தேவையான பொருட்கள்:
ஆப்பிள் துண்டு - 1 கப்
பேரீச்சம் பழம் - 3
பாதாம் - 5
பால் - 1 டம்ளர்
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
ஆப்பிள் துண்டு, சுடுநீரில் ஊற வைத்த பேரீச்சம் பழம், நீரில் ஊறிய பாதாம் பருப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். பின், காய்ச்சிய பால் கலந்து வடிகட்டவும். சுவையான, 'ஆப்பிள் பேரீச்சம் குளிர்பானம்' தயார்.
சர்க்கரை சேர்க்க தேவையில்லை. குளிர்பதனப் பெட்டியில் வைத்து, 'ஜில்' என பரிமாறலாம். இரும்புச் சத்து நிறைந்தது. ஆப்பிள் சாப்பிடாத சிறுவர், சிறுமியரும் விரும்பி குடிப்பர்.
- எஸ்.மலர், புதுச்சேரி.
தொடர்புக்கு: 90877 18665