தொலை துார பயணங்களில், பாட்டு கேட்பதற்கு பயன்பட்ட, 'ஹெட் செட்' எனப்படும், 'ஹேண்ட்ஸ் ப்ரீ' மொபைல் போனின் அங்கமாகி விட்டதால், எல்லார் காதிலும், எல்லா நேரமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.வைரஸ் தொற்று காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு களில், ஹெட் செட்டை மாட்டி, அதிகபட்ச சத்தத்துடன் வகுப்புகளை கவனித்த குழந்தைகள், இப்போது எல்லா நேரத்திலும், காதுகளில் மாட்டிக் கொள்ள பழகிவிட்டனர்.
வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாமல் கேட்பதற்கு இது பயன்படலாம். தொடர்ந்து, இது போல அதிக சத்தமாக காதிற்குள் வைத்து கேட்டால், உள் காதில் உள்ள மென்மையான நரம்புகள் பாதித்து, கேட்கும் திறனை இழக்க நேரிடும்.கேட்கும் திறன் இழப்பு ஒரே நாளில் நடந்து விடாது. பிரச்னை இருப்பதே முதலில் தெரியாது. அதிக சத்தத்தில் கேட்டு கேட்டு, குறிப்பிட்ட சத்தம் இருந்தால் மட்டுமே, கேட்பதை புரிந்து கொள்ள முடியும் என்றாகி, படிப்படியாக கேட்கும் திறன் குறைந்து, பிரச்னை இருப்பதை உணர்வதற்குள், முழுமையாக கேட்கும் திறனை இழந்து விடுவோம்; இதற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் ஆகலாம்.
பெற்றோர் செய்ய வேண்டியது...
பிறர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டியதன் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.நினைத்ததை சாதிக்க, இயல்பாக மற்றவர்களுடன் பழக, அடிப்படையான தேவை, ஆரோக்கியமான கேட்கும் திறன் தான் என்பது புரிந்தால், அவர்களாகவே எளிதாக தவிர்த்து விடுவர்.முழு சத்தத்துடன் கேட்க அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு குறைந்த ஒலியில் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறதோ, அந்த அளவு குறைந்த சத்தம் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம் கேட்க வேண்டிய அவசியம் இருந்தால், 10 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஓய்வு அவசியம். இப்படி, 60 சதவீத சத்தத்தில், 60 நிமிடங்கள் கேட்கும் போது, 600 வினாடிகள் ஆய்வு அவசியம். இதனால், 60 சதவீதம் காது கோளாறு களை வராமலேயே தவிர்க்க முடியும்.மீதி இருப்பதும் துவக்கத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம், எளிதாக குணப்படுத்தலாம்.
செவித்திறன் கருவிலேயே முழுமையாக வளர்ச்சி பெற்று விடும் என்பதால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கேட்கும் திறன் முழுமையாக உள்ளதா என்பதை, குழந்தை பிறந்த, 24 மணி நேரத்தில், எளிமையான பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும். பிறந்த குழந்தை, 12 - 14 மாதங்களில் சில வார்த்தைகளை சொல்ல ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்ற சந்தேகம் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காது கேளாமை பிரச்னை முதியவர்களுக்கு இருந்தால், 'டிமென்சியா' எனப்படும், மறதி நோய், மன அழுத்தம், நினைவிழப்பது போன்ற பிரச்னைகள் வரலாம். கண் பரிசோதனை செய்வதைப் போல, ஆண்டுதோறும் காதுகளை பரிசோதிப்பதும் அவசியம்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
கவலையை விடுங்கள் . உலகம் பூராவும் 25% இந்த செவி திறன் குறைவுடன் இருப்பார்கள் என்று நேற்றய ஆராய்ச்சி கட்டுறை ஒன்று கண்டுள்ளது. ஆகவே, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திய "சைகை" பாஷை வழக்கத்துக்கு வந்துவிடும் உதட்டசைவு கல்வி பயன் தரும். தற்போதுள்ள ஒலி மாசால், நாம் மனிதனிலிந்து, மோனிகளாக, முனிவர்களாவோம் அல்லு மரபணு செல்களை பாக்டீரியா மரபணு மூற்றம் கோக்லியாவின் உள்ளே பீச்சி (எப்படி ஓட்டை போடாமல் செய்வது என்ற ஆராய்ச்சி நடக்கிறது) இறந்த ஒலி மயிர் கற்றைகளை புதுப்பிப்பார்கள் அப்போது, ஏன்னு பொன்னு தாயி நீ மூச்சுவுடறது, பாம்பு புஸ்ஸனு சொல்ற மாதிரி இருக்கேன்னு சொல்ல, ஏங்க நீங்க வுடற கொறட்டை ரயிலு சங்கு ஊதற மாதிரி இருக்கே என்பார்களோ?
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.