பெண்களின் கோவில்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2021
00:00

நாம் உலகில் இருக்கும் வரை தான், நம்மைச் சுற்றியுள்ள உறவுகள், நம்மை நினைவில் வைத்திருக்கும். மறைந்து விட்டால், சில காலம் அழுது, மறந்து விடும். ஆனால், சிவன் நம்மை மறக்க மாட்டார். மறைந்தாலும், நம்மை மீண்டும் உலகில் பிறக்க வைப்பார்.
கருணைக்கடலான அவர், ஒரு சமயம், கணவனை இழந்த ஒரு பெண்ணின் கணவருக்கு உயிர் தந்தார். இந்த நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்குடி பிராணனைக் கொடுத்த பிராணநாதேஸ்வரர், மாங்கல்யம் கொடுத்த மங்களாம்பிகை கோவிலில் நடந்தது.
காலவ முனிவர் என்பவர், தனக்கு கிரக தோஷத்தால், தொழுநோய் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தார். இதனால், நவக்கிரகங்களை எண்ணி தவமிருந்தார்.
கிரகங்கள் அவர் முன் தோன்றி, 'விதியை மாற்ற எங்களால் முடியாது...' என, கை விரித்தன.
கோபமடைந்த முனிவர், 'எனக்கு வரவேண்டிய தொழுநோய், கிரகங்களைப் பற்றட்டும்...' என, சாபம் விட்டார். நோயால் பாதிக்கப்பட்ட கிரகங்கள், சிவனிடம் சரணடைந்தன.
'நீங்கள், காவிரிக்கரையிலுள்ள வெள்ளெருக்கு வனம் சென்று, வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் வைத்து சாப்பிட்டு வர, நோய் நீங்கும்...' என்றார்.
கிரகங்களும் அவ்வாறே செய்தன. அவர்களுக்கு காட்சி தந்து, சாப நிவர்த்தி வழங்கினார், சிவன்.
முதலாம் குலோத்துங்கன் காலத்தில், இத்தலத்தின் பெருமை பற்றி கேள்விப்பட்ட அமைச்சர் அனலவாணன், மக்கள் வரிப்பணத்தில், சிவனுக்கு கோவில் கட்டினார்.
தன் அனுமதியின்றி கோவில் கட்டியதால், கோபமடைந்த மன்னர், அனலவாணனுக்கு மரண தண்டனை வழங்கினார்.
அனலவாணன் கொல்லப்பட்டார். இதையறிந்த அவரது மனைவி, கோவிலுக்கு வந்து, அங்குள்ள மங்களாம்பிகையிடம் புலம்பினாள்.
அம்பாள், அதை சிவனிடம் சொல்ல, மறைந்த அமைச்சருக்கு, உயிர் வழங்கினார், சிவன்.
இதனால், சுவாமியை, பிராணனைக் கொடுத்த பிராணநாதா என்றும், அம்பாளை, மாங்கல்யம் கொடுத்த மங்களாம்பிகா என்றும் கூவி அழைத்தாள்.
அவள் முன் தோன்றிய அம்பாள், 'இனி, இத்தலம் வரும் பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியம் தருவேன்...' என, வாக்களித்தாள்.
இதனால், பெண்களின் சிறப்பு கோவிலாக, இது விளங்குகிறது.
பிப்., 27 - மாசி மகம். தங்கள் கணவரின் நல்வாழ்வை விரும்பும் பெண்கள், இந்நாளில் இந்தக் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வழியாக சூரியனார்கோவில், 18 கி.மீ., இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில், திருமங்கலக்குடி கோவில் உள்ளது.
தொலைபேசி: 0435 - 247 0480.

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
21-பிப்-202111:53:29 IST Report Abuse
Manian ஆனால் தீர்க சுமங்கலின்னா, ஆயிரம் வருசம் இல்லைதீர்க்கம் என்றால், பிரம்மா எழுதின நீண்ட காலம்- அந்த உடலுக்கு என்று கொள்ளவேண்டும். மங்களாம்பிகை சொன்னது இதுதான் -மரபணு கோளாறு இல்லாமல், 125 வருசம் வரை உணவு, ஆரோக்கியம், மனதில் பிறருக்கு முடிந்த அளவு உதவி செய்யும் மனம், ஓட்டு போடக் காசு வாங்காது, தினமும் யோகப் பயிற்சி செய்து, கோவில் பெரிய பாதை வழியே தினமும் மூன்று முறை பிராணவாயுவை தீர்க்கமாக உறிஞ்சியபடியே வலம் வந்து, மனதிலே மங்களாம்பியை, வேறு சிந்தனை இல்லாமல் ஜபித்து மனகிலேசம் இல்லாத பெண்கள், அவர்களைப் போல நடந்து கொள்ளும் கணவர்களுக்கே தீர்க்காயுசு இதை லைப் டைம் வாரண்டி(Life time waranty) என்பார்கள். உபயோக-துர் உபயோகத்தால் தேய்ந்து போன பாகங்களுக்கு புதுப்பித்தல் கிடையாது மற்றவர்களுக்கு அல்பாயுசே அவர்களை எமன் 2 சக்ர வாகனத்தில் வந்தே இழுத்துச் செல்வான். மாமூல் பாச்சா அவனிடம் பலிக்காது இந்திய ரூபாயை எமலோக எமடாலராக மாற்ற முடியாது புண்ணிய டாலரே அங்கே செல்லுபடியாகும் இடைத் தரகர்கள் கிடையாது. ஆகவே ஏதாவது ஏழைக் குழந்தைக்கு உணவளித்து, படிக்க வைத்து, ஒரு வயோதிகரை / வயோதிகையை வாகனங்கள் கொல்லாம் ரோடு கடக்க உதவி செய்த பின்னே கோவிலுக்கு வரவேண்டும். உண்டியில் காசில் எமலோகத்தில் எந்த சலுகையும் இல்லை என்று எமர்சன்சி ஆப்ரேஷனில் மூச்சு இன்று எமோகம் சென்று திரும்பிய மூலநாதன் சொல்கிறார். ஜெய் மங்களாம்பிகே பௌராணிகர் பத்திணம் திட்டை மஞ்சுநாதன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X