திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2021
00:00

மார்ச் 8, சர்வதேச மகளிர்தினம்

நர்மதா வெளியீடு, சூரியகுமாரி எழுதிய, 'சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்' நுாலிலிருந்து
:
இந்தியாவில்...
* முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
* முதல் பெண் காங்கிரஸ் பிரசிடென்ட் - அன்னிபெசன்ட்
* முதல் முஸ்லிம் பெண் அரசி - ரஸியா பேகம்
* முதல் பெண் துாதர் - விஜயலட்சுமி பண்டிட்
* முதல் பெண் கவர்னர் - சரோஜினி தேவி நாயுடு
* முதல் பெண் மத்திய மந்திரி - ராஜ்குமாரி அம்ரித்கவுர்
* நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரசா
* முதல் பெண் விமானி - பிரேம் மதுார்
* முதல் பெண் விண்வெளி ஆராய்ச்சியாளர் - கல்பனா சாவ்லா
* எவரெஸ்டை அடைந்த முதல் பெண் - பச்சேந்திரி பால்
* ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - ஆர்த்தி சாஹா
* முதல் உலக அழகி - ரீடா பரியா
* முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி - கிரண்பேடி
* முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி - அன்னராஜம் ஜார்ஜ்
* முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - லீலா சேத்
* முதல் பெண் சுப்ரீம் கோர்ட் நீதிபதி - பாத்திமா பீவி
* முதல் பெண் வக்கீல் - கார்னிலியா சொராப்ஜி
* முதல் பெண் முதல்வர் (உ.பி.,) -
சுதேசா கிருபளானி
* ராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பிம்லா தேவி

ரா.வேங்கடசாமி எழுதிய, 'சரித்திரம் கண்ட ருசிகர சம்பவங்கள்' நுாலிலிருந்து:
ஜோன் ஆப் ஆர்க் எனும் வீராங்கனையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மதம் சார்ந்த போராளி.
தன், 17வது வயதில், பிரெஞ்சு படைக்கு தலைமை தாங்கி, இங்கிலாந்தை, ஆர்லியன்ஸ் பகுதியில், 1428ல், தோற்கடித்தாள். அவளது, 13வது வயதிலிருந்தே, ஏதோ ஒரு குரல், 'பிரான்ஸ் நாட்டின் அரியாசனத்தில் அமர வேண்டிய சார்லசுக்கு போய் உதவி செய்.
இது, கடவுளின் கட்டளை...' என்று, அடிக்கடி காதில் ஒலித்தது.
தனக்கு, கடவுள் இவ்வாறு கட்டளை இட்டுள்ளார் என்று, சிறுமி சொன்னால், யார் நம்புவர்... அதற்காக, இவள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா... இங்கிலாந்தை போரில் வென்று, சார்லஸ் மன்னனை அரியணையில் ஏற்ற வேண்டும்.
சார்லஸ் மன்னரை பார்க்கப் போவதாகவும், அதற்காக, ராணுவ பாதுகாப்பு தேவை என்றும், உள்ளூர் படைத்தளபதியிடம் தன்னை அழைத்துப் போகுமாறு, மாமாவிடம் கேட்டுக் கொண்டாள். அவரும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சார்லஸிடம் ஐந்தே நிமிடங்கள் தான், பேசினாள். பிரெஞ்சு படைகளை, அவளுடன் அனுப்ப, சம்மதித்து விட்டார், சார்லஸ்.
அவள் தலைமை தாங்கி நடத்திய போரில், பிரான்ஸ் வெற்றி பெற்றது. நியூ ஆர்லியன்சில் பெற்ற வெற்றியால் தொடர்ந்து அவள், பல பிரெஞ்சு நகரங்களை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்தாள். இன்னொரு பகுதி பிரிட்டிஷ் படையை, போட்டால் எனுமிடத்தில் தோற்கடித்தாள்.
'அவளிடம் சில அபூர்வ சக்திகள் உள்ளன. கடவுளின் ஆசி இருந்ததால் தான், அவளால் இப்படி திறமையாக போரிட முடிந்தது...' என்ற பேச்சு, மக்களிடையே பரவியது.
ஆனால், இந்த அபூர்வ சக்தி அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டதோ என்னவோ, பிரெஞ்சு நாட்டு படை வீரர்களில் இருந்த துரோகிகள், அவளை பிடித்து, பிரிட்டிஷ் ராணுவத்திடம் ஒப்படைத்தனர். அவள் மீது போடப்பட்ட வழக்குகளில், அவளுக்கு எதிராக, யாருமே சாட்சி சொல்லவில்லை என்பது தான் விசித்திரம்.
ஆனாலும், மே 30, 1431ல், அவள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டாள் என்கிறது சரித்திரம்.

நடுத்தெரு நாராயணன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
07-மார்ச்-202107:43:15 IST Report Abuse
Manian ஜோன் ஆஃப் ஆர்க்கு பிறந்தண்ணைக்கே, பரமனிடம் போய் சேரவேண்டிய நாளும் கூடவே சொல்லப் பட்டதே ஆனா, இப்போ இருக்குற அரசியல் வியாதிங்க கொரானா கூட்டியாரவா, இல்லை பல சிடன்ன வூடுளோட சொ்கத்திலே எல்லாமே எலவசமா தருவீங்களான்னு கேக்குரானுக எமதர்ம ராசாவே சித்ர குப்தரே- ஒருத்தன்னா, சொர்கத்திலே இருந்து காந்தி -இப்ப 301ஐ" கீழே தள்ளி இவினுக்கு கொடுக்க வழி பாக்கலாம். ஆன, கூடவே 5.65 கோடி ஓட்டை விக்குற கூலிப் படையும் இல்லே கூடவே வரும் அவ்ளோ பேருக்கும் ஓசி பிரியாணி, குவார்டரு தர, சூரினார் அட்சய பாத்திரம் தரமுடியாதுன்னுட்டாரே ஆகவே தற்போதய நகரமே நரகமாகி அவனுக அங்கேயே சாகட்டும் உத்திரவு தர்மராஜரே கொரானாசுரன் சம்ஹாத்தை அங்கே ஆரம்பிச்சுட்டாங்க
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
07-மார்ச்-202107:26:00 IST Report Abuse
Manian சர்வதேச மகளிர்தினம் - முதலில் பிள்ளை பெற்றதும் பெண்தானே இல்லாவிடடாள் மனித உலகமே இருக்காதே ஆகவே தேவிகள் என்றும் பிறந்து கொண்டே இருப்பார்கள் .ஆகவேதான் , பரமசிவனும் மனைவி பார்வதியை தன் இடது பக்கம் வைய்த்துகொண்டார் .வாதாடிச்சினை வாங்கிக் கொண்டுதான் அவ்வாறு செய்தார் என்று எந்த முனிவரும் எந்த வேதத்திலும் சொல்லவில்லையே அட ப்ரம்மா கூட சொல்லலையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X