சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
00:00

மனிதனையும், மற்ற உயிரினங்களையும் பணிய வைக்கும் ஓர் அருஞ்சாதனம், இசை. ஒவ்வொரு மனிதனின் மனோநிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும், அதன் நிகழ்வுகளையும், இசை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை பெற்றது.


இசை என்பது உணர்வுகளுக்குள் உயிர் வாழ்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், 'கலைமாமணி' ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்.வடவள்ளியை சேர்ந்தவர் ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்,82. எதிர்பாராத விதமாக, சிறு வயதிலேயே, பார்வை இழந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் சங்கீதம் கற்றார். விடாமுயற்சியால், சங்கீதத்தில் தேர்ச்சியடைந்து, வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கச்சேரி நடத்தியுள்ளார். 75 ஆண்டுகள் அவரது இசை வாழ்க்கைக்கு, மகுடம் சூட்டும் விதமாக, தமிழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்றுள்ளார்.


இதுகுறித்து, ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் நம்மிடம் பகிர்ந்தவை:எனது தந்தை பெரியசாமி; வேலுாரில் சப்-ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். நான், மூத்தவள்; ஒரு தம்பி, தங்கை உள்ளனர். எனது தந்தை, சங்கீதத்திலும், நாடகத்திலும் சிறந்து விளங்கினார். எனது ஐந்தாவது வயதில், பெரியம்மை நோய் தாக்கியது. அதில், எனது இரு விழிகளிலும் பார்வை முற்றிலும் பறிபோனது; பல சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை.பார்வையற்ற நிலையில் இருந்த எனக்கு, ஏழாம் வயதில், தந்தை, சங்கீதம் கற்றுக்கொடுத்தார். அதன்பின், நடேஷ் ஐயர், கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆகியோரிடம் சங்கீதம் கற்றேன். 8ம் வயதில், வேலுாரில் உள்ள பிள்ளையார் கோவிலில் முதல் அரங்கேற்றம் நடத்தினேன். தொடர் பயிற்சி விளைவாக, 11வது வயதில், விஜயவாடாவில் உள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பாடினேன். தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவையிலுள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'விலும் பாடினேன். 28வது வயதில், சேலத்தில் நடந்த கச்சேரியில் பாடினேன்.அக்கச்சேரிக்கு வந்திருந்த கணவர், என் இசையில் ஈர்த்து, திருமணம் செய்துகொண்டார்.


திருமணத்திற்கு முன்பு வரை, என் தம்பியும், தங்கையும், கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வர். திருமணத்துக்கு பின், கச்சேரிகளுக்கு கணவர் அழைத்துச் சென்றார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளேன். 1972ல், நெல்லை ஞானசம்பந்தி ஆதீனம் சார்பில், யாழ்ப்பாணத்தில் நடந்த கச்சேரியில், 'கானமிர்தவானி' பட்டம் பெற்றேன். தற்போது, தமிழக அரசின், 2020ம் ஆண்டு, 'குரலிசை கலைஞர்' என்பதற்கான 'கலைமாமணி' விருது பெற்றுள்ளேன்.நம்மிடம் குறை உள்ளதை நினைக்காமல், திறமையை கண்டறிந்து, முழு கவனத்தையும் செலுத்தி, விடா முயற்சி செய்தால், வெற்றி பெறலாம், என்றார் அவர்.நிஜம்தானே!

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
04-மார்ச்-202111:13:27 IST Report Abuse
Kalyan Singapore முப்பது வருடங்களுக்கு முன்னே திருச்சி அகில இந்திய வானொலியில் இவர் நிகழ்த்திய இசை கச்சேரியை கேட்டிருக்கிறேன் ( வானொலி என்னும் ஒரு மாதாந்திர பதிப்பில் .... கல்யாண சுந்தரம் என்ற பெயர் இருந்ததால் )நல்ல குரல் வளம். மனைவியின் கலைக்காக தன்னுடைய முழுநேரத்தையும் செலவிடும் கணவர் உடன் வாசிப்பவர்களை மிகவும் மதிக்கும் கணவரின் பண்பு பார்வை இல்லாவிட்டால் என்ன கணவரே இரு கண்களாக அமைத்துள்ளது இவரது பெரிய அதிர்ஷ்டம் நீடூழி வாழ்ந்து இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் . இவர் கணவருக்கும் எதாவது ஒரு விருது கொடுத்தால் மிகையாகாது
Rate this:
Cancel
kskmet - bangalore,இந்தியா
04-மார்ச்-202109:45:36 IST Report Abuse
kskmet கோபிசெட்டிபாளையம் ரத்னகுமாரி அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். விடா முயற்சி, தன்னம்பிக்கை இவைகளையே முதலீடாக வைத்துக்கொண்டு அவர் சந்தித்த சோதனைகளும் சாதனைகளும் வியப்புக்குரியவை. திரு மணியன் அவர்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் பாராட்ட தக்கவை. அவர் கணவரின் கொஞ்சமும் தளராத ஒத்துழைப்பு குடும்பத்தாரின் அரவணைப்பு ஆகியவை பாராட்ட தக்கவை மட்டுமல்ல பின்பற்ற வேண்டியவை. எல்லா வசதிகளும் இருந்தும் தான் முன்னேறாமல் இருப்பதற்கு மற்றவர்கள் காரணம் என்று கூறும் இன்றைய உலகில் எந்த குறைபாடும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சவால் விட்டு வெற்றியும் அடைந்த திருமதி ரத்னகுமாரி அவர்களுக்கு எனது வணக்கத்துடன் கூடிய மனமார்ந்த பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
03-மார்ச்-202114:19:55 IST Report Abuse
Manian இருக்கும் திறமையை முதலில் கண்டு கொண்டு, படிப்படியாக அந்த திறமைகளை வளர்த்தால் (ஒரே நாலில் இல்லை) இருபர்த்ரு வயதில் கோடிஸ்வறரனா இளைஞ்சர் ஒருவர் அமெரிக்காவில் உள்ளார் . குத்து சண்டையில் குத்தும் தொங்கு பையை முதல் தடவை குத்தும்போது நாம் நிலை குலைந்து கீழே விழுவோம். அடுத்த முறை வேகத்தை கருத்து குத்துவோம். இப்படி படிப்படியாக முதிர்ச்சி அடைந்தே குத்து சண்டை வீரணாவோம். ஆண்டவன் கருணையால், தந்தைக்கு இசை ஞஞ்னம் இருந்தது. மக்ளையிம் அந்த வழியில் இது படுத்தினார். இசை பாட இவருக்கு காதுத் திறமையும் கூர்மையாக இருந்து, மனதில் தாழ்மை உணர்வில்லாமல், விடா முயற்சியால் பாடலரசியானார். தந்தய் வழி காட்டி, ஆசிரியர்கள் பாதை போடா, இவர் தன திறமையால் அதில் பயணித்த பெரியம்மா . வணக்கத்து உறியவர் . வெறும் மனபடடம் செய்து நீட் தேர்வில் தேறாமல் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ளப்போகும் பெண்கள் , அவர்கள் பெற்றோர்கள் இவரிடம் கற்பார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X