'பள்ளி திறக்க இன்னும் பல மாதங்கள் ஆனாலும், என் மாணவர்களுடனான நினைவுகள் என்னை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும்' என்கிறார் கோவை, சேரன் நகரில் இயங்கும் சிறகுகள் மழலையர் பள்ளியின் தலைவர் மற்றும் ஆசிரியை பொ.தீபா ஆனந்த பிரியா.
அழகழகாய்... ஆனந்தமாய்...
தீபா: 'இடைவெளி அன்பை அதிகரிக்கும்'ங்கிற உண்மையை இந்த 'கொரோனா' காலம் எனக்கு உணர்த்தியிருக்கு! 'என்னை பார்க்காம நீங்க ஹாப்பியாவா இருக்குறீங்க மிஸ்?'ன்னு ஒரு செல்லப்பிள்ளை கேட்கிறான். 'வீட்டை விட்டு நீங்க வெளியே வந்தீங்கன்னா, ஸ்கூல் திறந்ததும் உங்களுக்கு ஊட்டித் தரவே மாட்டேன்'னு ஒரு வாண்டு அக்கறையா சொல்லுது. இந்த அன்புக்கு இணை ஏது?
ஆசிரியப் பணியில் தாயாக இயங்குவது சாத்தியமா தீபா?
'தாய்மை' குணத்தோட இயங்குற ஆசிரியர்களைத்தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும். இப்போ வீட்ல இருந்தாலும் குழந்தைங்க மனசு என்னைத் தேடுறதுக்கு காரணம், அவங்க என்கிட்டே உணர்ந்த தாய்மை உணர்வுதான். இந்த உணர்வு இருந்தா மட்டும்தான் குழந்தைகளுக்கு எதையுமே கற்றுக் கொடுக்க முடியும்!
இன்பம் பொங்கும் வேளை
* நான் பார்க்குறதை ஓரக்கண்ணால பார்த்து கண்களை அழுத்தி வராத கண்ணீரை வரவழைக்கிறது...
* தப்பு செஞ்சு மாட்டிக்கிட்டதும் லேசான பயத்தோட மழுப்பலா சிரிக்கிறது...
* 'வேணுமா?'ன்னு கேட்டு நான் 'ஆமா'ன்னு சொன்னதும், ரெண்டு மனசோட சாக்லேட்டை பகிர்ந்துக்கிறது...
இந்த குறும்புகளை விட, 'நான் நாளைக்கு பாட்டி வீட்டுக்கு போனேன்ல... அப்போ பச்சைக்கலர்ல மயில் பார்த்தேனே'ன்னு ஒண்ணு ஆரம்பிச்சா, 'நான் கூடத்தான் சிவப்பு கலர்ல மயில் பார்த்தேன்'னு பக்கத்துல இருக்குறது முடிக்கும். அந்த பொய்களால விலங்குகள் எல்லாம் வண்ணமாகி... ச்சோ... ஸ்வீட்!
கதை வழியே நல்வழி
'வீட்டுக்கு யார் வந்தாலும் பையன் பேசவே மாட்டேங்கிறான்'னு பெற்றோர் சொன்னா... அடுத்தடுத்த நாட்கள்ல அந்த சிறுவனுக்காக கதைகளை உருவாக்குவேன். அந்த கதைகளோட கதாபாத்திரமா அவனை மாற்றி, விருந்தாளிகளை வரவேற்கிற குணத்தை சொல்லிக் கொடுப்பேன்.
அடுத்த கதையில... 'ஒரு பையன் மாமா வீட்டுக்குப் போய், கதவை 'தட தட'ன்னு வேகமா தட்டாம 'டொக் டொக்'னு மெதுவா தட்டினான்'னு சொல்வேன். 'தட தட, டொக் டொக்' வார்த்தைகள் மனசுல பதியுறதால, கதவை தட்டும்போது அவங்களுக்கு 'டொக் டொக்' ஞாபகத்துக்கு வரும். கத்துக் கொடுக்குறதுல இது என் பாணி.
பெற்றோருக்கு செல்லமா ஒரு குட்டு
'வீட்டுக்கு வெளியேதான் சந்தோஷம் கொட்டிக்கிடக்குது'ன்னு பிள்ளைகளை நம்ப வைக்காதீங்க!