யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2021
00:00

விரிவாக விளக்குகிறார் கோவை அரசு மருத்துவமனை டீன்

கோவை: 'இதற்காகத்தானே காத்திருந்தோம்' என்பது போல், இதோ கொரோனா தடுப்பூசி வந்து விட்டது! நம் நாட்டில் கடந்த, ஜன., 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி, துவங்கி நடந்து வருகிறது. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தடுப்பூசி குறித்த சில தவறான நம்பிக்கைகள், மக்கள் மத்தியில் வைரசை விட, வேகமாக பரவுகிறது. இது குறித்த நம் கேள்விகளுக்கு, உரிய விளக்கமளிக்கிறார் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா.

கொரோனா தடுப்பூசியை, யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டியது முக்கியம்?
கொரோனா தடுப்பூசியை போட எவ்வித தயக்கமும், பயமும் தேவையில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டியது அவசியம். அரசு வழிகாட்டுதலின்படி, முதலில் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது.
தற்போது, 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களில் சர்க்கரை, ரத்த அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஆதார் அட்டையை காண்பித்து போட்டுக்கொள்ளலாம்.

கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா?
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடம்பில், நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக உருவாகி இருக்கும். ஆனால் அது நிரந்தரமில்லை; தற்போது கொரோனா இரண்டாம் அலை என்றெல்லாம் வரும் நிலையில், மீண்ட உடனே போட்டுக் கொள்ளாமல், சிறிது தாமதமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது ?
கொரோனா சிகிச்சை பெறுபவர்கள், கடுமையான பிற தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், 18 வயதுக்கு குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில்லை. 45 முதல் 59 வரையுள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். தடுப்பூசியால் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனாலும், பிற இணை நோய்களால் ஏற்படும் பாதிப்பு, தடுப்பூசியால் தான் ஏற்பட்டது என்ற தேவையற்ற சிக்கல்கள் எழும். இதனால்தான், இணை நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளதற்கான மருத்துவ சான்றிதழ் பெறப்படுகிறது; இதனால் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

தடுப்பூசி போட்ட பின், எத்தனை நாள் கழித்து இரண்டாம் டோஸ் போட வேண்டும் ? எத்தனை நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்?
முதல் டோஸ் போட்டு, 29 நாட்கள் கழித்து எப்போது வேண்டுமானலும் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி, 45 நாட்களுக்கு பிறகே உடலில் உருவாகும்.

தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டியது அவசியமா ?
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க், சமூக இடைவெளி என்பது அனைவருக்கும் கட்டாயம். இப்பாதிப்பில் இருந்து முழுமையாக, நாம் அனைவரும் மீள, அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசியால் கோவையில், இதுவரை யாராவது பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனரா?
தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் ஒருவருக்கும் ஏற்படவில்லை. மருத்துவர்களாகிய நாங்களே இதனை போட்டுக்கொண்டுள்ளோம். தேவையற்ற மூடநம்பிக்கைகளை, கருத்துக்களை புறக்கணித்து தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரணமாக காய்ச்சல், அசதி போன்ற பக்கவிளைவுகள் வரவாய்ப்புள்ளது. இது, அனைத்து தடுப்பூசிகளுக்கும் பொருந்தும் என்பதால், பயம் கொள்ள தேவையில்லை.

பொதுவாகவே தடுப்பூசி அலர்ஜி உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படுமா ?
அலர்ஜி என்பது யாருக்கு ஏற்படும்; எதற்கு ஏற்படுகிறது என்பதை கணிக்க இயலாது. பிற மருந்துகளுக்கு அலர்ஜி உள்ளவர்கள், தடுப்பூசி போடக்கூடாது என்பது கிடையாது. குறிப்பிட்ட ஏதேனும் அலர்ஜி உள்ளவர்கள், தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். கொரோனா தடுப்பூசியால் எந்த பிரச்னையும் ஏற்படாது. பயப்படத்தேவையில்லை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
06-மார்ச்-202113:35:42 IST Report Abuse
Visu Iyer தடுப்பு ஊசி போட்டால் கொரநா வராது என்று ஏன் யாருமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள். பதிலை தான் யாரும் சொல்வதில்லை என்பது போ ல தோன்றுகிறதா.
Rate this:
06-மார்ச்-202116:04:50 IST Report Abuse
theruvasaganதடுப்பூசி போட்டாலும் கொரோனா வராது என்பதற்கு என்ன கேரண்டி என்று விதண்டாவாதம் செய்யும் பகுத்தறிவு கொழுந்துகள் கொரோனாவையே கூப்புட்டு தங்கள் மேல ஏறச்சொல்லி அதுக்கப்புறமா அதுங்கிட்டயே இந்த கேள்விய கேட்டு பதிலை தெரிஞ்சுக்கலாம்....
Rate this:
06-மார்ச்-202117:18:25 IST Report Abuse
ஆரூர் ரங்பிரேக் இருப்பதால் ஆகசிடென்ட் ஆகாமல் இருக்கிறதா? 😗😗ஆனால் குறைக்கப்படுகிறதே...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
07-மார்ச்-202113:55:39 IST Report Abuse
Visu Iyerஆரூர் ரங் - ,/// ப்ரேக் விபத்தை தடுப்பதற்கு அல்ல.. வண்டியை நிறுத்துவதற்கு... எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் என்று புரியாமல் பேசினால் என்ன செய்வது.. அது சரி..புரியவில்லை என்று தானே பேசுகிறீர்கள்.....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
07-மார்ச்-202113:57:03 IST Report Abuse
Visu Iyertheruvasagan - ,/// சரி..நீங்க சொல்றபடி பார்த்தால்... உயிருடன் இருந்தால் அரசுக்கு ஐந்து லட்சம் வரி கட்ட வேண்டும்.. இறந்து விட்டால் ஐந்து கோடி ரூபாய் குடும்பத்திற்கு கிடைக்கும்.. (அந்த பணத்திற்கும் வரி கட்ட தேவையில்லை) எது லாபம் என்று கேட்பது போல இருக்குதே.. உங்க ஐடியா நல்லாதேன் இருக்குது.....
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
06-மார்ச்-202108:47:32 IST Report Abuse
Balasubramanian Ramanathan அச்சத்தை கிளம்பிவிடும் அரசியல் வியாதிகளுக்கு மட்டும் இந்த ஊசியை வாயில் போடவேண்டும்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
07-மார்ச்-202113:58:22 IST Report Abuse
Visu Iyerஅவுங்க கிட்ட ஆதார் அட்டை இருக்குதுங்களா ......
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
06-மார்ச்-202108:31:49 IST Report Abuse
Darmavan ஆங்கில மருத்துவர்கள் ஒவ்வொருத்தரும் வேறு கருத்துக்களை சொல்வதால் பொதுமக்களுக்கு குழப்பம்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
07-மார்ச்-202113:59:02 IST Report Abuse
Visu Iyerகொரனாவை பற்றியே ஒவ்வொருத்தரும் ஒரு கருத்து சொல்றாங்க... பாவம் அவுங்க என்ன செய்வாங்க... கொரானா நீ யார் பெத்த பிள்ளையோ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X