தேவையான பொருட்கள்:
கேரட் - 1
சர்க்கரை - 150 கிராம்
காய்ச்சிய பால் - 150 மி.லி.,
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் - 3.
செய்முறை:
கேரட்டை சுத்தம் செய்து, துருவி, ஆவியில் வேக வைக்கவும்; வெந்த கேரட்டுடன், சர்க்கரை சேர்த்து கிளறவும். பின் காய்ச்சிய பாலை சேர்க்கவும். கொதித்ததும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பொடித்த ஏலக்காய் போட்டு இறக்கவும்.
சுவை மிக்க, 'கேரட் பாயாசம்' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சுவைப்பர்.
- பழனீஸ்வரி தினகரன், சென்னை.