தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,
ஜூன் 15, 2020. லடாக், கல்வான் பகுதியில சீன
ராணுவத்துக்கு எதிரான சண்டையில என்மகன் பழனி இறந்துட்டான். அவன்
இறப்புக்கு 20 லட்ச ரூபாய் நிதியும், மருமகளுக்கு அரசுப்பணியும் தந்த நீங்க
எங்களைப் பற்றி யோசிக்காம விட்டுட்டீங்களே!என் மகனோட இறந்த ராணுவ அதிகாரி
சந்தோஷ்பாபு வீட்டுக்கு நேர்ல போன தெலுங்கானா முதல்வர், ஐந்து கோடி ரூபாய்
நிதியை...
அவர் மனைவிக்கு இரண்டு கோடி, குழந்தைகளுக்கு தலா ஒரு கோடி,
பெற்றோருக்கு ஒரு கோடின்னு பங்கு வைச்சு கொடுத்தாரு; இந்த சிந்தனை
உங்களுக்கு ஏன் வரலை?அய்யா... என் இளைய மகன் இதயக்கனியும் ராணுவத்துலதான்
இருக்குறான். அவனுக்கு திருமணம் ஆகாத நிலையில இப்போதைக்கு அவன்
வருமானத்துலதான் நானும், என் கணவரும் சாப்பிடுறோம். எங்களுக்கு ஏதாவது ஒரு
அவசர தேவைன்னா, புகுந்த வீட்டுல இருக்குற எங்க பொண்ணை எதிர்பார்க்க
வேண்டிஇருக்கு!
எனக்கும் என் கணவருக்குமான மாதாந்திர மருத்துவ செலவுக்கு
மாதம் 4,000 ரூபாய் ஆகுது. எனக்கு 60, என் கணவருக்கு 75 வயசு ஆயிட்ட
நிலையில, எங்க பாதுகாப்புக்கு ஒரு வீடும், மதிப்போட வாழ்றதுக்கு கொஞ்சம்
நிதியும் தேவை; தெலுங்கானா முதல்வரால இதை செய்ய முடியுறப்போ உங்களாலேயும்
செய்ய முடியும்தானே!
- வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் தாய் லோகாம்பாள்,
கடுக்கலுார், திருவாடானை, ராமநாதபுரம்.