உலகில், எவ்வளவு தான் உயர்ந்தவராக இருந்தாலும், அடுத்தவர் உதவி இல்லாமல் யாருமே வாழ முடியாது. நினைத்தது நிறைவேற வேண்டுமானால், கண்டிப்பாக, அடுத்தவர் உதவி தேவை. தாணுமாலய முனிவர் என்பவர், காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். தவம் மற்றும் தியானம் செய்வதுமாக, முனிவர்களுக்கு உண்டான நியம, நிஷ்டைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தார். பேகன் எனும் வேடர் ஒருவருடன், துாய்மையான நட்பு கொண்டிருந்தார், தாணுமாலய முனிவர். அவரின் துாய்மையான அன்பும், இனிமையான வார்த்தைகளும், வேடரின் மனதைக் கவர்ந்தன. முனிவரின் அன்பையும், இனிமையையும் அனுபவித்த வேடர், தானும், அவருக்கு ஏதாவது செய்ய விரும்பினார். காய், கனி, கிழங்கு ஆகியவைகளை எடுத்து வந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்தார். முனிவரும், வேடரும் நட்புடன் இருந்தது, அக்காட்டில் இருந்த மற்ற முனிவர்களுக்கு பிடிக்கவில்லை. 'என்ன அநியாயம் இது... இவரோ, தவம் செய்யும் முனிவர்; அவனோ, பறவைகளையும், விலங்குகளையும் கொல்லக்கூடியவன். அப்படிப்பட்டவனுடன், இந்த தாணுமாலய முனிவர் நட்பு கொள்ளலாமா... என்ன முனிவர் இவர்...' என்று, தங்களுக்குள் இகழ்வாக பேசிக் கொண்டனர். அவர்களின் இகழ்வான பேச்சு, தாணுமாலய முனிவரின் காதுகளிலும் விழுந்தது. ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை. வேடரும், மற்ற முனிவர்களின் பேச்சைக் கேட்டு, தன் நிலை மாறவில்லை. வழக்கம்போல், தாணுமாலய முனிவருக்கு, காய், கனி, கிழங்குகளை கொணர்ந்து, சமர்ப்பணம் செய்து வந்தார். அவர்களை கேலியாக பேசிய மற்ற முனிவர்களோ, காய், கனி, கிழங்குகளுக்காக பல இடங்களிலும் சுற்றித் திரிய வேண்டி இருந்தது. அது, அம்முனிவர்களின் தியான, தவங்களுக்கு உண்டான நேரத்தை குறைக்கவும் செய்தது. அந்த பிரச்னை இல்லாமல், நிம்மதியாக, தன் கவனத்தை தியானத்திலும், தவத்திலும் செலுத்தினார், தாணுமாலய முனிவர். அடுத்தவர்களின் உதவி இல்லாமல் யாரும் வாழ முடியாது என்பதையும், அன்பும், இனிமையும் நல்ல உதவியை தரும் என்பதையும் விளக்கும் கதை இது
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்! விஷ்ணுவை வணங்கி, வீடு திரும்பும்போது, லட்சுமி தேவியும் நம்முடன் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே, விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்பும் முன், அங்கே உட்காரக் கூடாது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
தனக்கு தேவையானதய் முற்றும் துறந்த முனிவன் தானே தேடவேண்டாமா ? அன்போடு வீடுனுக்கு முசிவர் ஆச்சிகள்மட்டுமே வழங்க வேண்டும் . நல்ல காலம் அவர் இப்போ இல்லை இருந்தால் அவர் உடுத்திய துணியை கூட திருடி போயிப்பார்கள் . பகுதிநேர திருடன் பத்தமடையான்
அட, தாணுமா முனிவர்க்கு பணிவிடை செய்யுற வேடன் விருமாண்டி மாதிரி தானே நானும் இருக்கேன் அன்பளிப்பாக மெர்சிடிஸ் கார் தந்து, "அண்ணே, நீங்க பல எடங்களுக்கு திறப்பு விழாவுக்கு போரீங்க, பளய டாட்டா நானோவிலே போனா ஒங்க மருவாதை என்னாகும்” அதுதான், ராமனுக்கு புஷ்ப விமானம் விபீஷணரு தந்தாருன்னு பௌராணிகர் புதுப்பேட்டை பூர்ணலிங்கம் சொன்னதிலே இருந்து எனக்கும் ஒங்களுக்கு சேவை செய்யணுமின்னு மனசிலே ஒரு பக்தி வந்திச்சு அதாங்க இது என் அளிப்பு ஏத்துகிட்டு ஆசி பண்ணுங்க என் தெய்வமே நீங்க அன்போட போடச் சொல்ற ரோடுங்களிலே நீங்க போகமாட்டீங்கன்னு அண்ணி சொல்லிச்சுங்க ஏங்க, மாமூலுக்கு இப்படியும் செய்யலாமேன்னு வழி சொல்ற மாதிரி இருக்கே என்று பூங்கோதை சொல்லிக் கொண்டே "அப்பா கிச்சன்" காபியை தந்தாள் ஏங்க இவினுக ரோடு காண்டிராக்டிலே அடிக்கற கொள்ளையிலே , ஒரு ஹெலிகாப்டரே வாங்கி தரலாமே கோதை, இறக்குமதி, வரிமான வரி கழுகும் கூடவே பறக்கும்னு பயம் இருக்கலாமே "க்கும்" என்று தோள்பட்டையில் இடித்துக் கொண்டே போய் விட்டாள் ஏன்? தாணுமாமலையர் செய்தது தவறா இல்லை. மந்திரி மலை முழுங்கி மருகால் மாறன் செய்ததா?
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.