தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்
மைதா மாவு - 1 கப்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் துாள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் துாள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து, உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும். இத்துடன் எள், மிளகாய் துாள், பெருங்காயத் துாள், மஞ்சள் துாள் சேர்த்து நன்கு கலக்கவும்.அறை வெப்பநிலையில் உள்ள வெண்ணெய் சேர்த்து, மாவு கலவை மொத்தமும் நன்கு கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, கெட்டியாக பிசையவும்.முறுக்கு உருளையில் எண்ணெய் தடவி, போதுமான அளவு மாவு உருளையாக செய்து உள்ளே வைத்து, வெண்ணெய் தடவிய பிளாஸ்டிக் தாளில், சிறிய வட்டங்களாக பிழிந்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும், மிதமான சூட்டில் வைத்து, பிழிந்து வைத்த முறுக்கை போட்டு, இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.சூடு ஆறியவுடன் சாப்பிட்டால், 'மொறுமொறு'வென்று அற்புதமாக இருக்கும்.காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்து, இரண்டு வாரங்கள் வரையிலும் பயன்படுத்தலாம்.