உலக சாதனை சகோதரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2021
00:00

''சாதிக்க வயது ஒரு தடையில்லை. சிறுவயதிலும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்து உலக சாதனை புரிந்த சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

சிவகங்கை அருகே அலவாக்கோட்டை சரவண செல்வம், நித்யா தம்பதி மகள்கள் எஸ்.கயல்விழி, எஸ்.கீர்த்தனா பெரியநாயகி. இதில், கயல்விழி 9ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி படிப்பின் போதே பொது அறிவில் சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வந்தார். முதன் முயற்சியாக கணிதத்தில் உள்ள 118 குறியீடுகளை பின்னால் இருந்து வேகமாக எழுதும் பழக்கத்தை துவக்கினார். தொடர் முயற்சியால், 1 நிமிடம் 32 வினாடியில் இச்சாதனையை முறியடித்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து, தங்கபதக்கம் பெற்றார். மருத்துவத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு அதற்கான படிப்புகளில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பயனாக திரையில் மருத்துவம் சார்ந்த படங்களை வேகமாக வெளியிடும் போது அதை பார்த்த நொடியில் அத்துறை சார்ந்த படிப்புகளை தெரிவித்து விடுகிறார். அந்த வகையில் 30வினாடியில் 38 மருத்துவ படிப்புகளின் துறைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

தைவானில் உள்ள ஆசியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் 48 நாடுகளுக்கிடையே நடத்திய சாதனையாளர் போட்டியில் பங்கேற்ற இம்மாணவி பிளாட்டினம் பதக்கம் பெற்றார். தினமலர் நாளிதழ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென நடத்திய 'நாசா' செல்வதற்கான வினாடிவினா போட்டியில் 'தினமலர்' பதக்கத்தை வென்றார். இது போன்று பல்வேறு சாதனைகள் மூலம் கின்னஸ் சாதனை பெற முயற்சித்து வருகிறார்.

இவரது சகோதரியான எஸ்.கீர்த்தனா பெரியநாயகி 6ம் வகுப்பு படிக்கிறார். இவரும் முதற்கட்ட சாதனையாக நாட்டின் கொடிகள் பற்றிய படங்களை வேகமாக காண்பித்த நொடியில், அது எந்த நாட்டு கொடி என சொல்லிவிடுவார். அந்தளவிற்கு நாடுகளின் கொடிகள் குறித்து அதிகளவில் விபரங்களை சேகரித்துள்ளார்.

இந்தியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் நடத்திய போட்டியில் 30 வினாடியில் 58 நாட்டின் கொடிகளின் பெயர்களை தெரிவித்து சாதனை புரிந்தார்.

இவருக்கு அந்நிறுவனம் தங்கபதக்கம், பரிசு வழங்கி சிறப்பித்தது. சகோதரிகள் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சிக்கு பெற்றோர் பெரிதும் உதவி வருகின்றனர்.

இவர்களை பாராட்ட 96883 42121.

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-202115:34:33 IST Report Abuse
Subramanian இரு குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X