மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்னை உர நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : கிராஜூவேட் பிரிவில் கெமிக்கல் 13, மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல் 3, இ.இ.இ., 1, இன்ஸ்ட்ரூமென்டேசன் 1, சிவில் 1, ஐ.டி., / சி.எஸ்., / இ.சி.இ., 1 என 21 இடங்கள் உள்ளன. டெக்னீசியன் பிரிவில் கெமிக்கல் 15, மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல் 4, இ.இ.இ., 2, இன்ஸ்ட்ரூமென்டேசன் 2, சிவில் 1 என 24 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு இளநிலை இன்ஜினியரிங் , டெக்னீசியன் பிரிவுக்கு டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். 2018/2019/2020 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணிக்காலம்: ஓராண்டு.
ஸ்டைபண்டு: கிராஜூவேட் பிரிவுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம், டெக்னீசியன் பிரிவுக்கு மாதம் ரூ. 17 ஆயிரம்.
தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசி நாள்: 1.3.2021
விபரங்களுக்கு: http://boat-srp.com/wp-content/uploads/2021/02/MFL_2020-21_Notification.pdf