அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2021
00:00

ஆர். சுப்பு, திருத்தங்கல்: தே.தி.மு.க., தலைவர் விஜயகாந்த், முதல்வர் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதா?
இரு திராவிட கட்சிகளுமே, 10 'சீட்' தான், தே.மு.தி.க.,வுக்கு என்று சொல்லி வருகின்றன. இதில் இவர், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 'மெஜாரிட்டி'யை பிடிக்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?


எஸ்.கே. கோமதி, நாமக்கல்: தர்மம் என்றும், தானம் என்றும் சொல்கின்றனரே... இதன் அர்த்தம் என்ன?
இரண்டும் ஒன்று தான்! புண்ணியம் கிடைக்கும் என்று தர்மம் செய்தனர்; இப்போது, விளம்பரம் கிடைக்கும் என்று, தானம் செய்கின்றனர்!

தி.சே. அறிவழகன், திருப்புலிவனம், காஞ்சிபுரம்: சசிகலாவின் பலம் என்ன... பலவீனம் என்ன?
இரண்டுமே கை நீட்டல் தான்... நாலு ஆண்டு சிறை தண்டனை குறித்து மறந்து விட்டீர்களோ!

* கே. விஜயகுமார், கோவை: ஒரு மனிதனின், உயர்வுக்கும், தாழ்வுக்கும் எது காரணம்?
முதல் காரணம், மனம்; இரண்டாவது காரணம், பணம்! மனம் இருந்து பணம் இல்லாவிட்டால் தாழ்வு தான்! அறிவு இருந்தால் இரண்டையும் பெற முடியும்!

ஆர். ராஜேந்திரன், மதுரை: பதவியில் இருப்பவர்களுக்கு, திருமண அழைப்பிதழ் அனுப்பினால், வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றனரே... இது, அவர்களே செய்வதா?
இதெல்லாம் அவர்கள், பி.ஏ.,கள் செய்வது. திருமண அழைப்பிதழே அவர்கள் கையில் சேராது. கையெழுத்து மட்டும் அவர்கள் இடுவர். அழைப்பிதழ், 'ஷ்ரெட்டிங்' இயந்திரத்திற்கு சென்று விடும்!

க. வெங்கடேசன், மதுரை: வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும், 20 சதவீத ஒதுக்கீடு கேட்கிறாரே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்...
இதிலிருந்தே தெரியவில்லையா... பா.ம.க., மற்ற சமுதாய மக்களுக்கும் உள்ள கட்சி இல்லை என்பது!

* பி.என். நரசிம்மமூர்த்தி, சென்னை:ஊழல் குற்றச்சாட்டில், சிறை சென்றவர்கள் சுயசரிதை எழுத ஆரம்பித்தால்...
அவர்கள், ஆளும் திராவிட கட்சியில் இருந்தால், அந்த சுயசரிதையை, பள்ளிப் பாடமாகவே ஆக்கி விடுவர்!

ஆர். உமா, சென்னை:நான் எதை நம்ப வேண்டும்?
நேற்று நடந்ததை நினைத்துப் பார்க்காதீர்கள்... இன்று ஒன்று இருக்கிறதே அதை நினையுங்கள். இறந்ததையும், வரப்போவதையும் நினைத்துக் கொண்டிருந்தால், இருப்பதும் போய் விடும்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-பிப்-202112:16:02 IST Report Abuse
D.Ambujavalli இப்படி ஊழல் நாயக/ நாயகிகளின் சுய சரிதங்களை மொழி மாற்றம் செய்து உலக நிலைப் பல்கலைகளுக்குக் கூட பாடமாக வைக்க முடியும், அந்நாடுகளின் தலைவர்களுடன் கைகுலுக்கிவிட்டால்
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
21-பிப்-202109:03:40 IST Report Abuse
Manian வெங்கடேசன், மதுரை: பிச்சைகாரன் கூட, நூறு ரூவா தாங்க என்று கேட்கிற காலத்திலே, 20% என்ன பெரிய காரியம் என்கிறார் ராமதாசு பிச்சைக் காரன் எவனது நல்ல சோத்து பொட்டத்தை அவிழ்த்து சாப்பிடுகிறானா? குப்பையிலேதானே எறிகிரான் அன்பு மணிக்கு இணைத்தலைவர் பதவி, பாஜாக்கா மூலம் அன்பு மணி மேலே உள்ள மத்திய பிரதேச மருத்துவ மாமூல் கேசை தள்ளுபடி பண்ணலாம்னு பாக்காறு புளிச்ச மாங்க வாங்க ஆளு இல்லேன்னும் மருத்துவருக்கு தெரியும் கூவிப் பாக்காரு கருப்பு எம்சிஆர் வாள் வீச்சு கூட வருமான்னு பாக்காறு ஆனா மச்சான் சுதீஷு வேற முதல்வர் கனவிலே இருக்காறே ராணி பிரேமு வேறெ சாமியாடுதே
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
21-பிப்-202108:50:54 IST Report Abuse
Manian தி.சே. அறிவழகன், திருப்புலிவனம் அந்து மணிசார் ,சசி கலாவின் இரண்டு கைகளின் சிறப்பை கம்பர் போல் உவமைப்படுத்துவதை ரசிக்க வேண்டும். "வாங்கிடும் கை ஒன்று, வாங்கினதை பங்கிடா முடக்கிய கை ஒன்று, ஆக்கமில்லா அக்ரகாரம் வரை ஆட்டுவித்த இரண்டுடையாள் சசி கலாவே சிறப்புறை காஞ்சியில் துஞ்சிய அன்பழகனார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X