இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2021
00:00

'வாட்ஸ் - ஆப் குரூப்' இதற்கும் பயன்படுமே!
எங்கள் குடியிருப்பில் வசிக்கும் சிலர் அமைத்துள்ள, 'வாட்ஸ் - ஆப்' குழுவில் நானும், ஒரு உறுப்பினர்.
சமீபத்தில், நண்பர் அனுப்பியிருந்த குறுந்தகவலில், 'நம் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர், கடந்த ஆண்டுகளில், பல்வேறு சமூக பிரச்னைகளுக்காக போராடியவர். தற்போது, வயது மூப்பு காரணமாக, மனைவியோடு தனிமையில் வாழ்கிறார். அவரது ஒரே மகள், தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசிக்கிறார்.

'முதியவருக்கு, 80வது பிறந்தநாள். விருப்பம் உள்ளோர், நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்தலாம்...' என்று பதிவிட்டு, கைபேசி எண்ணையும் பகிர்ந்திருந்தார்.
நண்பரின் வேண்டுகோளை ஏற்று, முதியவரின் இல்லத்திற்கு இனிப்பு மற்றும் பழங்களோடு சென்றேன். என்னைப் போலவே பலரும், தங்கள் குடும்பத்தினரோடு வந்து, புது ஆடைகள், இனிப்பு, பழங்கள் கொடுத்து, அவரை திக்குமுக்காட வைத்தனர்.
தன், 80வது பிறந்தநாளை கொண்டாட, மகள் இல்லையே என்று வருந்தியவருக்கு, குடியிருப்பில் வசிக்கும் பலரும், மகன்களாகவும், மகள்களாகவும் இருந்து, அவரது பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், அதுவரை அதிகம் பழகியிராத பலரும் அறிமுகமாகியதில், நெருங்கிய நண்பர்களானோம்.
'வாட்ஸ் - ஆப்' குழு என்றாலே, ஏதோ பொழுது போகாதவர்கள் அரட்டையடிக்கும் தளம் என்றில்லாமல், இதுபோன்ற தகவல்களை பகிரவும் பயன்படும் என்பதை உணர்ந்தேன்.
எஸ். ஹரிகரன், சென்னை.

தேனீர் கடைக்காரரின் தெளிவு!
நண்பர் ஒருவர் தேனீர் கடை வைத்துள்ளார். சமீபத்தில், அவரை காண சென்றிருந்தேன். நலம் விசாரித்து, அவர் தந்த தேனீரை அருந்தியபடியே கடையை நோட்டமிட்டேன்.
கடையின் சுவரில், ஆங்காங்கே நகலெடுத்து ஒட்டப்பட்டிருந்த கையெழுத்து பிரதிகளைப் பார்த்து, அதுபற்றி கேட்டேன்.
'இது, தேர்தல் காலம். மக்களாட்சியின் மகத்துவத்தை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவும், வாக்காளர் ஒவ்வொருவரும், ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை உணரவும், பணம் வாங்கி, ஓட்டளிப்பதன் பின் விளைவை அறிந்திடவும், என் கைப்பட எழுதிய கருத்துக்களை, நகலெடுத்து ஒட்டி வைத்துள்ளேன்...' என்றார்.
அதிகம் படிக்காத தேனீர் கடைக்காரரே, இவ்வளவு தெளிவாக சிந்திக்கும்போது, மெத்தப் படித்தோர், தங்கள் ஓட்டுகளை பணத்திற்கு விலை பேசுவது சரியா?
வரும் தேர்தலில், கண்மூடித்தனமாகவோ, காசு வாங்கிக் கொண்டோ ஓட்டளிக்க எண்ணாமல், நாட்டின் நலன், எதிர்கால வளர்ச்சி குறித்து சிந்தித்து, ஓட்டளியுங்கள்.
அவசியம் அனைவரும், ஓட்டளிக்கும் கடமையை நிறைவேற்றுங்கள்.
ஆர். செந்தில்குமார், மதுரை.

வியக்க வைத்த பெண்!
நண்பனின் மகனுக்கு பெண் பார்க்க, நானும், மனைவியும் உடன் சென்றோம். பெண்ணை அனைவருக்கும் பிடித்து விட்டது.
எங்களை வணங்கி, 'என்னை, எல்லாரும் மன்னித்து, இரண்டு நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள்... கணவராக வரப்போகிறவரை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கும் உண்டு.
'என் பெற்றோரை ஒருபோதும் உதாசீனம் செய்ய மாட்டேன். அவர்கள் தேர்வு செய்யும் மாப்பிள்ளையை தான் மணந்து கொள்வேன். மாப்பிள்ளையை, எனக்கு பிடித்து விட்டது.
'ஆனால், இவர் அலுவலகம் முடிந்து, நேராக வீட்டிற்கு வருவதில்லை. இரவு, 7:00 மணி முதல் 9:00 மணி வரை நண்பர்களுடன் சீட்டு விளையாடுகிறார். அதோடு, மதுவும் - சிகரெட்டும் இவருக்கு துணை.
'மிகவும் சிரமப்பட்டு தான், இந்த தகவல்களை சேகரித்தேன். அத்தனையும் உண்மை. சிறிதளவும் பொய் இல்லை. எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டால் தான், இவரை திருமணம் செய்து கொள்வேன். இது, என்னுடைய திடமான முடிவு...' என்று கூறி, வீட்டுக்குள் சென்று விட்டாள்.
இப்படி பேசுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்பெண் சொன்னது முற்றிலும் உண்மை; எங்களால் மறுக்க முடியவில்லை.
அவளின் துணிச்சலையும், நேர்மையையும் கண்டு வியந்தேன். பெண் சமுதாயம் விழித்துக் கொண்டது! உஷார், ஆண்களே!
- எஸ்.பி.கன்னையா, மானாமதுரை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
07-மார்ச்-202119:47:08 IST Report Abuse
வழிப்போக்கன் பெண் நிராகரித்தது சரி - ஆனால் அது சற்று சினிமாத்தனமான முறையில் வெளிப்பட்டு இருப்பது நம்ப முடியவில்லை. பெண் (இது மார்ச் 8. ) தன்னிச்சயா முடிவெடுக்க நினைத்தது மட்டும் அல்லாது அதனை செயல்படுத்தியது வரவேற்க வேண்டும். உண்மையாக இருக்கும் பட்சத்தில். அதே நேரம் அந்த பெண்ணின் எதிர்பார்ப்பு தவறு - ஒரு ஆணுக்கும் அவனுக்கான SPACE. தேவை என்பதை நவீன பெண்கள் உணருவதில்லை. அதுதானே மாலை நேர "விளையாட்டுகள்" அது பார் ஆக இருக்கலாம், சீட்டாக இருக்கலாம் அல்லது ஏன் ஒரு RACQUET BALL. ஆட்டம் ஆக இருக்கலாம். இது பெண்களுக்கும் தேவை - இயல்பாக அது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கிட்டியது. அதுதானே மதியநேர ஒய்வு. சினிமா மேட்னி ஷோ என்பதே அவர்களுக்கு உருவான ஒன்று - அது பள்ளி மாணவர்களுக்கு என்று மாறியது வேறு விஷயம். இன்று பெண்கள் பணிக்கு சென்றுவிட்டு அதனை அந்த SPACE. ஐ அவர்களும் நாடுவதை - பார்க்கலாம் ஆகையால் இந்த பெண்ணின் எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும்
Rate this:
Manian - Chennai,ஈரான்
08-மார்ச்-202110:35:21 IST Report Abuse
Manianஅமெரிக்காவில் குடிப்பது அவர்கள் வழக்கம். இங்கிலாந்தில் பெண்கள் மொடா குடியர்கள் ஆனால் குடும்பம், குழந்தைகள் என்று வரும்போது அங்கே எப்படியும் வேலை செய்து (குறைந்த சம்பளம்தான் என்றாலும்)இருக்க முடியும் ஆனால் இந்த பெண் இந்தியாவில் அல்லவா இருக்கிறாள் வேலை கிடைக்குமா, இல்லை இவன் டாஸ் மார்க் கேசானு புரியாம எப்படி மணக்க முடியும்? மேலும் இவன் மன நலம் உள்ளவனா? குடித்து விட்டு அடிக்க மாட்டான் என்று சொல்ல முடியுமா? குடிக்க இன்னும் வரதட்சணை வாங்கி வா என்றால், நீங்கள் வந்து உதவி செய்வீர்களா? அவள் மனத்தில் இருந்த பயத்தை சொல்வது அவள் உரிமை இல்லையா? அமெரிக்க நாகரீகம் இங்கே பூரா பரவும் போது, உங்கள் சிந்தனை சரியாக இருக்கும். வேலை செய்யாமல் இருந்தாலும், மன அழுத்தம் உள்ளதால்(கிரியா ஊக்கி ஊதல், குடி மூலம் அதை தணிக்க முயலுகிறான் -அனுமானமே), சட்டப்படி இவனை நீக்க முடியாத போது நாள் பூரா இவனுக்கு ரிகியேஷன்தானே அப்ப தனியா குடி, புகை வேறு ஏன் வேண்டும் இவள் புத்திசாலி வருமுன் காப்போன்...
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
07-மார்ச்-202119:06:05 IST Report Abuse
.Dr.A.Joseph பாலர் பள்ளி தொட்டு தற்சமயம் வேலை பார்ப்பவர் வரையிலும் தனித்தனியாக குழு ஆரம்பித்து ஒவ்வொன்றிலும் இணைத்து கொள்கிறார்கள் .மறுக்கவும் முடியவில்லை .விலக்கவும் முடியவில்லை. சில முகங்களுக்காக . படிக்காமல் clear chart கொடுப்பது தினம் தினம் ஒரு கடமையாக உள்ளது.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
07-மார்ச்-202112:27:54 IST Report Abuse
Manian எஸ் ஹரிகரன், சென்னை: சிறந்த உபயோகமான கருத்து. ஆனால் தினமும் இவர்கள் மனித தொடர்பு - பேரன்-பேத்தி அன்பு வேண்டுமா என்று ஏன் யாராவது ஒருவர் கூட கேட்க வில்லை? இவர்களுக்கு உணவு தேவையா , சமைக்க உதவி தேவையா, பக்தி பாடல்கள், சுலோகங்கள் பாட வேண்டுமா? குழந்தைகளுக்கு அன்பாக கதை சொல்ல விரும்புகிரார்களா? தினமும் ஒரு மணி நேரம் எல்லோரும் வர வேண்டும் என்கிறார்களா? மருத்துவ, பேங்க்.. உதவி தேவையா? கோவிலுக்கு கூட வர வேண்டும் என்கிறார்களா? பெரிய பட்டியல் உள்ளதே ஆகவே ஒவ்வொரு வயோதிக தம்பதிகள் தேவையும் கேட்டு, இது போல் உதவும் தன்னார்வலர்கள் குழுக்களே தேவை இல்லையேல் ஒரு நாள் கூத்தாகாதா? கற்றதும், பெற்றதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X