புதுப்பொலிவுடன் டாடா சபாரி எஸ்யூவி., ஜன.26ல் அறிமுகமாக உள்ளது. எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட் என நான்கு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். 6 சீட்டர், 7 சீட்டர் மாடல்களில் களமிறக்க உள்ளனர்.
டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி தான் சபாரி என்ற பெயரில் வருகிறது. இதன் 2.0 லிட்டர் கிரியோடெக் டர்போ டீசல் இன்ஜின், 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். புதிய கிரில் அமைப்பு, எல்இடி டெயில் லைட்ஸ், 8.8 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின் மென்ட் சிஸ்டம், 7 இன்ச் மல்டி இன்பர்மேஷன் ஸ்கிரீன், ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், 'ஐரா' கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பனோராமிக் சன்ரூப், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக் ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், 18 இன்ச் அலாய் வீல், ரியர் ஏசி வென்ட்கள், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், குரூஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா சிறப்பம்சம்.
எதிர்பார்க்கப்படும் விலை:
ரூ. 15-23 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
கோவை டீலர்:
SRT TATA - 99448 99448
சென்னை டீலர்:
Tafe Tata - 74016 99419