என் வயது, 67; புத்தக நிலையத்துடன், 'தமிழ் இல்லம்' என்ற பெயரில் வாசக சாலையும் நடத்துகிறேன்.
இங்கு வரும் இளைஞர்கள், சிறுவர்மலர் இதழை படித்தபின், சில நேரம் எடுத்துச் சென்று விடுவர். இதனால், சனிக்கிழமை காலை இதழ் வந்ததும் தவறாமல் வாசிக்கிறேன்.
இதில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி மிகவும் கவர்ந்துவிட்டது. முதியவர்களின் எண்ணங்களை, 'வீ டூ லவ் சிறுவர்மலர்' பகுதியில் பார்த்தபோது, என் மனதிலும் எழுதும் ஆசை துளிர்த்தது.
தமிழ் இல்லத்திற்கு வருபவர்கள், தவறாமல் சிறுவர்மலர் இதழை அமைதியாக புரட்டி, முழுமையாக படிப்பதை காண்கிறேன்.
என் போன்ற வயதானவர்களின் கருத்துக்களையும், சிறுவர்மலர் இதழில் பிரசுரிப்பதை சிறப்புக்குரியதாக எண்ணுகிறேன்.
சிறுவர்மலர் இதழ் சிறப்புற்று வளர வாழ்த்தும் வாசகர்களில் ஒருவனாக இணைகிறேன்.
- ஈ.ப.ஈஸ்வரவடிவு லிங்காலிங்கம், தேனி.