செய்வது யாருக்காக?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
00:00

எல்லாரும் எதையாவது செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஒருவருக்கு பெயரும், புகழும் பொருளும் கிடைக்கிறது; மற்றவருக்கு கிடைப்பதில்லை. காரணம்...
அக்பரின் அரசவையில் இருந்தவர்களில் பெரும்புகழ் பெற்றவர், தான்சேன் எனும் பாடகர். அவர் பாடலைக் கேட்டு அனைவருமே மயங்குவர்.
ஒருநாள்-
'உன் பாட்டு... அடாடா அடாடா... சொல்லி முடியாது. ஆமாம், உன்னை விட நன்றாகப் பாடக்கூடியவர் இருக்கிறாரா, தான்சேன்?' என்றார், அக்பர்.
'என் குருநாதர், ஹரிதாஸ் ஸ்வாமி என்பவர் இருக்கிறார். என் பாட்டு, அவர் கால் துாசுக்கு ஈடாகாது...' என்றார்.
'அப்படியானால் அவரை அழைத்து, நம் அரசவையில் பாட ஏற்பாடு செய்யலாமே...' என்றார், அக்பர்.
'மன்னியுங்கள் மன்னா... அவர் பாடல், கண்ணனுக்காக... பேரும், புகழும் தேவையற்றவர். இங்கெல்லாம் வரமாட்டார்...' என்றார், தான்சேன்.
'பரவாயில்லை. அவர் இருக்குமிடம் தேடிப்போய் கேட்பதில் ஒன்றும் பிரச்னையில்லை...' என்ற அக்பர், மாறுவேடத்தோடு புறப்பட்டார்.
மன்னரை அழைத்து, குருநாதரின் இருப்பிடம் சென்றார், தான்சேன். ஆசிரமத்தின் வெளியே, அக்பர் மறைவாக இருக்க, தம்புராவுடன் உள்ளே நுழைந்தார், தான்சேன்.
'வாப்பா... வா...' என்று, மனதார வரவேற்ற குருநாதரை வணங்கி, 'குருநாதா... ஒரு பாட்டின் ராகம் சரியாக பிடிபடவில்லை. அறிந்து போகலாம் என்று வந்தேன்...' என்றார், தான்சேன்.
'சரி... நீ பாடு அதை. எங்கு சரியில்லை என்பதைப் பார்க்கலாம்...' என்றார், குருநாதர்.
தம்புராவை மீட்டி பாடத் துவங்கிய தான்சேன், ஓரிடத்தில், வேண்டுமென்றே தவறாகப் பாடினார்.
'இங்கு தான், இங்கு தான்... கொடு தம்புராவை, நான் பாடுகிறேன். நன்றாகக் கேட்டு, பதிய வைத்துக்கொள்...' என்று, தம்புராவை வாங்கி, கண்ணன் முன் சமர்ப்பித்து, தியானித்து, சுருதி கூட்டிப் பாடத் துவங்கினார்.
ஒரு சில விநாடிகளிலேயே, ஹரிதாஸ் ஸ்வாமியின் பாடலில் மனதைப் பறிகொடுத்து, மூர்ச்சித்து விழுந்தார், அக்பர். அக்பரின் முகத்தில் தான்சேன், தண்ணீர் தெளித்த பிறகே, சுயநினைவுக்கு வந்தார்.
பாட்டை நிறுத்தினார், குருநாதர்.
'தான்சேன்... உன் குருநாதரைப் போல, இவ்வளவு அழகாக உன்னால் பாட முடியவில்லையே; ஏன்?' எனக் கேட்டார்.
'மன்னா... நான் பாடுவது, பேருக்கும், புகழுக்கும். என் குருநாதர் பாடுவது கண்ணனுக்காக; தெய்வத்திற்காக மட்டுமே. அதனால் தான், அவர் பாடல் உயர்வாக இருக்கிறது...' என்றார்.
வேலை செய்து தான் வாழ வேண்டும். அதைத் தெய்வ சிந்தனையோடு, தெய்வத்திற்காக என்ற எண்ணத்தோடு செய்தால், மனம் தானே துாய்மையாகி விடும்...' என்பார், காஞ்சி ஸ்ரீமஹா சுவாமிகள்.
செயல்படுத்த முயல்வோம்; கண்டிப்பாக, தீண்டாது துயரங்கள்!


ஆன்மிக தகவல்கள்!
செவ்வாய்தோறும் முருகனுக்கு அரளிப்பூ மாலை சாற்றி, ஏழை குழந்தைகள் ஆறு பேருக்கு அன்னமிட்டு வர, சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

பி. என். பரசுராமன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
28-பிப்-202109:02:50 IST Report Abuse
Manian நல்ல காலம். சுவாமி ஹரிதாசர் அக்பர் இருந்த காலத்தில் இருந்தார் இப்ப இல்லை தான் சேன் பாடும் போது, ராகம், தாளம், சுவரம், சாஹித்யம் -கவிதை-பாடல் வரிகளைப் பாடினார். ஆனால், உணர்ச்சியை தட்டி எழுப்பும் ரஸபாவனை இல்லை இன்றும் ஒரு சிலர் சில சமயம் ஒரு பளீரென்று மின்னல் போல் ஒரு உணர்ச்சியைத் தூண்டும் ஒரு சில வார்த்தைகளை பாடுகிறார்கள். தியாகராஜர், புரந்தரதாசர், முத்துசாமி தீஷதர், மதுரை மணியைப் போல சங்கீதத்தில் ஒன்றாக இணைந்து தன்னை மறந்து பாடுவதில்லை ராஜரத்னம் பிள்ளை நாதஸ்வரத்தில் வரும் ஷண்முகப் பிரியாவில் அவர் கூட வரும் பெட்ரோமாக்ஸ் தூக்கி முதல், அந்த ஷண்முகன் வை எல்லோர் மனதிலும் மறுநாள் மதியம் வரை ஏன் "எண்டார்பின்" என்ற மயக்க ஹா்மோன் சுரந்து கொண்டே இருக்கிறது? கல்யாணியில் "தாஸ்யம் முதல் உற்சாகம்" வரை மூன்று ரஸம் உள்ளது என்று விரிவுறை நடத்தும் முனைவர்கள் இசைப் பேச்சாளர்கள், உதாரணமாக, பாபநாசம் சிவனின் கல்யாணி ராக "உன்னை அல்லால் வேறே கதி இல்லை.." என்று பாடும் போது, பல்லவி, அனுபல்லவி, சரணம் ஒவ்வொன்றிலும் ஏன் தனித் தனி உணர்வுகளையும் கூடவே தட்டி எழுப்பி, ஆனந்க் கண்ணீர் சிந்த வைப்பதில்லை? முனைவர்கள், தங்கள் பாட்டுக்கு ராயல்டி கேட்பவர்கள் கூட இதை ஏன் செய்வதில்லை விஞ்ஞானப் படிப்பு இல்லை என்றாலும்,இசை மேதை மதுரை மணி அய்யர், தரன என்று வல்லினகடுமையான உச்சிப்பை "லலல" என்று "மூக்கொலி "ந" பிறப்பிடம் சார்ந்து இணைத்துப் பாடினார்? மற்றவர்கள் தங்கள் குரு சொல்லிக் கொடுத்தை, பாடிவருகிறார்கள் ஏனென்றால் போதீக ஒலி விஞ்ஞானம், கணித உணர்ச்சி அலைகள், காதின் ஒலி மாற்ற முறைகள், மனாநிலை மாற்றங்கள் போன்றவற்றை இசையுடன் கற்பதில்லை,கற்பிக்கப் படுவதில்லை 1930களில் சர் சிவி ராமன் தோல் வாத்தியங்கள் -இரண்டு தோல்களால் மூடப்பட்ட மர பெட்டியின் உள்ளே ஒலி அலைகள் மோதி, சில பலம் இழத்தல்(filtered) , சில இணைந்த( Resonance) பலம் பெற்று ஒளிர்தல்(strong integrated melody) என்பவற்றை அந்த விஞ்ஞாண கணித ஸ்வரூபத்தை வெளியிட்டார் அது ஏன் போதிக்கப் படுவதில்லை 1970, "கம்பியூட்டரில் செயற்கை முறை வாத்திய சங்கீதம்" என்ற ஆராய்ச்சி கட்டுறையை -இசைப் பௌதீகம் -என்று மேல் நாட்டு ஆராய்ச்சி அடிப்படையில், இதுவரை அவருக்கு தெரியாத "ஓபோ - Oboe " என்பது முதல், வீணைவரை பாடவைத்ததை எத்தனைபேர்கள் அறிவார்கள் டெல்லி ஐபிஎம்-ஜெர்மன் தூதரக இணைந்து நடத்திய பேச்சில் 2 நாளும் :"கம்பியூட்டரும் கலைகளும் "என்ற தலைப்பில் அந்த அறிஞரை மட்டுமே (அவரைத் தவிர,வேறு யாருமே அப்போது இந்தியாவில் அதை செய்யவில்லை)1971 குமுத இதழ் கேலி சித்திரத்தில் கம்பியூட்டருக்கு வெற்றிலை பாக்கு தட்டை நீட்டி மரியாதை செய்வது போன்று காட்டினார்கள். இன்றைய செயற்கை நுண்ணறிவு முறையில், மதுரை மணி அய்யரின் "பாட்டு பாடல் அலை முறைகளை - " செயற்கை வா்திய இசையுடன் உயிர்ப்பிக்க முயற்ச்சி ஆரம்பித்தார் அது அவரோடு நின்று விட்டது. தற்போதய ரஷியாவில் கண்டு பிடித்துள்ள ஆதரஸ்ருதியே 80- 200 அலை வுகளே (fundamental frequency) மூளையில் உணரர்ச்சிகளை - பயம் முதல் -வீரம் வரை : அழுகுரல் (முகாரி போல), இரக்கம்(ஆசை முகம் மற்து போச்சே , யாரிடம் சொல்வனடி தோழி), ஏக்கம்தாபம் (என்ன கவி பாடினாலும் -ஆனையம்பட்டியார்), உற்சாகம், தயவு..(கல்யாணி)..போன்றவற்றை தூண்டுவதாக கண்டுள்ளார்கள். இன்றுள்ள தான்சேன்களை பட்டை தீட்ட எந்த விஞ்ஞான-சங்கீத பக்தி உணர்வு கறைந்த பஞ்சாமிருத ஹரிதாசரும் இல்லை என்பது பெரும் இழப்பே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X