இதப்படிங்க முதல்ல....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
00:00

சாய்பாபா வாழ்க்கை சினிமாவாகிறது!
மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா பற்றி ஒரு படம் உருவாகிறது. தெலுங்கில் தயாராகும் இப்படத்தில், நாகார்ஜுனா நடிக்கிறார். பாபாவின் இளமைக்காலம் தொட்டு அவரது ஆன்மிக பயணம், சமூக தொண்டு குறித்த முக்கிய பகுதிகள் இப்படத்தில் இடம்பெறும்.
— சினிமா பொன்னையா.

தனுஷின் நிஜ கேரக்டர்!
படத்துக்குப் படம் அப்பா - அம்மாவுக்கு அடங்காத பிள்ளையாக நடித்து வந்த தனுஷûக்கு, வேங்கை படத்தில் பெற்றோரை மதிக்கும் நல்ல பிள்ளை வேடம் கிடைத்துள்ளது. "சினிமாவைப் பொறுத்தவரை, இந்த வேடம் எனக்கு புது அனுபவம். என்றாலும், என் நிஜ கேரக்டரும் இதுதான்...' என்கிறார்.
— சி.பொ.,

தாய்குலம் முயற்சி பலிக்குமா?
கோ படம், அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில், ரீ-மேக் ஆகிறது. இப்படத்திலும், தன் மகள் நடித்தால், இந்தியிலும் பிரபலமாகி விடுவாள் என்று நினைக்கும் மாஜி ஹீரோயின் ராதா, மகள் கார்த்திகாவின் ஆல்பங்களை இந்தி பீல்டில் சுற்றலில் விட்டிருப் பதோடு, அப்படத்தில் நடிக்கும் அக்ஷய் குமாரையும் சந்தித்து, மகளின் அருமை, பெருமைகளை கூறி, சிபாரிசு கோரியிருக்கிறார். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
— எலீசா.

"கிங் 2' படத்தில் ரீமா சென்!
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி சினிமாக்களும், ரீமாசென்னை கைவிட்ட போதும், மலையாள சினிமா கை கொடுத்துள்ளது. மம்முட்டி - சுரேஷ் கோபி இணைந்து நடிக்கும், கிங் 2 என்ற படத்திலும் ரீமாதான் நாயகி. "யதார்த்தமான சினிமாவை நேசிக்கும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத் தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது...' என்று மலையாள படங்களையும், அங்குள்ள சினிமாக்காரர்களையும் ஓவராக புகழ்ந்து தள்ளுகிறார். ஆல் பழுத்தால் அங்கே கிளி, அரசு பழுத்தால் இங்கே கிளி!
— எலீசா.

சீயான் விக்ரமின் பசுமைப் புரட்சி!
தன் விக்ரம் பவுண்டேஷன் மூலம், நிறைய சமூக சேவைகள் செய்து வரும் நடிகர் விக்ரம், தற்போது, பசுமைப் புரட்சி என்றொரு திட்டத்தை அறிவித் துள்ளார். இதன் முதல்கட்ட பணியாக, சென்னையில் மரம் நடும் பணியை துவங்கி, அதை, தன் ரசிகர் மன்றம் மூலம் பராமரித்து வருகிறார். எதிர்கால சந்ததியை பாதுகாப் பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் சொல்கிறார்.
— சி.பொ.,

பத்திரிகையாளர் வேடத்தில் பூனம் பாஜ்வா!
கோ படத்தில் கார்த்திகா நடித்தது போன்று, எதிரி எண் 3 படத்தில், பூனம் பாஜ்வாவும் நிருபர் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக, மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் நிருபரிடம், முறையான பயிற்சி எடுத்துள்ள பூனம் பாஜ்வா, இப்படத்தில் சிக்கலில் சிக்கும் ஸ்ரீகாந்தை காப்பாற்றும் அதிரடி ஜர்னலிஸ்டாக நடித்துள்ள அவர், வழக்கமான கவர்ச்சி ஆட்டமும் ஆடி யுள்ளார். ஆள் ஜம்பமே தவிர வேலை ஜம்பம் கிடையாது!
— எலீசா.

போட்டா போட்டி!
நடிகர்கள் ராஜேஷ், ஷாம் ஆகியோரை தொடர்ந்து, தற்போது நமீதா, நடிகர் ஆர்.கே., ஆகியோரும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் மும்முரமடைந்துள்ளனர். இருவருமே, சென்னையை அடுத்த திண்டிவனம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், போட்டி போட்டு நிலங்களை வாங்கி வருகின்றனர். இதனால், மேற்படி நபர்கள் எந்த படப்பிடிப்பு தளத்தில் இருந் தாலும், அவர்களை சுற்றி நிலத்தரகர்கள் கூட்டம், வட்டம் போடுகிறது. ஆசை பெருக, அலைச்சலும் பெருகும்!
— எலீசா.

போலீஸ் வேடத்தில் சிம்பு!
இந்தியில் சல்மான்கான் நடித்த, தபாங் படத்தை தமிழில், ஒஸ்தி என்ற பெயரில், ரீ-மேக் செய்கிறார் தரணி. இதில், நாயகனாக நடிக்கும் சிம்பு, முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக, தன் ஹேர் ஸ்டைல், பாடி லாங்வேஜ் என்று அனைத்தையும் கச்சிதமாக மாற்றுகிறார். மேலும், இப்படத்தின் மூலம், தான் தென்னகத்து சல்மான்கான் என்று பெயரெடுக்கவும் விரும்புவதாக சொல்கிறார்.
— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mouthu - chennai,இந்தியா
05-ஜூன்-201116:41:51 IST Report Abuse
mouthu UN இவரைத்தான் (விக்ரம்) அழைத்தது. தசாவதாரம் பாடல் இவருக்குதான் பொருந்தும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X