அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
00:00

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பணியில் உள்ள நண்பர் ஒருவர், அயர்லாந்தில் நான்கு மாத, "அசைன்மென்ட்' முடித்து சென்னை திரும்பி இருந்தார். அன்று, தொலைபேசி அழைப்பு விடுத்து, "அந்து... லென்ஸ் மாமாவையும் கூட்டிக்கிட்டு வந்துடு... அயர்லாந்தின் விசேஷ சரக்கான, "ஜெமிசன்' அவருக்காக வாங்கி வந்திருக்கிறேன்
என்பதையும் அவரிடம் சொல்...' என்றார்.
இங்கிலாந்துக்குப் பக்கத்தில் உள்ள நாடு அயர்லாந்து. நீண்ட காலம் நம்மை போல் இங்கிலாந்திற்கு அடிமையாக இருந்த நாடு அது. அவர்களது தாய்மொழி ஐரிஷ் என்றாலும், ஆங்கிலேயர் அவர்களை ஆண்டதால், கடித்துக் குதறி ஆங்கிலம் பேசுவராம்.
ஆங்கிலேயர்கள் மீது அவர்களுக்கு இன்னும் வெறுப்பு இருக்கிறது. ஐரிஷ்காரர்களுக்கு அமெரிக்கர்களை மிகவும் பிடிக்குமாம். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் வம்சாவழியினர், அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள்தானாம்.
நண்பர் இது போன்ற விஷயங்களைச் சொல்லி, "மாமா... ஜெமிசன் சாப்பிடுறீங்களா... ஸ்காட்டிஷ் சரக்குகளான ஜானிவாக்கர், ஷிவாஸ் ரீகல், ஹேக் சரக்கை எல்லாம் மிஞ்சி விடும் ஜெமிசன்... அவ்வளவு, "ஸ்மூத்...' அயர்லாந்து
காரர்களிடம், "ஜெமிசன் சாப்பிட்டேன்...' என்று சொன்னால், நம்மை அவர்களது சொந்தக்காரர்கள் போல எண்ணி, தலையில் தூக்கி வைத்து ஆடி விடுவர்...' என்று கூறியபடியே ஜெமிசனை தனக்கும், மாமாவுக்கும், "பிக்ஸ்' செய்து கொண்டார். எனக்கு பிரிஜ்ஜில் இருந்து ஆஸ்ட்ரேலியன் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றிக் கொடுத்தார்.
அவர் ஒண்டிக்கட்டை என்பதால், தானே சமையலறைக்குச் சென்று, ஏற்கனவே, தயார் செய்து வைத்திருந்த எறாவை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தார். அதன் பெயர், "பிரான்ஸ் ஷெஷ்வான்' — சீன முறை தயாரிப்பு என்றார். எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.
பீங்கான் பவுல் ஒன்றில் எறாலை எடுத்து வைத்து, குட்டி குட்டியா இரண்டு முள் கரண்டிகளை அதனுள் குத்தி வைத்தார்.
அவற்றை சுவை பார்த்த லென்ஸ் மாமா, "உன்னை கட்டிக்கப் போறவ கொடுத்து வச்சவப்பா... எவ்வளவு டேஸ்ட்டா செஞ்சிருக்க இதை...' என, பாராட்டியபடியே சுவைத்தார்.
"அவங்க கலாச்சாரம் எப்படி இருக்கு? ஆண்-பெண்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?' எனக் கேட்டேன்.
ஆரம்பித்தார்:
அங்கே மதுரை ஆட்சி தான். பெண்களின் கைதான் அயர்லாந்தில் ஓங்கியிருக்கிறது.
நம்மூரில் பெண்களை, ஆண்கள், "ஈவ்-டீசிங்' செய்வது போல, அங்கே ஆண்களை, பெண்கள், "ஆடம் டீஸ்' செய்கின்றனர். பெண்கள்தான், ஆண்களை, "சைட்' அடிக்கின்றனர்.
பார்களுக்குள் நுழைந்ததும் ஆடைகளை எல்லாம் களைந்து, பொட்டுத் துணியுடன் டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுகின்றனர். குரூப், குரூப் ஆகவே பார்களுக்கு பெண்கள் வருகின்றனர். அந்த குரூப்பில், ஒரு பெண் மட்டும் உ.பா., சாப்பிடாமல், மற்ற பெண்களை கண்காணித்துக் கொள்கிறாள். உ.பா., தலைக்கு ஏறி ஏதாவது, "மிஸ் பிகேவ்' செய்யாமல் இருப்பதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொள்கின்றனர். அந்த பார்களில் உள்ள, "டாய்லெட்'களில், "பெர்பியூம்' முதல், "காண்டம்' வரை காசு போட்டு எடுக்கும் மிஷின்கள் வைத்திருக்கின்றனர்.
ஒரே பாரில் உட்கார்ந்து முழுக்க, "ஏற்றி'க் கொள்ளும் பழக்கம் அவர்களிடமில்லை. ஒவ்வொரு பாருக்கும் ஒரு,
"ரவுண்டு' என ஊர் சுற்றுகின்றனர்.
இந்த ஊர் பெண்கள் ஆண்களை டீஸ் செய்வதற்காக, ஆண் உறுப்புகள் போன்ற காற்றடித்த பலூன்களை தலையில் சூடிக் கொள்கின்றனர். அதே போன்ற வடிவமைப்புடைய ஸ்டிராக்களில் குளிர் பானங்களை உறிஞ்சுகின்றனர்.
அங்கு இரவு, 10:00 மணிக்கு மேல்தான், "லைப்'பே ஆரம்பமாகிறது. சூரியன் அங்கே
மறைவதே விடிகாலை நேரத்தில்தான். இரவு, 2:00 மணி வரை பார்களில், உ.பா., சாப்பிட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
அங்கே எதற்கெடுத்தாலும், "க்யூ'தான். டாக்சிக்காக, "க்யூ'வில் காத்திருக்கும் நேரத்தில், பொழுது போக, இப்பெண்கள், "க்யூ'வில் அருகில் நிற்கும் முன் பின் அறிமுகமில்லாத ஆணை கட்டி அணைத்து, இதழுடன் இதழ் பதித்து, டாக்சி வரும் வரை முத்தமிட்டு கொண்டே நிற்கின்றனர்.
"வாய் வலிக்காதா என்ன?' என, சந்தேகம் கிளப்பினார் லென்ஸ் மாமா. நண்பர் சிரித்துக் கொண்டே, "எனக்கு அனுபவம் இல்லை...' என்றபடியே தொடர்ந்தார்:
டாக்சி வந்ததும் முன் பின் தெரியாத அந்த நபரிடம், "பை...பை' சொல்லி கிளம்பி விடுவர் பெண்கள்...
சில நேரங்களில் அங்கு வசிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும், பிராட்டஸ்டண்டுகளுக்கும் தகராறு வெடித்து விடுகிறது. அப்போது, இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் கற்கள், சோடாபுட்டிகள் போன்றவற்றை வீசிக் கொள்ளும் அவலமும் அரங்கேறுகிறது. அந்த நேரங்களில் உயிரைக் காத்துக் கொள்ள, நாமெல்லாம் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு பிரச்னையைத் தவிர, மற்றபடி சுகமான நாடுதான் அயர்லாந்து என முடித்தார்.
ஜொள்ளு கொட்டி கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, "பொறுப்பாசிரியரிடம் கேட்டு, "அயர்லாந்துக்கு, "விசா' வாங்கிடேன். பத்து நாள் அங்கு இருந்துட்டு வரலாம்...' எனக் கூறிய போது, அவருக்குத் தெரியாமல் நண்பரைப் பார்த்து, "ஏன்யா இந்த ஆள்கிட்ட இதெல்லாம் சொன்ன?' என்பது போல் சைகை காட்டி, தலையில் அடித்துக் கொண்டேன்.
***
குப்பண்ணா, அன்று, "குஷி' மூடில் இருந்தார்; ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
திடீரென்று —
"நாம் காய்கறிகள் உண்பது நமக்குக் கேடான விஷயம்...' என்றார்.
இதென்ன... சுத்த சைவ ஆசாமி இப்படிப் பேசுகிறாரே என நினைத்து, பேச்சற்றுப் போய், அவர் வாயையே பார்த்தேன்.
குப்பண்ணா தொடர்ந்தார்:
ஆடு, கோழி ஆகிய மாமிசம் சாப்பிடும் மக்களை, மாட்டிறைச்சியும் சாப்பிடும்படி செய்ய வேண்டும்... அது எளிதாகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும், ஜிப்பா போட வேண்டும். என் மனைவி கூட என் கருத்துப்படி ஒன்றரை மாதம் வரை லுங்கி கட்டினாள்; ஆனால், வெட்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே போகவில்லை.
உடைகளில், ஆண்-பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது. சுலபத்தில் இது ஆணா, பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரி உடைகள் அணிய வேண்டும். பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் ஆண் பெயரையே வைக்க வேண்டும்.
பெண்கள் ஆறடி கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகம்; தேவையற்ற தொல்லை. ஆண்களைப் போல கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்...
— இப்படி சொல்லிவிட்டு நிறுத்தி, என்னையே உற்று நோக்கினார். நான் மயங்கிச் சாயாமல் இருக்க சுவரை பற்றிக் கொண்டேன்... குப்பண்ணாவே தொடர்ந்தார்...
"இப்படியான தூக்கி வாரிப் போட வைக்கும் ஆலோசனைகள் என்னோடது அல்ல... ஈ.வெ.ரா., வோடது... அவரோட பொஸ்தகம் ஒண்ணுல இதெல்லாம் சொல்லி இருக்கார்...' என்றார்.
— நல்லவேளை, குப்பண்ணாவுக்கு எடக்கு - மடக்கா ஏதும் ஆகல என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்!
ஈ.வெ.ரா.,வைப் பற்றி குப்பண்ணா இப்படிக் கூறியதும், எப்போதோ, யாரோ அவரைப் பற்றி கூறிய இன்னொரு சம்பவம் நினைவில் வந்தது. அது:
ஆற்காட்டில், திராவிடக் கழக சார்பான பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஈ.வெ.ரா., வந்திருந்தார். ஆற்காடு தோல் தொழிலுக்குப் பேர் பெற்ற நகர் என்பது தான் தெரியுமே! கூட்டம் முடிந்த பிறகு, கழக அன்பர் ஒருவர், "ஐயா... இது உங்களுக்காக என் கையால தயாரிச்சது. இங்கேயே இதை நீங்க போட்டுக்கணும்!' என்று, ஒரு ஜோடி மிதியடியை அவர் காலடியில் வைத்தார்.
ஈ.வெ.ரா, அதைப் போட்டுப் பார்த்தார்; அளவு சின்னதாய் இருந்தது. அன்பர் நெளிந்து, "சைஸ் தப்பாப் போச்சு; இப்ப அளவு புரியுது. அடுத்த வாட்டி வர்றப்ப கரெக்ட் சைசா செய்து வைக்கிறேன்யா...' என்று எடுத்துக் கொள்ளப் போனார்.
ஈ.வெ.ரா., அவரை அவசரமாய் தடுத்து, "வேணாம்... வேணாம்... இது இருக்கட்டும்; மணியம்மைக்குச் சரியா இருக்கும். நான் அடுத்த வாட்டி வர்றப்ப, என் சைசுக்குத் தச்சுக் கொடு...' என்று அதை எடுத்து வைக்கச் சொல்லி விட்டாராம்!
— கத்துக்கணும்!
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Mukkudal,இந்தியா
11-ஜூன்-201107:10:36 IST Report Abuse
krishnan I stayed at Ireland last thee months and returned to India last 16th May. I object some of the news about Ireland by the Softeare Engineer.I accept Ireland is totaly a drinks cultured country.But they are very cultured people and having high quality of life though they are not rich in economics status.I worked as a vountreer in a Organic Cultivation model farm called "SONAIRTE"the national ecology centre.Volunteer work is a common factor in Ireland and Europ i.e.working without salary.The pay much respect to volunteers and people from various parts of the world is working as volunteers. For our freedom fight some of Irish people gave their support to our Indian leaders.Madom Anipeasant who formed Home Rule in India is a Irish women and George Bernatsha is also Irish who had a close assosiation with Gandhi.Our National Flag also resembles their flag with slight chnage in dimension.Almost all Irish people know about Gandhi and have much regard on him.Some of the land reform acts were taken from them i.s.Tanent Protection Act etc., ion.
Rate this:
Share this comment
Cancel
ஜெயஸ்ரீ ரவி - நேடிக்,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-201122:38:13 IST Report Abuse
ஜெயஸ்ரீ ரவி In India too, it is possible to make mistakes like mother Renuka, wife of Jamadagni and mother of Parasurama...
Rate this:
Share this comment
Cancel
Sudhakar - belfast,அயர்லாந்து
10-ஜூன்-201115:25:32 IST Report Abuse
Sudhakar Ireland is a good country
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X