தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 0.5 கப்
ஓமம் - 4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பீட்ரூட் கிழங்கை சுத்தம் செய்து, தோல் நீக்கி நறுக்கி வேக வைத்து அரைக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, ஓமத்தை நன்றாக கலக்கவும். அதனுடன், பீட்ரூட் கிழங்கு விழுதை சேர்த்து, முறுக்கு பதத்திற்கு பிசையவும்.
அந்த மாவை, ஓமப்பொடி அச்சில் பிழிந்து, கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சத்துமிக்க, 'பீட்ரூட் சேவ்' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர்.
- என்.சுமதி, சென்னை.