* ஆர். கோபால், திருச்சி: மக்களுக்கு புரியாமல் பேசி, 'டார்ச்சர்' கொடுத்து வருகிறாரே கமல்? அதனால் தான் அவர் கட்சிக்கு, 'டார்ச்' சின்னம் கொடுத்திருக்கின்றனரோ, என்னவோ!
ஆர். கோவிந், கோவை: என் நண்பன் எப்போதும் சிடு சிடு என்று எரிந்து விழுகிறானே... ஒழுங்காக மலம் கழிக்கிறாரா எனக் கேளுங்கள்... நல்ல ஜீரண சக்தி உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்... மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறு ஆகிய இரண்டும் இல்லாதவர்களுக்கு, சிடு சிடுப்பு வராது!
* வி. ராஜா, சென்னை: ஓட்டளிக்கும் முன், வாக்காளர்களின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்? இவர்கள், லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி தருவரா என்ற சிந்தனை இருக்க வேண்டும்! ஆனால், கமல் கட்சி தான் இப்போதைக்கு நினைவில் வரும்; ஏனென்றால், இதுவரை அவர் ஆட்சியில் இருந்ததில்லை!
எஸ். மோகினி, தேனி: அதிர்ஷ்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன? அது, சோம்பேறிகளின் எண்ணம். இரும்பு இதயம் கொண்டோர், இந்த வார்த்தையை நினைத்துக் கூட பார்ப்பதில்லை!
* என். ராஜகோபாலன், கோவை:என் நண்பனிடம் நிறைய பணம் உள்ளது; ஆனால், அதனால், அவன் பெற முடியாதது எது? அறிவை பெற முடியாது! புகழையும், பொருளையும் பணத்தால் பெற்று விட முடியும். அறிவு இல்லாதவனிடம் பணம் தங்காது!
ஆர். நாராயணன், சென்னை: ஒரு மனிதன் எப்போது சிந்திக்கிறான்? தோல்வி ஏற்படும்போது சிந்திக்கிறான். சிந்தித்தால் திட்டம் கிடைக்கும்; அது கிடைத்து விட்டால் துணிவு கிடைக்கும்; அப்புறம் வெற்றி தானே!
கு. கணேசன், மறைமலைநகர்: கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதபோது என்ன செய்யலாம்? உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை மனதில் கொண்டு வாருங்கள்... கோபம் பறந்து போய் விடும்!
எம். கருணாகரன், தென்காசி: 'கொரோனா' காலத்தில், தமிழ் பட உலகம் எப்படி இருக்கிறது? முழுகுமோ அல்லது நீந்தி கரை சேருமோ என்ற நிலையில் இருக்கிறது...
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
என். ராஜகோபாலன்: பொதுவாக, சாகப்போர நேரத்தில், பிரசவ வலியில் துடிக்கும் பெண்கள் - என்கிறார் பணி மூப்பு ஆசிரிர் மங்களநாதர்- சாகும் போது, கிருஷ்னா,சங்கரா என்று படுக்கையில் சாகப் போகிறவர் கூப்பிடுவதை,” என்னா பக்தி" என்று கூறுவது தவறு அவருக்கு சாக விருப்பமில்லை, வரண்ட உலர்ந்த நாக்கு, தொண்டையை நனைக்க - குடிக்க தண்ணி கேக்குறான்னு ஆராய்ச்சியாள்கள் கண்டுள்ளார்கள். அவர்களுக்குக்கு அடிக்கடி தாகம் இருக்குமே ரத்தம் ஓட இளகிய நிலையில் இருக்க என்பதை மறந்து- எப்படி இருந்த அப்பா எப்படி துரும்பா மாறிட்டார் என்று புலம்பும் மகனைப் பார்த்து, அவர் தண்ணீர் கேட்டும் அதைப் புரிந்து கொள்ளாத போலி பட்டாதாரி மகனைப் பார்த்து "பெற்றாளே பெற்றாளே, போலி பட்டதாரியை" என்று மனதில் சபிப்பாராம் அதுக்கு பயந்தே மகனும் ஜெனரல் ஆசுபத்திரியில் பெற்றோறை தள்ளுவதாக மருத்துவர் மாங்குடி போலி கோட்டா டாக்டர் மருதமுத்து சொல்கிறார் செத்தவர்கள் வந்து நடந்த உண்மைகளை இது வறை சொல்லாது சரிதானே நாம என்ன திருந்தவா போறோம்?
வி. ராஜா, சென்னை: தற்போதைய 70-80 கிராமத்து மக்களுக்கு மந்திரிகளின் சிந்தனைகளே இருக்கின்றன-"மந்திரி அவரானல், நமக்கென்ன வரும் பொருள் -மாமூல் காசாக -ஓடதா பேஃன், ரேடியொ, பேசாத கைபேசி வேண்டாம்- என்பதை உரைத்தலே அதாவது அடுத்த எலக்ஷன் வரை -தண்ணி வாங்க, டூவீலர் வாங்க, நகரத்திலே டாக்டரு தட்சினை, புள்ளேங்களுக்கு தனியார் ஆங்கில-ஹிந்தி பள்ளி பீசு, உல்லாசப் பயண செலவு..." இதுக்கு எவ்வோ மாமூல் ஒரு ஓட்டுக்கு 100 ரூ புது நோட்டாக தருவாங்க என்ற சிந்தனையே 10% நகரத்து அரசாங்க வியாதி ஓட்டாளிங்களுக்கு: யார் ஆட்சிக்கு வந்தா, நம்ம மாமூலை கூட்டி, புது இடங்களுக்கு பட்டா வாங்கலாம் மீதி 10% : வரி ஏமாத்த, ஆபீசு சாமான்களை -பென்சில்,பேப்பர்,.. திருடி, கோயில் உண்டியலே ஒரு 5 ரூ போட்டா எல்லாரமே மன்னிக்கப்படும் என்பவர்கள், யார் ஆண்டா என்ன, நமக்கெதுக்கு வம்பு என்பவர்கள் ஆக, சிந்தனைகள் அவரவர் தட்டு இணைத்தை பொருத்தே
ஆர். கோபால்: கமல் கருணா நாயுடுவின் செல்லப்பிள்ளை ஆயிற்றே கருணா நாயுடு பேச்சைக் கேட்டவர்களுக்கு மட்டும் அடுக்கு மொழியில் பேசி மக்களுக்கு புரியாமல் பேசி, 'டார்ச்சர்' செய்ய வில்லையா? நண்பரின் தகவல் பதிப்பில் இருந்து "மாடி வீட்டில் பார்பனர் இருந்து(வாடகைக்கு என்பதை சொல்லாமல்), கோடி வீட்டு(பின் புர குடிசையில் இருக்கும் என்பதை சொல்லாமல்) குப்பனை் பார்க்கும் போது, சில பல காரணங்களுக்காக, அண்ணா வழியில் உல்லூக பட்டறை நாம் எதிர்கிறோம் என்றால், சங்க காத்தில் அவர் மட்டும் ஏன் சுராபானம் குடித்தார் என்று கேட்கும் உரிமை ஒவ்வொரு திராவிடக்கும் உண்டு என்பதை பணிவாக, ஆணித்தரமாக, திண்ணியாராக கூற கடமைப் பட்டிருக்கிரோம் கமல் அப்பனுக்கு தப்பாதவன் என்று இப்போதாவது புரிகிறதா ஓட்டுக்கு 3,000 ரூ கொடுத்தால் மக்களுக்குப் பொருளும் வரும், பொருளும் புரியும் அரசியல் முட்டாள்தனத்தை அவரது தொண்டர் ஒளி வட்டத்துக்காவது புரியவே "டார்ச்" குறி . டார்ச்சில் சக்தி வாய்ந்த பேட்டரி இல்லை என்பது அவருக்கே வெளிச்சம் அவரே நவீன பரமார்த்த குரு, அவர் தொண்டர்களை அதே பரமார்ந்த குருவின் நவீன சிஷ்யர்கள்
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.