அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2021
00:00

* த. சிவாஜிமூக்கையா, சென்னை:'தேசிய கட்சிகள், தமிழகத்தில் இன்னும் வேரூன்றவில்லை' என்று, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி கூறி இருக்கிறாரே...
உண்மை தான்! ஆனால், இந்த தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருப்பதால், பா.ஜ.,வுக்கு சாதகம் உண்டு என்றே கூறலாம்!

கே. கோவிந்த், நெல்லை: நான் எதைச் செய்தாலும் தோல்வியையே தழுவுகிறேன்; இது ஏன்?
பொறுப்புணர்ச்சியும், பொறுமையும் இல்லாததே, இதற்கு காரணம். பொறுப்புணர்ச்சி குறையாமல், பொறுமையுடன் உழையுங்கள்; வெற்றி நிச்சயம் கிடைக்கும்!

கே. சித்ரா, சிதம்பரம்: என் தோழிக்கு, சித்திரை மாதம், பெண் குழந்தை பிறந்து விட்டது; இதனால், குடும்பத்தில் பல கஷ்டம் வரும் என்று கூறுகின்றனரே...
சுத்த மூடத்தனம். எந்த நேரத்தில், எந்த நாளில், மாதத்தில் பிறந்தாலும் ஒன்று தான்! நமக்கு வரும் சுகங்களுக்கும், கஷ்டங்களுக்கும் நாம் தான் காரணம்!

* ஆர். ராகவன் திருச்சி: என் நல்ல நண்பன், இப்போது, கெட்டுப் போனானே... என்ன காரணமாக இருக்கும்?
முதல் காரணம் நண்பர்கள்; இரண்டாவது, அவனது உடல் நலம்; மூன்றாவது, வறுமை; நான்காவது, அவனது சோம்பேறித்தனமாக இருக்கலாம்!

* க. அருச்சுனன், செங்கல்பட்டு: கூட்டணியே இல்லாமல், அரசியல் கட்சிகள் தனித்தனியே தேர்தலை சந்தித்தால்...
'லெட்டர் பேடு' கட்சிகளின் முகத்திரை அப்போது தான் தெரிய வரும். அதனாலேயே கூட்டணிக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்!

தமிழருவி, எஸ்.புதுார், திருவிடைமருதுார்: 'பாலீதின்' பைகள் மீண்டும் ஆங்காங்கே பயன்பாட்டுக்கு வந்து விட்டதே...
இப்பைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமையை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்! அப்போது தான், இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாது!

தங்கவேல் பழனிச்சாமி, சென்னை: மு.க.அழகிரி கட்சி ஆரம்பித்தால், தி.மு.க.,வுக்கு நஷ்டமா, லாபமா?
முதலாவது தான்! தென் மாவட்டங்களில் அவருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. இதனால், தி.மு.க.,வுக்கு அங்கு நஷ்டம் தான் ஏற்படும்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sulochana - chennai,ஆஸ்திரேலியா
14-பிப்-202109:18:33 IST Report Abuse
sulochana டியர் சித்ரா, அது சித்திரை மாதத்தில் இல்லை. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் ....என்று சொல்வார்கள். இருப்பதே இருபத்தியோரு நக்ஷத்திரங்கள் தான் அப்போ அதிகம் பெயர்கள் அதிலே பிறக்க வாய்ப்பு உள்ளது. அதெல்ல்லாம் நம்பினால் என்ன ஆவது. உன் தோழியிடம் ஆண்டவரை மட்டுமே நம்ப சொல்லு. இரக்கம், உருக்கம், உதவிகள் செய்வது என்று ஆண்டவருக்கு இசைந்த காரியங்கலாய் செய்து குழந்தையை கடவுள் பக்தியாக வளர்க்க சொல்லு. ஒன்னும் ஆகாது.. ஆண்டவர் ஆசீர்வதிப்பார். .
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
14-பிப்-202102:59:21 IST Report Abuse
Manian த. சிவாஜிமூக்கையா: சில சமயம் மருந்துகளை தண்ணீரில் கரைத்து திரவமாகவே குடிப்பது போல், இதுவரை லஞ்சம் வாங்காத மத்திய அரசு பிஜேபி வேண்டும் என்ற இளைஞர்கள் விரும்புவார்கள். திராவிட திருடர்கள் கழக போர்வையில் -பிறப்பு முதல் இறப்பு வறை- மாமூல்கள்,ஜாதி வெறியர்கள் தங்கள் வருங்காலத்தை நாசமாக்குவதை விரும்பவில்லை "மோடி வேண்டாம் என்றால் கேடிகளே" நம்மை ஆள்வார்கள்,கோட்டா வியாதிகளே 3% மேல் தட்டு -'வன்னிய-முக்குலத்த-கொங்குவேளாளர்" நம்மை அடிமையாக, கல்வியில் தேறாத, வேலை இல்லாத கூலிளாக வைப்பார்கள் என்பதை ஏனைய 97% அதே இன இளைஞ்ஞர்களும் புரிந்து கொண்டுவிட்டார்கள் "லஞ்ச சூரியன்" சுட்டெடுக்கும் போது, 'தாமரை' போன்ற கை குடையாவது இருக்கிறதே என்று ஆறுதல அடைகிறார்கள்(பிகு: என் ஓட்டுக்களை திருடிவிடுகிறார்கள் ஆக நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை)
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
14-பிப்-202102:41:41 IST Report Abuse
Manian கே. கோவிந்த்: தனக்காகவும் தெரியாது, (தகுந்த) பிறர் சொன்னாலும் கேட்காத முரடர்களுக்கு இதுதான் கதி. என்ன செய்தேன்-என்ன பலனை எதிர் பார்த்தேன்- என்ன பலனை அடைந்தேன்- என்று ஒவ்வொரு கடந்த கால முயற்சிகள் பற்றி உண்மையாக எழுதுங்கள். பிறகு அதை நம்பிக்கையான அனுபவசாலி இடம் காட்டுங்கள். அவர் தோல்வியின் காரணங்களை (Error Analysis), கீதையில் கண்ணன் சொன்னதை"காரியம் செய்யும் உன் உறிமை, நீ எதிர் பார்க்கும் பலனைக் கட்டுப் படுத்தாது" என்பதை விளக்கி ,சுய பரிசோதனை, குறைபாடுகள் நீக்க வழிகளைச் சொல்வார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X