...' எனக் கூறி, மன்னிப்பு கேட்டு, தோழியின் மகளை அழைத்து சென்றனர், மாப்பிள்ளை வீட்டார்.
திருமண பத்திரிகையில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் போன் எண்களை அச்சிடுவது பெரிய தவறு என்பதை, அறிய வைத்தது, இச்சம்பவம்.
நண்பர்களே... போன் எண் தேவைபடுவோருக்கு மட்டும், தனிபட்ட முறையில் தாருங்கள். திருமண அழைப்பிதழில் அச்சிடுவதை, தவிர்த்து விடுங்கள்.
- அ. சாரதா, தர்மபுரி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
12-ஜன-202109:01:11 IST Report Abuse
கதிரழகன், SSLC வெளிநாட்டு மாப்பிளை ன்னா விவரம் தெரிஞ்சு கட்டிக்கோங்க. அங்க வீட்டு வேலை காரி கெடையாது, நீயே துணி தோச்சு பாத்திரம் கக்கூசு களுவனும். நெனவுல வெச்சுக்கோங்க.
Rate this:
Manian - Chennai,ஈரான்
12-ஜன-202110:55:24 IST Report Abuse
Manianஉங்கள் எச்சரிக்கை சிலருக்கு பொருந்தும். ஒரு சின்ன திருத்தம்:. பாத்திரம் தேய்க்க அங்கே மிஷன்கள் உள்ளதாம் (டிஷ்வாஷர் - dishwasher) . அதில் எச்சில் பாத்திரங்களை அடுக்கி (அதுக்கும் முறை இருக்கிறதாம் ) , சோப்பு தூள் (அத்துக்கனுன்னு தனியா dishwasher detergent இருக்குதாம்) போட்டு ஸ்விட்சை போட்டால் 1/2-1 மணி நேரத்தில், கழுவி, சுத்தம் செய்து காய வைத்து விடும். இதை பொதுவாக அங்கே போன நம்ம பயலுகளும் செய்குறானுகளாம் கார்பெட் தரை விரிப்பு, டைல் போட்ட தரையை வாரம் ஒரு முறை வாக்குவம் கிளீன் செய்வார்கள். பலர் வீடுகளில் 'ரும்பா Rumba ' ) என்ற தானே இயங்கி (Self propelled) சுத்தம் செய்யும் சுழல் வாக்குவம் கிளீனர்கள் இருக்கிறதாம் ஆகவே, பிள்ளை பெறுதல், வளர்த்தலுக்கு தாத்தா-பாட்டிங்க கம்மிதானாம்...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-ஜன-202113:22:04 IST Report Abuse
A.George Alphonse இந்த காலம் டிஜிட்டல் மயமானது.phone numbers wedding card இல் இருந்ததால்திருமணம் நடக்கும் இடத்தின் முகவரி தெரியாதவர்கள் போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளாலா ம். வேண்டாம் என்று ஆலோசனை கூறுவது ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல.
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
16-ஜன-202114:53:08 IST Report Abuse
தமிழ்வேள்அதற்கு திருமண மண்டபத்தின் போன் நம்பரை கொடுக்கலாம் ..பிரச்சினை வராது .....இப்போது எல்லா பயலும் கூகுளை மேப்பை வைத்துக்கொண்டு அலைகிறார்கள் .....திருமண மண்டபத்துக்காரரே சொன்னாலும் கூட கூகுல் மேப் சொன்னால் தான் நம்புவார்கள் ...அப்புறம் என்ன ?...
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
10-ஜன-202103:06:20 IST Report Abuse
Manian இந்திராணி தங்கவேல், சென்னை: இந்தியாவில் பிறந்ததால், பிறவி குணத்துக்கு மட்டை வைத்துக் கட்ட முடியுமா? பையனிடம் நீங்கள் சொல்வதும் சரிதான்.அதே போல உங்கள் மரபணுவில் கோளாறு, பரம்பரை வியாதிகள், விந்துவில் "பெண்" அணுக்கள் அதிகமாக இருந்து ஆண் குழந்தைகளே பிறக்காவிட்டால் அவளை விவாக ரத்து செய்வீர்களா, இதுவரை திருமணம் செய்து கொள்ள ஏதாவது பால் வினை நோய் காரணமா, உங்களின் டெஸ்டிராஸ்டோன் (Testosterone ) அளவு அதிகமா என்றும் பார்க்க வேண்டாமா? பக்கத்தில் "குட் ஷெப் பர்டு- Good Shepherd Medical Center" மருத்துவகம் போய் வரலாமா. எல்லாம் "சரி" என்றால் எங்கள் சிலவு. இல்லை என்றால் உங்கள் நலத்திற்கு எங்கள் பிரார்த்தனைகள் என்று ஏன் சொல்லவில்லை? பெண் வீட்டாருக்கும் லண்டனிலே இருந்தாலும், "பிறவிக் குணம்" மாறவில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X