அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
00:00

எஸ். கோவிந்த், கோவை: மனிதர்கள்... நாய்... என்ன வித்தியாசம்!
யார் எதிரிகள் என்பதை, மனிதனால் விரைவில் கண்டுபிடித்து விட முடியாது! ஆனால், நாய்கள் உடனே கண்டுபிடித்து விடும்; இது தான் வித்தியாசம்!

கு. ஜெயக்குமார், சென்னை: கூவம் என்ற பெயர், அந்த ஆற்றிற்கு எப்படி வந்தது?
சென்னைக்கு, 320 கி.மீ., துாரத்தில், கூவம் என்ற கிராமத்தில் உற்பத்தி ஆகி, இங்கு பாய்ந்து வந்து கடலில் கலக்கிறது; இப்போது அது நன்னீர் ஆறு அல்ல; சாக்கடை ஆறு!

ஆர். நாகநாதன், வேலுார்: என் எதிரிக்கு புத்தி கற்பிக்க விரும்புகிறேன்; நான் என்ன செய்ய வேண்டும்?
நன்மையைச் செய்து விடுங்கள்!
அவனை பழி வாங்க வேண்டும் என்ற நினைவு வரும்போது, மன அமைதியை இழந்து விடுகிறோம்! நம் மன அமைதி போய் விட்டால், அதை விட இழப்பு ஏதுமில்லையே!

ஜி. விஜயகுமார், நீலாம்பூர், கோவை: சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டம் நன்மையா?
நன்மையே! சாலை பெரிதானால், போக்குவரத்து சுலபமாகும்! சாலைக்காக எடுக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய விலையும் கிடைக்கும் தானே!

ப. செல்வன், சென்னை: அலோபதி, ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதம்... இதில் உங்களுக்கு பிடித்த வைத்தியம் எது?
ஆரம்பத்தில், அலோபதி... அப்புறம், ஆயுர்வேதம் தான் தோதாக இருக்கிறது... சீக்கிரம் குணமாகி விடுகிறது! ஓமியோபதி, சித்தா பக்கம் போக, வாய்ப்பு கிடைக்கவில்லை!

* ச. மோகித், தஞ்சாவூர்: 'நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து, புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்' என்று, உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதே...
மிகச் சரியானதே... பதவியை மட்டும் பறித்தால் போதாது... சரியான தண்டனையும் தரவேண்டும்!

வி. கோபாலன், சென்னை: என் நண்பன், 'நாளை... நாளை...' என்கிறான். இதன் பொருள் என்ன?
இன்றைய உழைப்பின் பின் பலன் தானே, நாளை! இன்றைய உழைப்பின் பலன் தான் நாளை என்பதை, உங்கள் நண்பர் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்; பாராட்டுக்கள்!

* ஆர். சந்திரகுமாரி, பொள்ளாச்சி: இந்தியா விடுதலையாகுமுன், மகாராஜாக்கள் இருந்தனரே... அவர்கள் இப்போது எப்படி இருக்கின்றனர்?
கலர், கலர் வேட்டி கரைகளுடன் உள்ளனரே... நீங்கள் கவனிக்கவில்லையா?

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
29-ஜன-202110:08:00 IST Report Abuse
Manian வி. கோபாலன், சென்னை அவர் ஒருவேளை நெல்லை மாவட்ட வாசி என்றால் இப்படியும் இருக்கலாமே "இன்று ரொக்கம், நாளை கடன்" என்று அண்ணாட்ச்சி கடை வாசலில் தொங்கும் அட்டை ஞாபகமாக இருக்கலாம். அவர்களுக்கு கடன் வசூல் தொல்லையே கிடையாதாமே
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
29-ஜன-202110:03:40 IST Report Abuse
Manian ஆர். நாகநாதன், வேலுார் ஏசு ஒரு கன்னத்திலே அடிச்சா இன்னொரு கன்னத்தை காட்டுன்னாறு? உலகம் திருந்தியதா? மரபணு காரணமாக மூளையில் கோளாறு உள்ளவர்களுக்கு பாடமும் கற்பிக்க முடியாது நாய் வாலை நிமித்த முடியுமா? மனைவி கணவனுக்கு பாடம் எடுக்க முடியுமா? துஷ்டனை கண்டால் தூர விலகு சொலவாடை எதுக்கு?
Rate this:
Cancel
Anandh Babu - Chennai,இந்தியா
28-ஜன-202105:52:08 IST Report Abuse
Anandh Babu Appo vivasayam enga poi panrathu
Rate this:
Manian - Chennai,ஈரான்
30-ஜன-202102:33:24 IST Report Abuse
Manianபல விவசாய நிலங்கள் போலி பட்டாக்கள், ரோடுகளை சிறுக சிறுக ஆக்கிரமிப்பால் திருடப்பட்டவை. முன்னாள் திருடர்கள் விற்ற பொது மக்கள் நிலத்தை வாங்கினவன், அறியாத நிலத்திருடன் தானே சிறிது நிலத்தில் வான் நோக்கி(Virtical Farming ) வயல்களில் லவித காய்கறிகள் -கீரை, தக்காளி போ்றவைகள் தற்போது ஒரு அமெரிக்க கம்பனி விளைவிக்கிறே மாடித் தோட்ட விவசாயம் பெருகி வருகிறதே ஓசியில் இதெல்லாம் தந்தால் விவசாயம் பெருகாதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X