தை மகளே வருக! நல்வாழ்வு தருக!மகர சங்கராந்தி விளக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2021
00:00

கேரளாவிலும், வடமாநிலங்களிலும் பொங்கலை மகர சங்கராந்தி என்கின்றனர். 'கிராந்தி' என்ற சொல்லே 'கராந்தி' ஆனது. 'கிராந்தி' என்றால் மாறுதல். 'சங்' என்றால் 'நல்ல' என பொருள். 'நல்ல மாற்றம்' என்பதையே சங்கராந்தி என்கிறோம். சூரியன் மகர ராசியில் நுழையும் நல்ல நாளையே மகர சங்கராந்தி என்கிறார்கள். தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் எனப்படும். இதில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது சிறப்பு. பிதாமகரான பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடந்த போது உயிர் துறக்க மகர சங்கராந்தியை எதிர்பார்த்து காத்திருந்தார்.

நாளின் பெயரில் ஊர்

உலகின் எல்லா நாடுகளிலும் சூரிய வழிபாடு உள்ளது. இந்தியாவில் சூரியனுக்கு 'சௌரம்' என்ற தனி மதமே இருந்தது. இதை சனாதன தர்மம் என்னும் ஹிந்து மதத்துடன் இணைத்தார் ஆதிசங்கரர். 'மண்டல பிரம்மோபநிஷதம்' என்னும் உபநிடதம் சூரியனை முழுமுதற்கடவுளாக சொல்கிறது. யாக்ஞவல்கிய மகரிஷிக்கு சூரியபகவான் நேரில் தோன்றி இந்த உபநிடதத்தை உபதேசித்தார். பிற்காலத்தில் நவக்கிரகங்களில் ஒன்றாகி வாரத்தின் முதல் நாளுக்கு உரியவரானார். இந்நாளின் பெயரால் 'தலை ஞாயிறு' என்றொரு ஊரும் இருக்கிறது.

பயம் போக்குபவர்
பறவை, விலங்கு என எல்லா உயிர்களும் இருட்டைக் கண்டு பயப்படுகின்றன. பொழுது புலர்ந்ததும் மகிழ்ச்சியில் பறவைகள் கீச்சிடுகின்றன. சோம்பல் முறித்து இரை தேடப் புறப்படுகின்றன. சூரியன் பயம் போக்குபவராகவும், உழைப்பின் சின்னமாகவும் இருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், அபயகரம் கொண்டவராக சூரியன் இருக்கிறார். அபயகரம் என்பதற்கு 'பயம் போக்கும் கை' என்பது பொருள். ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களின் பயத்தை போக்குவதால் இந்த கை சூரியனுக்கு இருப்பதே பொருத்தமானது.

சீதா கல்யாணம் நடத்துங்க!
ராமனே பரமாத்மா (கடவுள்), சீதை பிரகிருதி (உலக ஜீவன்). அசுர சக்திகளால் ராமனை விட்டுப் பிரிந்தாள் சீதை. பதி பக்தியால் மீண்டும் கணவரை அடையும் பேறு பெற்றாள். உலக உயிர்களும் ராட்சஷ குணங்களால் கடவுளை சிந்திக்காமல் வாழ்கின்றன. அசுர குணங்களை கைவிட்டு, கடவுளே உண்மை என்ற தத்துவத்தை உணர வேண்டும். இதற்காகவே சீதா கல்யாணம் நடத்தப்படுகிறது.
தை மாதத்தில் நல்ல நாளை தேர்ந்தெடுத்து வேதியர்களின் முன்னிலையில் கோயில்களில் சீதா கல்யாணம் நடத்தலாம். இதை தரிசிக்கும் கன்னியருக்கு நல்ல மணவாழ்வு அமையும்.

தமிழ் மாதக் கணக்கு
ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நாட்கள் ஒரு ராசியில் சஞ்சரிக்கும். குரு ஓராண்டும், ராகு, கேது ஒன்றரை ஆண்டும், சனி இரண்டரை ஆண்டுகளும் ஒரு ராசியில் தங்கியிருப்பர். இதுபோல சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்குவார். இவர் மேஷ ராசியில் நுழையும் நாள் தமிழ் புத்தாண்டு அதாவது சித்திரை முதல்நாள். ரிஷப ராசியில் நுழையும் நாள் வைகாசி. மிதுனத்தில் ஆனி, கடகத்தில் ஆடி, சிம்மத்தில் ஆவணி, கன்னியில் புரட்டாசி, துலாமில் ஐப்பசி, விருச்சிகத்தில் கார்த்திகை, தனுசுவில் மார்கழி, மகரத்தில் தை, கும்பத்தில் மாசி, மீனத்தில் நுழையும் போது பங்குனி என தமிழ் மாதங்கள் கணக்கிடப்படும். இவற்றில் மகரத்தில் நுழையும் நாளே மகர சங்கராந்தி தை பொங்கல் என முக்கியத்துவம் பெறுகின்றன.

மகப்பேறு தரும் மந்திரம்
கிருஷ்ணர் அவதரித்த யது குலத்தில் சூரன் என்ற மன்னர் இருந்தார். அவருக்கு வசுதேவர் உள்ளிட்ட பத்து மகன்களும். பிருக்தை உள்ளிட்ட ஐந்து மகள்களும் இருந்தனர். வசுதேவரே பகவான் கிருஷ்ணரைப் பெற்ற தந்தை. சூரனுக்கு குந்திபோஜன் என்றொரு நண்பர் இருந்தார். அவருக்கு குழந்தை இல்லை. சூரனிடம், “நண்பரே! உனக்கு 15 பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கோ ஒருவர் கூட இல்லை. உன் மகள் பிருக்தையை எனக்கு தத்து கொடுத்தால் மகளாக வளர்ப்பேன்” என்றார். கோரிக்கையை ஏற்ற சூரன் மகளை ஒப்படைத்தார்.
குந்தி போஜனின் அரண்மனையில் வளர்ந்த காரணத்தால் பிருக்தையை அனைவரும் 'குந்தி' என அழைத்தனர். ஒருமுறை துர்வாச முனிவர் அரண்மனையில் தங்கிய போது, குந்தி பணிவிடை செய்தாள். இதனால் மகிழ்ந்த துர்வாசர், அவளுக்கு சூரியன், எமன், இந்திரன், வாயு, அசுவினி தேவர்களுக்குரிய மகப்பேறு மந்திரத்தை உபதேசித்தார். இந்த மந்திரத்தை ஜபித்தால் பிள்ளை வரம் கிடைக்கும்'' என்றார். அதை பரிசோதிக்க எண்ணிய குந்தி ஓரிடத்தில் அமர்ந்து சூரிய மந்திரம் ஜபித்தாள். சூரியனும் தன் அம்சமான குழந்தையை அளித்து மறைந்தார். அப்படி குந்திக்கு மகனாக பிறந்தவனே கர்ணன்.

சூரியனை வழிபட தீரும் பிரச்னை
சூரியனை வணங்கினால் நோய் தீர்ந்து உடல்நலம், ஆயுள் பெருகும் என்பர். இது தவிர, தேவையற்ற இடத்திற்கு பணி காரணமாகவோ, பிற காரணங்களாலோ மாறிச் சென்று விடுவோமோ என்ற பயம் கொண்டவர்கள், நீண்ட நாள் வியாதியால் அவதிப்படுபவர்கள், பணம் விரயமாகும் நிலை உள்ளவர்கள், பார்வை இழக்கும் நிலையில் இருப்பவர்கள், குற்றம் செய்யாமல் வழக்குகளில் சிக்கியவர்கள், பலனின்றி வெளியூர் பயணம் செய்பவர்கள், கடன் தொல்லையால் வீடு, பிற சொத்துக்களை விற்றுவிட்டு எங்கு செல்வதென தெரியாமல் தவிப்பவர்கள் ஆகியோருக்கெல்லாம் சூரிய வழிபாடு நன்மையளிக்கும். ஞாயிறன்று சூரியனை வழிபட்டு வந்தால் பிரச்னை மறைந்து நிம்மதியுடைவர்.

நரகம் டூ சொர்க்கம்
சூரியன் தரும் யோசனை காலமாகி விட்ட நம் முன்னோர் பற்றி நம் மனசாட்சிக்கே நன்றாகத் தெரியும். “என் தாய் மருமகளைக் கொடுமைப்படுத்தினாள். என் தந்தை தினமும் குடித்து விட்டு என் தாயை அடித்தார். என் உறவுக்காரர் அரசுப்பணியில் இருந்து லஞ்சம் வாங்கினார். இன்னொருவர் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகளைத் திருடியதால் ஒரு திருமணமே நின்று போனது. என் சகோதரர் ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு இன்னொருத்தியை திருமணம் செய்தார்”. இத்தகைய கொடிய பாவங்கள் செய்தவர்களெல்லாம், காலமான பின் நரகத்தில் அல்லல்படுவர். இவர்களை சொர்க்கம் அனுப்ப, பூமியில் உள்ள அவரது வாரிசுகள் அனுஷ்டிக்கும் விரதம் பற்றி சூரிய பகவானே சொல்லியிருக்கிறார். சித்திரை மாத வளர்பிறை அல்லது தேய்பிறை சதுர்த்தசி திதியன்று விரதம் இருந்து ஏழைகளுக்கு விளக்கு தானம் செய்ய வேண்டும். வசதி இல்லாதவர்கள் மண் அகல் கொடுத்தாலும் போதும். இப்படி செய்தால் நரகத்தில் அவஸ்தைப்படும் முன்னோர்கள் சொர்க்கம் செல்வர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் பொங்கல் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X