அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
00:00

* ஓ.எ.கே.ஆர்.சரவணன், சென்னை: 'அரசு ஊழியர்கள், முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்...' என, நீதிபதிகள், கருத்து தெரிவித்ததைப் பற்றி...
உண்மை தான்... அதைத் தான் செய்ய வேண்டும்! அப்படி செய்தால், நிதி உதவி கேட்டு, மத்திய அரசிடம் தொங்காது மாநிலங்கள்!

எம். கார்த்திகா, கடலுார்: தமிழகத்தில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறதே...
ஹிந்தியை எதிர்த்து போராடுபவர்களுக்கே, 'தமிழ்' என்று சொல்லத் தெரியாதே... அவர்கள், 'தமிள்' என்று தான் உச்சரிக்கின்றனர். இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி, நகரங்களில், ஆங்கிலம்; மற்ற மாநிலங்களில், ஹிந்தி!

பா. ஜெயப்பிரகாஷ், கோவை: 'தி.மு.க., - திருமாவளவன் போன்ற தீய சக்திகளை, இஸ்லாமியர்கள் மற்றும் மற்ற மத மக்கள் புறக்கணிக்க வேண்டும்...' என்று, 'ஏகத்துவ ஜமாத்' நிறுவனர், இப்ராஹிம் கூறியுள்ளது சரியா?
சரியே! எல்லா மதத்தினரும் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே சொல்லியுள்ளார். அவர் கூறிய மேற்கண்டவர்கள் தான், மத வேற்றுமையைத் துாண்டுகின்றனர், ஓட்டுக்காக!

ஆ. மாடக்கண்ணு, தென்காசி: கடந்த ஒன்பது மாதங்களாக உங்கள் பதிலுக்காக, வாரம் தோறும் கேள்வி அனுப்பி வருகிறேன். ஆனால், இதுவரை ஒரு பதிலும் இல்லையே ஏன்?
உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறமை, என்னிடம் இல்லையோ என, நினைக்கிறேன்! இதோ, இன்று உங்கள் கேள்வி வெளியாகி விட்டதே; சந்தோஷம் தானே!

என். கணேசன், நெய்வேலி: இந்திய பெண் ஒருவர், அமெரிக்காவில் துணை ஜனாதிபதி ஆகி விட்டாரே... நானும் அமெரிக்க பிரஜை ஆகி விட்டால், என்னாலும் முடியுமா?
முடியாது! அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்!

* சி. அக்கினி, மதுரை: வி.ஆர்.எஸ்., திட்டத்தின் கீழ், தொலைபேசி ஊழியர்களை, வீட்டிற்கு அனுப்பியது பற்றி...
சந்தோஷமாக இருக்கின்றனர்; சில, பல லட்சம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது... அத்துடன், ஓய்வூதியமும் ஆயிரங்களில் கிடைக்கிறது. சந்தோஷமாக இருக்கின்றனர். சொன்னவர், 'ரிட்டயர்' ஆன நண்பர் ஒருவர்!
தொலைத் தொடர்பு துறையை தனியார் மயமாக்கும் இந்த முயற்சிக்கு, மத்திய அரசை பாராட்டுவோம்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
11-ஜன-202113:49:14 IST Report Abuse
Manian ஓ.எ.கே.ஆர்.சரவணன்: நீதிபதிகள் சொன்னாலும் அது முதலில் சட்டமாக வேண்டுமே அந்த சட்டம் இயற்றும் எம்பிக்கள் பலரும் கடுங்காவல் தண்டனை பெறத் தக்க குற்றவாளிகள் தானே அவர்களை தேர்ந்தெடுப்பவர்களில் 70-80 % ஓட்டை விற்கும் பாமர மக்களும் குற்றவாளிகள் தானே மேலும் ரோமானியர் காலாதிலேயே லஞ்சம் (காப்பாற்ற தோற்றவர்கள் தரும் சாவு-தடுப்பு தொகை ) ஆரம்பித்துவிட்டதே. ஆகவே, எதுவும் நடக்காது என்று தெரிந்தே நீதிபதிகள் கருத்து சொல்கிறார்கள். அப்படி சட்டம் இருந்தால் அவர்களில் பலரும் சொத்திழப்பார்களே அப்போது அடிப்படை சுதந்திரம் பறிக்கப்படுகிறதே என்று சொல்ல மாட்டார்களா? ஆகவே, மாமூல் அளவை குறைக்கும் வழிகளை அவர்கள் சொல்லவில்லையே. 90 % குறைந்தால் போதும், அமெரிக்காவைப் போல
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
10-ஜன-202105:37:39 IST Report Abuse
Manian எம். கார்த்திகா, கடலுார்: இதில் அமகூச (அடிமட்ட கூவுவோர் சங்கம்/அடிமட்ட கூலிப்படை சங்கம்) அங்கத்தினர்களே அதிகம் என்று அரசியல் வியாதி ஏழுபடை இளமாரன் சொல்கிறார். கூவுதல் படை இருப்பதை மறந்தால் கூலி படையாக மாறுவது வம்பு இந்தி ஒழிகன்னா வடநாட்டானுக்கும் புரியாதே என்கிறார் டியூடோரில் காலேசில் 5 வருசம் படிச்சு, படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலைனா அப்பொ ஹிந்திதானே காரணம், இட ஒதுக்கீட்டிலே 60% கெடைக்காத வேலைக்கு ஹிந்திதான் காரணம்காறு தொளபதி, திருமா,வைகோ பொய்யா சொல்றாங்க என்று ஓசிமணி தேவன் கேட்பதர்க்கு ஏன் மோடி நேர்ல வந்து பதில் சொல்லை அதைத்தான் எதிர்குறோங்காறு சீமான் என்னத்த சொல்ல?
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
10-ஜன-202105:24:41 IST Report Abuse
Manian சி. அக்கினி, மதுரை: அவர்கள் அற்ப சந்தோஷத்தை பற்றி கவலை வேண்டாம். அவர்கள் இருப்பிடம் எல்லா திருடர்களுக்கும், கிரிட் கார்டு திருடர்களுக்கும், வரப்போற மாப்பிள்ளைகளுக்கும், பணம் தேவையான சொந்தங்களுக்கும்/நண்பர்களுக்கும் தெரியம். வீஆர்எஸ் வாங்கியவர்கள் நேர்மையாக வேலை செய்தவர்களா என்று சீக்கிரம் தெரிந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X