இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2021
00:00

உறவுக்கு கை கொடுப்போம்!
என் பெற்றோருக்கு, இரு ஆண், இரு பெண் என, நான்கு பேர். நால்வருக்கும் திருமணம் முடிந்து, அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம்.
பெற்றோர் மறைவுக்கு பின், சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், சில ஆண்டுகளாக மூத்த அண்ணன், மற்ற மூவருடன் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை.
சமீபத்தில், என் வீட்டுக்கு, மூத்த அண்ணனின் மகள் வந்து, 'அத்தை... என்னை காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள, அப்பா சம்மதித்து விட்டார். ஆனால், ஒரு பிரச்னை...
'நெருங்கிய உறவினர்களான, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி போன்றோர் கட்டாயம் திருமணத்திற்கு வந்து, நலங்கு வைப்பது, ஆரத்தி எடுப்பது போன்ற அனைத்து சடங்குகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று, கூறி விட்டார், மாப்பிள்ளையின் அப்பா.
'அப்பாவுக்கும் இந்த வரனை விட மனமில்லை. 'ஈகோ' காரணமாக, அப்பா வரவில்லை. தயவுசெய்து நீங்கள் அனைவரும் வந்து, இந்த திருமணத்தை நடத்திக் கொடுக்க வேண்டும்...' என, காலில் விழுந்து அழுதாள்.
இதேபோல் மற்ற சகோதரன், சகோதரி வீட்டுக்கும் சென்று பேசியிருக்கிறாள்.
நாங்கள் மூவரும் கலந்து பேசி, எங்களுக்குரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு, திருமணத்துக்கு செல்ல முடிவு செய்தோம்.
திருமணம் இனிதே நடந்தேறியது.
திடீரென, மூத்த அண்ணன் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். உடனே மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்ததில், இதயக் கோளாறு இருப்பது தெரிய வந்தது. அந்த நேரத்தில் உடன் பிறந்தோர் அனைவரும், ஆளுக்கொரு வேலையாக செய்து முடித்தோம்.
பெரிய அண்ணன், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும், எங்கள் மூவரையும் கூப்பிட்டு, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, எங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களைப் பிரித்து கொடுத்தார்.
மேலும், 'வெகு நாட்களாக மனதில் நான் கொண்ட காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, கோபம் ஆகியவையே, இதய நோய்க்கு காரணமாக இருக்கலாம் என, மருத்துவர் கூறினார். இனி, நான் திருந்தி விட்டேன்; அன்பால் உறவுகளை அரவணைப்பேன்...' என்றார்.
உறவுகளுக்கு பாலம் அமைத்துக் கொடுத்த சம்பந்தியை, நாங்கள் அனைவரும் மனதார வாழ்த்தினோம்.
- கலா ஜெயக்குமார்,
சென்னை
.

பாராட்டத்தக்க, ஆசிரியையின் செயல்!
எங்கள் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவர், அங்கு பயிலும், ஆயிரம் மாணவர்களுக்கும், பென்சிலை, பரிசாக கொடுத்தார். அவர், பென்சிலை கொடுத்தது அதிசயமில்லை. ஒவ்வொரு பென்சிலின் அடியிலும், சில தாவர விதைகளை ஒரு குப்பியில் வைத்து பொருத்தியிருந்தார்.
'மாணவர்கள் அனைவரும், தாவர விதைகளை வீட்டிலோ அல்லது பள்ளியிலோ விதைத்து, வளரும் செடிக்கு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்...' என்று அறிவுறுத்தினார்.
மரம் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை, வாயால் சொல்லிக் கொண்டிருக்காமல், செயலில் காட்டியது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
ஒவ்வொரு மாணவரும், அவருக்கு கொடுக்கப் பட்ட விதைகளை மரமாக்கினால், இவரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். இவரின் இந்த முயற்சியை போன்று, எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர்கள் செய்தால், வளரும் இளம் தலைமுறையினர், மரம் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்வர்.
இதனால், மண் வளம் பெருகுவதோடு, மழை வளமும் பெருகும்.
- கே.கே. வெங்கடேசன்,
செங்கல்பட்டு.


போற்றுதலுக்குரிய திருநங்கை!
பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன். குடிபோதை தலைக்கேறிய நிலையில், நடுத்தர வயதுடைய ஒருவர், படுத்துக் கிடந்தார். நான் உட்பட, யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
அப்போது, யதார்த்தமாக அங்கு வந்த திருநங்கை ஒருவர், குடிபோதைக்கு உள்ளானவரை துாக்கி, தான் வைத்திருந்த பாட்டில் தண்ணீரை முகத்தில் தெளித்து, வாயினுள் கொஞ்சம் ஊற்றினார். அருகிலிருந்த கடைக்கு சென்று, பழச்சாறு வாங்கி வந்து கொடுத்தார்.
கொஞ்ச நேரத்தில், மயக்க நிலையிலிருந்து மீண்டெழுந்த போதை ஆசாமி, திருநங்கைக்கு நன்றி கூறி, 'இனிமேல், அளவுக்கு அதிகமாக குடித்து, இதுபோன்று, கண்ட இடங்களில் வீழ்ந்து கிடக்க மாட்டேன்.
'முடிந்தவரை, குடும்பத்தை கெடுக்கும் இந்த குடி பழக்கத்தை அறவே மறக்கப் போகிறேன்...' என்று உறுதி அளித்து, அங்கிருந்து மெதுவாக நடையை கட்டினார்.
'ஆபத்து யாருக்கோ, நமக்கேன் வம்பு...' என நின்றிருந்த என்னைப் போன்ற அனைவருக்கும், நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது, திருநங்கையின் செயல்.
படுத்து கிடப்பவர், குடிகாரன் என்றில்லாமல், அவரும் மனிதர் தான் என்று நினைத்து, உதவி செய்த திருநங்கையை, அதன்பின், எங்கு பார்த்தாலும், வணக்கம் சொல்லி, மரியாதை கொடுக்கிறேன்.
- ரா. ராஜ்மோகன், திண்டிவனம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bhuvana - newdelhi,இந்தியா
21-ஜன-202116:00:02 IST Report Abuse
bhuvana சமீபத்தில் EPF Officeஐ தொடர்புக் கொள்ள வேண்டியிருந்தது. அவ்வலுவலகம் இடம் மாறியதால். தொலைபேசி எண்ணும் மாறிவிட்டது. அதனால் (கொரனா தொற்று பரவும் நேரத்தில்) நேராக செல்ல நேரிட்டது. பல அரசு அலுவலகங்கள், வங்கிகள் இடம் மாறி, வேறு இடங்களில் செயல் படுகின்றன. அதனால் அதன் தொலைபேசி எண்கள் அந்த பகுதிக்குட்பட்ட எக்ஸ்சேஞ்களுக்கு உட்பட்ட நம்பர்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பல அலுவலங்கள் லேண்ட் லைன் போன்களை சரண்டர் செய்தும் விட்டனர். அவசரத்திற்கு இவர்களை தொடர்புக் கொள்ள முடிவதில்லை. Googleலும் போன் நம்பர்கள் மாற்றப்படாமல், ( செய்யாமல்) உள்ளனர். இதனால் வெளியூர் அன்பர்கள் விண்ணப்பங்கள் குறித்து விசாரிக்க முடிவதில்லை. அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Rate this:
Cancel
parentsin@gmail.com - chennai,ஆஸ்திரேலியா
18-ஜன-202117:10:41 IST Report Abuse
parentsin@gmail.com சம்பந்தி இவர்கள் குடும்ப கதையை விசாரித்திருப்பர் அதனால்தான் அப்படிப்பட்ட கண்டிஷனை போட்டு குடும்பம் ஒன்று சேர வாய்த்து இருக்கிறார். பரவாயில்லை நல்லது நாத்து இருக்கிறது. வாழ்க இந்த குடும்பமும், மணமான தம்பதியும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-ஜன-202111:38:56 IST Report Abuse
D.Ambujavalli இந்த 'திருநங்கை' உதவும் கதை ஒன்று படித்தேன். அவர்களின் உதவும் குணத்துக்கு முன் பால் பேதம் பார்ப்பது மகா பாவம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X