அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2021
00:00

எஸ். பிரேமாவதி, சென்னை: அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, வெள்ளை செருப்பு அணிகின்றனர்?
இவற்றை அணிந்தால் தான், 'கறுப்பு' கைக்கு வருமோ என்னவோ!

ஆர். கணேசன், தஞ்சாவூர்: கே.எஸ்.அழகிரி, மு.க.அழகிரி ஒப்பிடுக...
இரண்டாமவர், தென் தமிழகத்தில் சக்தி வாய்ந்தவர்; முதலாமவர், எந்த சக்தியும் இல்லாமல், தி.மு.க.,விற்கு கொடி பிடிப்பவர்; இது தான் வித்தியாசம்!

* எஸ். குந்தலா, திருச்சி: உண்மையே பேசும் அரசியல்வாதி, இப்போது எங்கே இருக்கிறார்... அவரை பார்க்க வேண்டுமே!
டில்லியில் உள்ள ராஜ்கட் சமாதியில் இருக்கிறார்... அவர் தான், காந்தி... அங்கே சென்றால், அவரது சமாதியைப் பாருங்கள்!

வி. கனகவல்லி, துாத்துக்குடி: தோழி, என்னை ஏமாற்றுகிறாள்... நான் என்ன செய்வது?
ஏமாற்றுவது தெரிந்து விட்டது தானே... ஒன்றும் செய்ய வேண்டாம்! அவளுக்கு உரிய தண்டனையை அவளே பெறுவாள். பல காலம், பலரையும் அவளால் ஏமாற்ற முடியாது; நீ விழித்துக் கொள்!

* ஆர். நவநீலராய், சென்னை: பொங்கலுக்காக கொடுக்கும், 2,500 ரூபாய் தேர்தலுக்காகவா, பொங்கலுக்காகவா... உண்மையை சொல்லுங்க ஐயா...
இதுவரை வந்த பொங்கலை ஒட்டி, தேர்தல் வரவில்லை. அதனால், 1,000 ரூபாய் கொடுத்தனர். இப்போது, நிலைமை தலைகீழாகி விட்டதே! 2,500 ரூபாயின் காரணம், இப்போது புரிந்திருக்குமே!

அ. செந்தில்குமார், சூலுார்: உங்கள் கையெழுத்து அழகாக இருக்குமா?
மதுரையைச் சேர்ந்த இதய நோய் மருத்துவ நிபுணர் சங்குமணி, தன் மனைவியுடன் திருமணப் பத்திரிகை வைக்க அலுவலகம் வந்திருந்தார்; அப்போது நான், கேள்வி - பதில் எழுதிக் கொண்டிருந்தேன்.
பத்திரிகையை கொடுத்த பின், பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, கிளம்பும் நேரம், தம் மனைவியிடம், 'இதோ... அந்துமணியின் கையெழுத்தைப் பார்... எவ்வளவு அழகாக இருக்கிறது...' எனக் கூறவும், அவரும் தலை அசைத்தார்!
அப்போது தான், என் கையெழுத்தின் பெருமை எனக்கே புரிந்தது!

* ரா. மனகாவலன், சென்னை: கூட்டணி முடிவானதற்கு யார் காரணம்... அமித் ஷாவா, அ.தி.மு.க.,வா?
பொதுக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டாமல், கூட்டணியை அறிவித்தது யார்... இப்போது புரிகிறதா?

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-ஜன-202112:46:34 IST Report Abuse
D.Ambujavalli அருகிலேயே ஒரு ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று பதவி துறந்த நேர்மையாளரின் 'விஜய காட்' கூட இருக்கிறதே
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
18-ஜன-202102:09:56 IST Report Abuse
Manian எஸ். பிரேமாவதி, சென்னை: பதவிக்காக கட்சி மாறும் போது, கருப்பு மை சிலவுதான் உண்டு, வெள்ளை கருப்பாகும், மழை நீரில் (காவேரியில்) குளித்தால் காவி, புது துணி சிலவில்லையே பல கட்சி தாவிய காண்டிராக்டர் துணிமாற்றியார்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
18-ஜன-202101:32:58 IST Report Abuse
Manian ஆர். நவநீலராய், சென்னை: இதை அனுபவ பொருளாத புரிதல் முறை(Practical Economic Understanding Theory) இப்போது நடை முறைக்கு வந்துள்ளது. இந்த சித்தானந்த கண்டுபிடிப்பாளர் விஞ்ஞான திருடர் கருணா தான். டிவிஎஸ் போன்ற சிறந்த தமிழ் நாட்டு போக்குவரத்து தனியார் கம்பனிகளிடம், 2 வருச அவகாசம் தருகிறேன். அதன் பின் உங்கள் போக்குவரத்து(லாரிகள் இல்லை) நிறுவனம், பொதுநலம்(எங்கள் குடும்ப) கருதி, 3 கோடிக்கு வாங்கப்படும். எங்கள் பணிகளுக்கு 2 கோடி காசாக தரலாம் என்றாராம். சிறந்த ஓட்டுனர்கள் டிவிஎஸ் லாரி சர்வீஸுக்கு மாற்றம், எல்லா காயலாங்கடை பஸ்ஸுகள் போன்றவை அரசுக்கு சொந்தம். 2 கோடி ரூ ஆலோசனை பீஸ். இப்ப தெரியுதா ஏன் அரசாங்க பஸ்ஸில் பிரேக்கே இல்லை என்று? அதன் மறு பக்கம் தற்போது 2500 பொங்கல் பரிசு அரசாங்க வரிப்பண அன்பளிப்பு, ஏற்கனவே சேகரித்த காண்டிராக்ட், நியமன மாமூல் முதலீடு பெருக்கம், ஓட்டுக்கு கை காசு செலவில்லை இதையே "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று கூறுகிறார்கள். (குமுக இதை செய்ய முடியாமல் கூவுகிறார்கள்." கலியாணம் என்றால் வரதட்சினை, ஓட்டென்றால் பொங்கள் பரிசு" என்ற சொலவாடை பிறந்தது பிகு:இந்த உள்ளடி திறமை பற்றி, சாமி முன் சத்தியம் செய்த நண்பரின் தகப்பனார் மதுரை டிவிஎஸ்ஸில் மேல் கணக்காயராக இருந்தவர். தற்போது மண்டத்தில் பரமபிதா அடியார்".)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X