பாயும்புலி திவ்யா... பாகுபலி திவாகர்... - 'ஹிட்' ஆன 'பிட்னஸ்' ஜோடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2021
00:00

'பலே... பலே... பாகுபலி பயமின்றி பாயும் புலி' என மதுரை டூ சென்னை சென்று பாடி பில்டிங், பிட்னஸ் துறையில் கெத்துகாட்டி போட்டிகளில் திறமையை தெறிக்கவிடுகிறது திவ்யா, திவாகர் ஜோடி. 'வெயிட்'டான வாழ்க்கை பயணம் குறித்து 'பிரைட்'டாக மனம் திறக்கிறார் திவ்யா.

பாடி பில்டிங், பிட்னஸ் துறையில் ஆர்வம் எப்படி?
நான் மதுரை. அப்பா ராஜ்குமார் காவல்துறை, அம்மா லீலா ஆசிரியர். விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் 4ம் வகுப்பு முதல் காலேஜ் வரை 100 ஸ்விம்மிங் போட்டிக்கு போயிருக்கேன். நேஷனல் மெடல் வாங்கி இருக்கேன். ஐ.பி.எஸ்., படிக்க சென்னைக்கு வந்தேன். வெயிட் குறைக்க ஜிம் போன போது பாடி பில்டிங், பிட்னஸ் ஆர்வம் வந்ததால் அந்த துறைக்கு வந்தாச்சு.

கணவர் திவாகரும் பெரிய பாடி பில்டர் தானே?
ஆமா, அவரும் மதுரை, குடும்ப நண்பர்... வெயிட் குறைக்க திவாகர் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்தேன். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரம் கல்யாண பேச்சு வந்தது. ஒரே துறையில் இருக்கும் நாங்கள் பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணினோம். நாமே ஸ்டேஜ் ஏறலாம்னு ஒன்றாக போட்டிகளுக்கு போறோம். 'டி2 பாடி டிராஸ்பர்மேஷன்' பெயரில் பயிற்சி கொடுக்கிறோம், ஜிம்மும் ஆரம்பிக்கிறோம்.

பாடி பில்டிங் துறையில் உங்கள் பிரிவு என்ன?
பெண்களுக்கான பாடி பில்டிங், பிசிக்ஸ், பிகினி அத்லட் என்ற3 பிரிவுகளில் நான் பிகினி பிரிவில் போட்டியில் பங்கேற்கிறேன். 3 பிரிவுகளுக்கும் ஒவ்வொரு விதமாக ஒர்க்கவுட் செய்து பாடிஷேப் பண்ணனும். இந்தியாவில் பிகினி பிரிவு பிரபலமாக இருக்குது.

திறமையை நிரூபிக்க காத்திருக்கும் போட்டிகள் ?
அடுத்து நடக்கும் பாடி பில்டிங் போட்டியில் திவாகரும், பிகினி அத்லட் போட்டியில் நானும் பங்கேற்க போறோம். இந்தியாவில் இதுவரை அறிமுகம் ஆகாத பெண்களுக்கான ஒரு பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்கிறேன்.

உங்கள் பாடி பிட்டாக எத்தனை ஆண்டுகள் ஆனது?
ஒன்றரை ஆண்டுகள். ஆனால் நான் நினைத்த பிட்னஸ் இன்னும் வராததால் முயற்சி பண்றேன். நம்ம பாடி கிட்ட பாஸிட்டிவா பேசி, டயட் இருந்தால் நினைத்த ஷேப் கொண்டு வரலாம். என் வயது 25, எடை 75 கிலோ, உயரம் 5.7 அடி.

திவாகர் கொடுக்கும் உற்சாகம்...?
திவாகர் 100 பிளஸ் எடை பிரிவுகளில் பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்கிறார். இதுவரை 24 விருதுகள் பெற்றுள்ளார். வயது 27, எடை 120, உயரம் 6.1 அடி. அவர் இல்லாமல் நான் இந்த அளவு முன்னேறி இருக்க முடியாது. கணவர் என்பதை விட நல்ல நண்பராக இருக்கிறார்.

பாடி பிட்னஸ் ஒர்க்கவுட் யாரெல்லாம் பண்ணலாம்?
இதுக்கு வயது வரம்பே இல்லை. ஆரம்பத்தில் ஒர்க்கவுட் பண்ணும் போது வயதான தோற்றம் வரும். போக போக வயது குறைந்த தோற்றமாகும். நோயாளிகள், சிகிச்சையில் இருப் பவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படி ஒர்க்கவுட் பண்ணலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் பொங்கல் மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X