அன்பு பொங்கட்டும்!
பொங்கும் நல்லுணவில்
உடற் பசி அடங்குமெனில்
பொங்கும் நல்லுணர்வில்
மனதின் பசியனைத்தும்
அடங்கியே தீரும்!
பொறுமை பொங்கும்போது
பதற்றத்தின் தவறு
அடங்கி விடுகிறது!
முயற்சி பொங்கும்போது
தடைகளின் வீரியம்
அடங்கி விடுகிறது!
ஊக்கம் பொங்கும்போது
தடைகளின் தலை துாக்கல்
அடங்கி விடுகிறது!
தைரியம் பொங்கும்போது
அச்சத்தின் நடுக்கம்
அடங்கி விடுகிறது!
கருணை பொங்கும்போது
காழ்ப்புணர்ச்சியின் வெறுப்பு
அடங்கி விடுகிறது!
பணிவு பொங்கும்போது
ஆணவத்தின் ஆட்டம்
அடங்கி விடுகிறது!
இன்சொல் பொங்கும்போது
அவதுாறின் அவலம்
அடங்கி விடுகிறது!
நேர்மை பொங்கும்போது
கயமையின் ஆட்சி
அடங்கி விடுகிறது!
அனைவருக்குள்ளும்
அனைவரின் மீதான
அன்பு பொங்கும்போது
அகிலத்தின் தேவை யாவும்
அடங்கி விடுகிறது...
அன்பு பொங்கட்டும்!
கீர்த்தி, சென்னை.