இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
00:00

நண்பரின் நல்லெண்ண முயற்சி!
எங்கள் பகுதியில், புத்தகம், 'கைடு' மற்றும் எழுது பொருட்கள் விற்பனையகம் வைத்திருக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். 'கடையில் பகுதி நேரம் பணிபுரிய, கல்லுாரி மாணவ - மாணவியர் இருவர் தேவை; தெரிந்த ஏழை பிள்ளைகள் இருந்தால் கூறுங்கள்...' என்றார்.
பகுதி நேர பணிக்கு, கல்லுாரி மாணவ - மாணவியரை தேர்ந்தெடுக்கும் காரணம் கேட்டேன்.
'உழைத்து, ஊதியம் ஈட்டியபடியே பயிலும் அவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதோடு, குடும்பத்திற்கும் உதவ முடியும். மேலும், வீண் பொழுதுபோக்குகளில் மனதை அலைபாய விடாமல், இங்கிருக்கும் புத்தகங்களை இலவசமாகவே படித்து, அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராக முடியும்.
'ஏற்கனவே, இங்கு பகுதி நேரம் பணிபுரிந்த ஆறு மாணவ - மாணவியர், அவ்வாறு படித்து, போட்டி தேர்வெழுதி, அரசு பணிக்கு சென்றுள்ளனர். அதனால் தான், கல்லுாரி மாணவ - மாணவியரை பணிக்கு அமர்த்துகிறேன்...' என்றார்.
தங்கள் தொழிலுக்கு உதவியாக ஆட்களை அமர்த்தி, அடிமை போல, வேலை வாங்குவோர் மத்தியில், வித்தியாசமானவராகவும், மனிதாபிமானியாகவும் விளங்கும் நண்பரின் செயலை மெச்சினேன்.
தெரிந்த, மாணவ - மாணவியரை அனுப்புவதாக உறுதியளித்தேன். மேலும், அவரது நல்லெண்ண முயற்சி தொடர வாழ்த்து கூறி வந்தேன்.
- சி. அருள்மொழி, கோவை.

காலி மனையில், பசுஞ்சோலைகள்...
எங்கள் தெருவில், 10 சென்ட் காலி மனை ஒன்றில், புதர் மண்டி, கருவேல மரங்கள் மட்டுமின்றி, இதர செடிகளும் இருந்தன; இதனால், விஷ பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக இருந்தது.
'காலி மனையை, வீணாக இப்படி போட்டு வைப்பதை விட, மனையின் உரிமையாளரிடம் பேசி, சுத்தப்படுத்தி, வேலி போட்டு வைக்கலாம் அல்லது காய்கறி, கீரை வகைகள், பயனுள்ள செடிகளை நடலாம்.
'அவரவர் சக்திக்கேற்ப உடல் உழைப்பால் பயிர் செய்து, வருகின்ற பலனை பங்கீட்டு அனுபவித்து கொள்வதோடு, இட உரிமையாளருக்கும் அவைகளை கொடுத்து உதவலாம். இடமும், தோட்டம் போல் காட்சியளிக்கும்; உடல் உழைப்பால் நாமும் உடற்பயிற்சி செய்தது போல் இருக்கும்...' என்றனர், பகுதி மக்கள். உடனே, மனையின் உரிமையாளரை அணுகினோம்.
'இந்த இடத்தில், நான் வீடு கட்டப் போவதில்லை. முதலீட்டுக்காக தான் வாங்கிப் போட்டுள்ளேன். சும்மா கிடக்கும் இடத்தை, பயனுள்ளதாய் மாற்றி அமைத்துக் கொள்வதில், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...' என்றார்.
தற்போது, அந்த இடத்தை சுத்தப்படுத்தி, காய்கறி மற்றும் கீரை வகைகளை விளைவித்ததன் மூலம், இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, நானும் பயன்பெறுகிறேன். வாசகர்களே... உங்கள் பகுதியில், காலி மனைகள் இருந்தால், முறைப்படி உரிமையாளரிடம் பேசி, பசுஞ்சோலைகளாக மாற்றி, நீங்களும் பயன் பெறுங்கள்!
— கே. ஜெகதீசன், கோவை.

வேலியே பயிரை மேயலாமா?
சென்னையில் நடந்த உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு, கோவையில் வசிக்கும் மகள் குடும்பத்தினரை பார்க்க, எழும்பூரில், எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன்.
இரவு, 10:00 மணிக்கு ரயில் கிளம்பியது. டி.டி.ஆர்., வந்து, டிக்கெட் பரிசோதித்த பின் துாங்கலாம் என்று காத்திருந்தேன். நேரம் ஆக ஆக, எங்கள் பெட்டியில் ஒவ்வொருவராக துாங்கத் துவங்கினர். நானும் பொறுமையிழந்து, விளக்கை அணைத்து, படுத்து விட்டேன்.
நள்ளிரவில், இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை போய் திரும்பும்போது, கண்ட காட்சி, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இளம்பெண் ஒருவர், மார்பு சேலை விலகியது தெரியாமல், 'லோயர் பர்த்'தில், அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்ததை, கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருந்தார், டி.டி.ஆர்., என்னை பார்த்ததும், சட்டென்று சுதாரித்து, 'எல்லாரும் டிக்கெட் காட்டுங்க...' என்றார்.
அகாலத்தில் எழுப்புவதால், ஆழ்ந்த துாக்கம் பறிபோவதோடு, நேரம் கடந்து, டி.டி.ஆர்., தங்கள் பணியை செய்ய முற்படுவது, வேலியே பயிரை தாண்டுவது போல் உள்ளது.
இவர்களை போன்ற, 'ஜொள் மன்னர்'களை பொறுப்புள்ள பதவியில் அமர்த்தும் முன், ரயில்வே நிர்வாகம், தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
- சி. ரகுபதி, திருவண்ணாமலை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-பிப்-202118:26:43 IST Report Abuse
Muthu விளக்கை அணைத்து விட்டு? அதுவும் ரயிலில்?
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
27-பிப்-202100:31:28 IST Report Abuse
Manian ஜெகதீசன்: இடத்தின் சொந்தக்காரர், எழுத்து மூலம் இது தற்காலிகமான உதவியே , நிலத்தை விற்கவோ , வில்லங்கம் செய்யவோ இல்லை என்று ஒரு பணி முப்படைந்த வழக்கறிஞர் மூலம் அதில் ஈடுபடுவர்களிடம் எழுத்து மூலம் ஸ்டாம்ப் பேப்பரில் நோட்டரி முன் கையெழுத்து வாங்க வேண்டும் ஜெயா அம்மா காலத்தில் , வீடு கட்ட மணல் கொட்ட மட்டும் 2 வாரம் தாங்க என்றவர்கள் 13/4 கிரண்வுண்டு நிலத்தையுமே தங்களது என்று சொந்தம் கொண்டாடியது உண்மையில் நடந்தது. "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்பது இதுவே சட்டம் கருணை காட்டாது இதென்ன எதிர் மறை விவகாரம் என்பவர்கள், வள்ளுவரின் "எண்ணித் துணிக கருமம் ..." என்ற குறளை படியுங்கள்
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
27-பிப்-202100:05:06 IST Report Abuse
Manian ரகுபதி: ஆண்கள் கண்கள் அலைவதை தடுக்கவே முடியாது. அது சமுதாய பார்வையில் தவறே என்றாலும், ஒரு பெண் படுக்கும் போது இயற்கை அது பற்றி கவலை படுவதாக தெரியவில்லை . அந்த டிடிஆர் செய்தது தவறே தன் தாயையோ, சகோதரிகளையோ மரபணு காரணமாக இப்படி கள்ளப் பார்வையால் பார்க்க மாட்டார் பூனை, நாய், சிங்கம் போன்ற எந்தப் பிராணியும் இந்த மரபணு மூலம் வரும் உடல் வாசனையால், உடல் உறவு கொள்வதில்லை மனிதனில் மனக்கோளாறு காரணமாக, தன் மகளையும் காமக்கண்ணால் பார்க்கும் தகப்பன்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள் இந்தியாவோ, தமிழ் நாடோ ராமராஜிய காலத்தில் இல்லை வன்னிய ராமதாசர் காலத்திலேயே இருக்கிறோம் பெண்கள் ரயிலில் தூங்கும்போது புடவை தலைப்பை ஒரு ஊக்கு பின்னால் தோள்படடை ரவிக்கையுடன் இணைத்து படுத்தால் இந்த வம்பு குறையும் சுடிதார் அணிந்து தூங்குபவர்களுக்கும் இதே கதிதான் . புடவைக்குமேல் ஒரு நைட்டி அணியலாம் , ஆனால் அங்கேயும் வம்புதான் ஆகவே, எந்தப் பதவியும் மனோநல ஆய்வு, நார்கோ டெஸ்ட்(உண்மை அறிதல் தணிக்கை) செய்த பின்னேதான் தரவேண்டும் ஆனால் 70-80 ஓட்டை விற்கும் மக்கள், 80% மாமூலர்கள் எங்கும் எறும்புகள் ஊர்வது போல் பரவி இருப்பதால், அதுவும் கனவே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X